டவுட்டு மக்கா டவுட்டு



கரண்ட கண்டுபிடிக்காத காக்கா குருவியெல்லாம் கரண்டு கம்பியில ஒய்யாரமா ஊஞ்சலாடுது...
கஷ்டப்பட்டு கரண்ட கண்டுபிடிச்ச மனுசனால ஆசைக்கு ஒருதடவ தொட்டுப்பார்க்க முடியுதா?

-000000-


ஈரோட்ல இருந்து கோயமுத்தூருக்கும், கோயமுத்தூர்ல இருந்து ஈரோட்டும் ஒரே தூரம்தான்....  
அதுக்காக இருட்டுல இருந்து வெளிச்சத்த பாக்குறதும், வெளிச்சத்துல இருந்து இருட்ட பாக்குறதும் ஒன்னா!!!!!!!????

-000000-


எப்பவோ கடிக்கிற சிங்கம் புலியை கூண்டில் அடைக்க தெரிஞ்சவனுக்கு தெனமும் கடிக்கிற கொசுவை கூண்டில் அடைக்கத் தெரியலையே


-000000-

 
இமாமி பேர்ணஸ் கிரீம் தமிழ் விளம்பரத்துல ஷாருக்கானுக்கான குரல் சகிக்கல,
டப்பிங் பேசின ஆள் அந்தக் கிரீமை பூசியிருப்பாரோ

-000000-

வராத மழைக்கு,  
பில்டப்புங்ற பேர்ல மண்ணை வாரி அடிக்கிற காற்றை எதால் அடிப்பது?

-000000-

ரெண்டு மீட்டிங் நடத்துனத்துக்கே அம்மாவுக்கு நாப்பது நாள் ஓய்வாம்,
அப்போ ஓய்வில்லாம சண்ட போடுற பதிவர்கலெல்லாம் க்ரேட் தானுங்களே?


-000000- 

குற்றத்தை நிரூபித்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்வேன்-உமாசங்கர்.(செய்தி)
நிரூபிக்கக் கூடாதா? அல்லது நிரூபிக்க முடியாதா?

-000000-


ஹீரோவோட நண்பனை வில்லன் கத்தியால குத்திட்டா, ஹீரோ கிறுக்கு தலைய தடவி வசனம் பேசுறானே தவிர, ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டுபோறதில்லையே, ஏன்

-000000-

எந்த அட்டுப் பட டைரக்டரும், டிவி பேட்டியில இதுவரை வராத வித்தியாசமான கதைங்கிறாங்களே, மன சாட்சிய மண்ண தோண்டி பொதைச்சிடுவாங்களா

-000000-

கோத்தபயா ராஜபக்சேவைக் கொலை செய்ய முயன்ற 3 பேர் இலங்கை போலீசால் கைது...(செய்தி)
கொல்லாம ஏண்டா விட்டீங்கன்னு கைது பண்ணியிருப்பாங்களோ!!!!

-000000- 

வடிவேலுவோட வட்டக்கெணறு, வத்தாத கெணத்துக்கும் இலவச மோட்டர் தருவாங்களோ!!!!???

-000000- 



அரட்டைகளில், "ம்ம்ம்.. அப்புறம் சொல்லுங்க / வேறென்ன" என்ற வார்த்தை வந்துட்டா, அதுக்கு மேல பேச உருப்படியா ஒன்னுமில்லதானே!!??

-000000-


யூத்துங்க யாராவது வயசானவங்க மாதிரி காட்டிக்கிறாங்களா?
வயசானவங்க மட்டும் யூத்து மாதிரி காட்டிக்கிறாங்களே... இது ஏன்!!!??
(விகடனில் வந்த ட்விட்)

-000000-

தமிழ்நாட்டுல ஒரு நாலு கோடி ஓட்டு இருக்குமா?
தலைக்கு 2000 ரூவா கொடுத்தாகூட மொத்தம் 8000 கோடி ரூவாதானே!!!

-000000-

யார் மேலேஷூவை வீசினாலும், வீசியவர் மேல் கோபம் வரவில்லை என்கின்றனரே ...  
இதை பெருந்தன்மைன்னு எடுத்துக்கிறதா?  
அல்லது சூடு சொரணையே இல்லாம போச்சுன்னு எடுத்துக்கிறதா?

-000000-




தண்ணீரை பனிக்கட்டியாக உறைய வைக்கலாம், பனிக்கட்டியைத் தண்ணீராக உருக்கலாம்....
அதுக்காக....  வெண்ணையை நெய்யாக உருக்கி, நெய்யை வெண்ணையாக உருமாற்றம் செய்ய முயற்சிக்கிற அலும்புக்கு என்ன பேர் வைக்கலாம்?

-000000-


பொறுப்பி:
டிவிட்டர், ஃபேஸ்புக்ல என்ன பண்றதுன்னு தெரியாம கிறுக்குனத வச்சு ஒரு இடுகை தேத்தியாச்சு.... ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது

____________________________

52 comments:

Anonymous said...

ஊருல வெயில் ரொம்ப அதிகமோ # அதே டவுட்டு :)

vasu balaji said...

இப்புடியெல்லாம் வேற கல்லாக் கட்டலாமா? தெய்வமே! நீங்க எங்கயுமே போகல:))

*இயற்கை ராஜி* said...

ம்ம்ம்.. அப்புறம் சொல்லுங்க / வேறென்ன

*இயற்கை ராஜி* said...

ஒருதடவ தொட்டுப்பார்க்க முடியுதா?
//


நீங்க தொடுங்க.. நாங்க பாக்கறோம்

*இயற்கை ராஜி* said...

அதுக்காக இருட்டுல இருந்து வெளிச்சத்த பாக்குறதும், வெளிச்சத்துல இருந்து இருட்ட பாக்குறதும் ஒன்னா//


அதெல்லாம் கண்ணு தெரியறவங்க கவலை.. நமக்கு எதுக்கு சாமி?

*இயற்கை ராஜி* said...

கொசுவை கூண்டில் அடைக்கத் தெரியலையே
//


எப்பவும் கடிக்கற உங்களயே எங்களால ஒண்ணும் பண்ண முடியல ... கொசுவை என்ன பண்ண முடியும்:-(

vasu balaji said...

ஓசி சாப்பாடுல ஆட்டைய போட்டீங்களா கதிர். இப்படி ஒரு கொலை வெறிக்கு என்ன காரணம்:))

*இயற்கை ராஜி* said...

அலும்புக்கு என்ன பேர் வைக்கலாம்?//


"கதிர்"ன்னு வைக்கலாமா?

vasu balaji said...

ஒரு ஓட்டுக்கு 5 கும்மிதான்:))

*இயற்கை ராஜி* said...

@வானம்பாடிகள்

சாப்பாடு வாங்கித் தர்றத ஏமாத்திட்டே இருக்கவருக்கு இந்த கொலைவெறியே ரொம்பக் கம்மிதான்

அன்பரசன் said...

//யூத்துங்க யாராவது வயசானவங்க மாதிரி காட்டிக்கிறாங்களா?
வயசானவங்க மட்டும் யூத்து மாதிரி காட்டிக்கிறாங்களே... இது ஏன்!!!??//

ஏன்னா யூத்துக்கு தெரியும் எப்படியும் நமக்கு வயசு ஆகதான் போகுதுன்னு. அதனால அவங்க வயசானவங்களா காட்டிக்க விரும்புரதில்லை.
ஆனா வயசானவங்களுக்கு தெரியும் எப்படியும் நாம யூத் ஆகபோறதில்லன்னு. அதனாலதான் அவங்க யூத்தா காட்டிக்க விரும்புறாங்க.

காமராஜ் said...

ஈரோடும்,இமாமியும் படு ஜோர் அது கலைவாணர்வகை நையாண்டி.உமாசங்கர் புரியல.

மொத்தத்தில். புது அயிட்டம். ருசியாக,சத்தாணதாக.

priyamudanprabu said...

nmadakkaddum nadakkaddum..

சத்ரியன் said...

//அலும்புக்கு என்ன பேர் வைக்கலாம்?//


"கதிர்"ன்னு வைக்கலாமா?//

இதுக்கெல்லாம் எதுக்கு கேள்வி? பெயர் சூட்டு விழாவ ஏற்பாடு செய்யுங்கப்பா சீக்கிரம்!

சத்ரியன் said...

//ஏன்னா யூத்துக்கு தெரியும் எப்படியும் நமக்கு வயசு ஆகதான் போகுதுன்னு. அதனால அவங்க வயசானவங்களா காட்டிக்க விரும்புரதில்லை.
ஆனா வயசானவங்களுக்கு தெரியும் எப்படியும் நாம யூத் ஆகபோறதில்லன்னு. அதனாலதான் அவங்க யூத்தா காட்டிக்க விரும்புறாங்க.//

அண்ணா, ஐ அப்ரண்டிஸ் யு!

(தமிழே தப்பு தப்பாதான் எழுதறேன், பேசறேன். இங்க்லிபீஸுல தப்பு வந்தாலும் வரலாம்... ஏன்னா எனக்கு இங்கிலிபீஷூ தெரியாது)

சத்ரியன் said...

//ரெண்டு மீட்டிங் நடத்துனத்துக்கே அம்மாவுக்கு நாப்பது நாள் ஓய்வாம்,
அப்போ ஓய்வில்லாம சண்ட போடுற பதிவர்கலெல்லாம் க்ரேட் தானுங்களே?//

இந்தப்பதிவ படிக்கிற எங்களயெல்லாம் கிரேட் -னு சொன்னா ஈரோட்டுல பாதி எழுதியா கேட்ற போறோம்?

இராகவன் நைஜிரியா said...

// கரண்ட கண்டுபிடிக்காத காக்கா குருவியெல்லாம் கரண்டு கம்பியில ஒய்யாரமா ஊஞ்சலாடுது... கஷ்டப்பட்டு கரண்ட கண்டுபிடிச்ச மனுசனால ஆசைக்கு ஒருதடவ தொட்டுப்பார்க்க முடியுதா? //

கரண்ட் கண்டுபிடிச்சவரு தொட்டு பார்த்தாரா இல்லையா? ## வரலாறு முக்கியம் இல்லையா?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இப்புடியெல்லாம் வேற கல்லாக் கட்டலாமா? தெய்வமே! நீங்க எங்கயுமே போகல:)) //

இதுக்கெல்லாம் குரு நீங்கதான் என்று சொல்றாங்க ## டவுட்டுதான்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
ஓசி சாப்பாடுல ஆட்டைய போட்டீங்களா கதிர். இப்படி ஒரு கொலை வெறிக்கு என்ன காரணம்:)) //

இடுகை கிடைக்காததுதான் காரணம்.. வேற என்ன?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
ஒரு ஓட்டுக்கு 5 கும்மிதான்:))//

அதெல்லாம் நாம பார்த்து செய்வது அண்ணே.. எத்தனை வேண்டுமானாலும் அடிச்சுக்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

// எப்பவோ கடிக்கிற சிங்கம் புலியை கூண்டில் அடைக்க தெரிஞ்சவனுக்கு தெனமும் கடிக்கிற கொசுவை கூண்டில் அடைக்கத் தெரியலையே //

இது ரொம்ப நல்ல கேள்வி... யாராவது பதில் சொல்லுங்கப்பூ

இராகவன் நைஜிரியா said...

// வராத மழைக்கு, பில்டப்புங்ற பேர்ல மண்ணை வாரி அடிக்கிற காற்றை எதால் அடிப்பது? //

தமிழ் நாட்டில் பில்டப்பு கொடுப்பது எல்லாம் சகஜமண்ணே?

இராகவன் நைஜிரியா said...

// வராத மழைக்கு, பில்டப்புங்ற பேர்ல மண்ணை வாரி அடிக்கிற காற்றை எதால் அடிப்பது? //

தமிழ் நாட்டில் பில்டப்பு கொடுப்பது எல்லாம் சகஜமண்ணே?

இராகவன் நைஜிரியா said...

// எந்த அட்டுப் பட டைரக்டரும், டிவி பேட்டியில இதுவரை வராத வித்தியாசமான கதைங்கிறாங்களே, மன சாட்சிய மண்ண தோண்டி பொதைச்சிடுவாங்களா? //

படத்துல கதையே இல்லாதப்ப... மனசாட்சி எப்படி இருக்கும்

இராகவன் நைஜிரியா said...

மீ 25

அப்பாடா வந்த வேலை முடிஞ்சுடுச்சு.. மீ எஸ்கேப்பூ

ராமலக்ஷ்மி said...

நல்லா இருக்குது தொகுப்பு:))!

Mahi_Granny said...

வாசிக்கிறவங்களுக்கும் பொழப்பு ஓடவேணும் இல்லையா .

வால்பையன் said...

வியாதி உங்களுக்கும் தொத்திகிச்சா!

என்னது நானு யாரா? said...

கதிர்! நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்றவங்களுக்கு ஐன்ஸ்டினின் வாரிசுன்னு பட்டம் கொடுக்கலாம்.

நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்ச்சி செய்து நீங்களே அந்த பட்டத்தை வாங்கலாம் இல்லையா? என்ன நான் சொல்றது?

நம்ப கடைபக்கம் வரணும்னு அன்புடன் அழைக்கிறேன். ரொம்ப நாள் ஆச்சி இல்ல?

venkat said...

கொசு கடியே பரவாயில்லைப்பா,
இந்த கடி தாங்கமுடில்லைபா .

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது

:)

தத்துவங்கள் எல்லாம்.. ஒரு இடத்தில்..

ஹேய் நல்லா நோட் பண்ணிக்கங்கப்பா..

Unknown said...

கொசுவைக் கூண்டிலடைக்கும் குசும்பு &
ராஜபக்சே கொலைமுயற்சி ரசித்தேன்.

பத்மா said...

நமக்கு இப்படிலாம் ஒண்ணும் தோண மாட்டேங்குதே
பொறாமையா இருக்கு சார்

ஹேமா said...

வந்த சந்தேகம்லாம் சரிதான் கதிர்.ஆனா ஏன் இப்பிடியெல்லாம் வருது சந்தேகம்!

Unknown said...

ஆஹா சூப்பர். எப்பிடிங்க இப்பிடி. நன்றிங்க. கூடிய சீக்கிரம் வானம்பாடி சார்இன் மத்தாப்பு அல்லது கதிருக்கு எதிர் வரும். பாப்போம். weekend அறுசுவை விருந்து. நன்றி.

Anonymous said...

நல்லா ரூம் போட்டு யோசிக்கறீங்க :)

பழமைபேசி said...

//
தமிழ்நாட்டுல ஒரு நாலு கோடி ஓட்டு இருக்குமா?
தலைக்கு 2000 ரூவா கொடுத்தாகூட மொத்தம் 8000 கோடி ரூவாதானே!!!//

வேடிக்கையாக, இருந்தாலும் இது வேதனையா இருக்கு....

மக்களே, வாங்குறதை நிறுத்தப் போறீங்களா? பல மடங்கு கூட்டப் போறீங்களா??

பழமைபேசி said...

//
தமிழ்நாட்டுல ஒரு நாலு கோடி ஓட்டு இருக்குமா?
தலைக்கு 2000 ரூவா கொடுத்தாகூட மொத்தம் 8000 கோடி ரூவாதானே!!!//

வேடிக்கையாக, இருந்தாலும் இது வேதனையா இருக்கு....

மக்களே, வாங்குறதை நிறுத்தப் போறீங்களா? பல மடங்கு கூட்டப் போறீங்களா??

VELU.G said...

இம்புட்டு டவுட்டா

எல்லாம் நல்லாயிருக்கு

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு கதிர் அண்ணா.
//ஈரோட்ல இருந்து கோயமுத்தூருக்கும், கோயமுத்தூர்ல இருந்து ஈரோட்டும் ஒரே தூரம்தான்....
அதுக்காக இருட்டுல இருந்து வெளிச்சத்த பாக்குறதும், வெளிச்சத்துல இருந்து இருட்ட பாக்குறதும் ஒன்னா!!!!!!!????//
ஆமா... எதை இருட்டுங்கிறீங்க... கோயமுத்தூரையா? ஈரோட்டையா?
(பத்தவச்சிட்டமில்ல.... ஹாஹா... ஹிஹி....ஹி)

கலகலப்ரியா said...

||அப்போ ஓய்வில்லாம சண்ட போடுற பதிவர்கலெல்லாம் க்ரேட் தானுங்களே?||

க்ரேட்தான்..

நிஜமா நல்லவன் said...

:))

சரண் said...

//ஆமா... எதை இருட்டுங்கிறீங்க... கோயமுத்தூரையா? ஈரோட்டையா?//

அண்ணன் கோயமுத்தூரத்தான் இருட்டும்பாரு.. என்ன பங்காளி இது கூடத்தெரியாம.. அதான் பேருலய ஈரோட்ட வெச்சிருக்கிறோமுல்ல..

Dev Aanandh said...

Arasiyal Pakkam Athigam Pogathinga Boss Aruvaloda thiriyuraingalam ...! ! !

Dev Aanandh said...

Arasiyal Pakkam Adhigam Pogathinga Boss Aruvaloda Thiriyuraigalam

Unknown said...

டிவிட்டர், ஃபேஸ்புக்ல என்ன பண்றதுன்னு தெரியாம கிறுக்குனத வச்சு ஒரு இடுகை தேத்தியாச்சு.... ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது


hehehehe :))

மாலுமி said...

ஐயா, முதல் தடவையா ப்ளாக் -ல கால் வைகிறேன்.
என்ன ஆச்சு.....
யாராவது எதாவது செஞ்சுடங்களா ???

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருக்கு :)

செல்வா said...

//டிவிட்டர், ஃபேஸ்புக்ல என்ன பண்றதுன்னு தெரியாம கிறுக்குனத வச்சு ஒரு இடுகை தேத்தியாச்சு.... ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது///

ஓடுனா சரி ..!!

Thamira said...

கிறுக்குனத வச்சு ஒரு இடுகை தேத்தியாச்சு.... ம்ம்ம் எப்படியோ பொழப்பு ஓடுது//

நல்லாதான் பொழப்பு நடத்துறீங்க.!

இவ்வளவு மொக்கை போடுற திறமையை வச்சிக்கிட்டு, வெறும் சம்முக விழிப்புணர்வுப் பதிவுகள் மட்டுமே போடுற உங்கள என்ன பண்ணலாம்.? :-))

சிவாஜி said...

அடடா.... அருமைங்க. பழச புரட்டிப் பார்த்த மாதிரியும் ஆச்சு... தொகுத்து வச்ச மாதிரியும் ஆச்சு... எங்க பொழுதும் போச்சு...