நேசிக்க நிறையக் காரணங்கள்
ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சிக்கான நேர்காணல் ஒளிப்பதிவில் கடந்த திங்கட்கிழமை கலந்து கொண்டேன். (நிகழ்ச்சி ஒளிபரப்பும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிகிறேன்.) இந்த நிகழ்ச்சியில் என் பங்கேற்பிற்கு மிக முக்கியக் காரணம் பதிவுல நண்பர்கள் ஆரூரன் மற்றும் உண்மைத் தமிழன். பதிவர் உண்மைத் தமிழனிடம் இதற்கு முன்பு ஒரு முறை சில நொடிகள் மட்டுமே கைபேசியில் பேசியிருக்கிறேன். ஆனாலும், நான் இந்த முறை சென்னை சென்ற போது என்னை பேருந்து நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்று, எல்லா உதவிகளையும் செய்து உபசரித்து அனுப்பிய நண்பர் உண்மைத் தமிழன் சரவணனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
நிகழ்ச்சி நிறைந்து, வானம்பாடிகள் பாலண்ணாவை சந்திக்கச் செல்லும் போது கடும் பசியில் வயிறு துடித்தது. அவருடைய அலுவலக அறைக்குள் நுழைந்த போது, குளிர்ச்சியான குடி நீரோடு சரவண பவன் சாப்பாடு தயாராக இருந்தது. பசிக்கும் நேரத்தில் எதிர்பாரமல் கிடைக்கும் உணவு அமுதமே. இந்த அன்பும், உபசரிப்பும் எனக்கொரு பாடம் என்றே சொல்ல வேண்டும்.
வஞ்சம், கோபம், குரோதம் போன்ற காரணங்களை புறந்தள்ளி, பதிவுலக நண்பர்களோடு நேசம் பாராட்ட பல காரணங்கள், தருணங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது மீண்டும் மீண்டும் மனதில் பளிச்சிடுகிறது.
------------------------
உறுத்தும் உணவு
சரவண பவனின் பார்சல் சாப்பாடு அருமையாகவே இருந்தது. ஆனாலும் சாப்பாட்டோடு கொடுக்கப்படும் சாம்பார், கூட்டு, ரசம், பாயாசம் என ஒவ்வொரு பதார்த்தங்களும் பிளாஸ்டிக் டப்பாக்களில் தருவதை ஜீரணிக்க முடியவில்லை. பசியும், வாங்கி வைத்த நண்பரின் அன்புமே அந்த உணவை அந்த இடத்தில் சாப்பிட வைத்தாலும், மனதுக்குள் நெருடிக் கொண்டேயிருந்தது, ஒரு வேளை சாப்பாட்டுக்கு நாலு பிளாஸ்டிக் டப்பாக்களை வீணடிக்க வேண்டியிருக்கே என்று. இதற்கான மாற்றுகள் மிக அவசரமாகப் புகுத்தப்பட வேண்டும்.
------------------------
சட்டம் யார் கையில்
போடிநாயக்கனூரைச் சொந்த ஊராகக் கொண்டிருக்கும், நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்ன தகவல், போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் முழுக்க முழுக்க பிளாஸ்டிக்குகளை தடை செய்திருப்பதாகவும். தற்போது போடி பிளாஸ்டிக் இல்லா நகரமாக இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களால் பின்பற்றப் படுகிறது. பிளாஸ்டிக்கு எதிராக சாட்டையை சொடுக்கும் அதிகாரிகள் வணக்கத்திற்குரியவர்கள். சட்டம் சரியாக இயங்கினால் எல்லாம் சாத்தியம் தான்.
------------------------
போலீஸ் Vs பன்றிக் காய்ச்சல்
காவல் துறையினர் இரவு நேரச் சோதனைகளில், வாகனம் ஓட்டுபவர் மது அருந்தியிருக்கின்றனரா என்பதை சோதிக்க வாயை ஊது என்று சொல்லும் பரிதாபமான போக்கே இன்னமும் இருக்கிறது. பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்கும் நபரின் வாயை ஊதச் சொன்னால், சொன்னவருக்கும் சங்குதான் ஊத வேண்டியிருக்கும். பாவம் இவர்களுக்கொரு விடிவுகாலம் வராதா?
------------------------
போடுங்கம்மா ஓட்டு!
இனிய நண்பர் கருவாயன் (எ) சுரேஷ் பாபு அவர்கள் PIT தளத்தில் மிகப் பிரபலமான புகைப்படக் கலைஞர் மற்றும் ஆசிரியர் என்பதை அனைவரும் அறிவார்கள். EPSON நிறுவனம் நடத்தும் இந்த வருடத்திற்கான சிறந்த புகைப்படக்காரர் போட்டியில் அவரையும் ஒரு வேட்பாளராக அறிவித்து, அவரது இரண்டு படங்கள் தேர்வாகியுள்ளன. அதுகுறித்த சுட்டி. புகைப்படத்தில் ஆர்வம் உள்ளவர்கள் சுரேஷ் பாபுவிற்கு வாழ்த்துகளையும் வாக்குகளையும் அளியுங்கள். வாழ்த்துகள் சுரேஷ் பாபு.
______________________
39 comments:
வாழ்த்துக்கள். ஜெயா டிவி காலை மலர் நிகழ்ச்சி பங்கேற்பிற்கு. என்றைக்கு ஒலிபரப்பப் போகிறார்கள் என்பதை தெரிவியுங்கள், ஆவலாக இருக்கிறோம்.பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக அட்டை கிண்ணங்கள் கூடிய விரைவில் எதிர் பார்க்கலாம்........ போலிஸ் நண்பர்கள் மீது உங்கள் அக்கரைக்கும் வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வுகள்.
குளிர்ந்த நீர் ப்ளாஸ்டிக் பாட்டிலில் இருந்திருக்குமோ என நினைத்தபடி வாசித்தேன். டப்பாவில் முடித்து இருக்கிறீர்கள். ம்ம். மாற்றுவழி வரட்டும்.
சுரேஷ் பாபுவுக்கு வாழ்த்துக்கள். அம்மாக்கள் மட்டும் போட்டால் போதுமா ஓட்டு? அய்யாக்களும் போடுங்க:)!
Nice post.
ப்ளாஸ்டிக் கிண்ணங்கள் உறுத்தல்தான் கதிர். அழகாக வாழையிலையில் தொன்னைகள் கிடைக்கின்றன. அலுமினியம் ஃபாயிலில் சுத்திக் கொடுக்கலாம். வாங்குகிற காசுக்கு அதிக நட்டமும் இராது.kutt
போற போக்குல பாலாண்ணன் வெறும் சைவச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாருனு சொல்லீட்டீங்க :)
சுரேசுக்கு என் வாழ்த்துக்களச் சொல்லீருங்க.
காலை மலர் என்னைக்கு ஒளிபரப்பாகுதுன்னு
சொல்லுங்க.
ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சிக்கான நேர்காணல் ஒளிப்பதிவில் கடந்த திங்கட்கிழமை கலந்து கொண்டேன். நிகழ்ச்சி ஒளிபரப்பும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிகிறேன்.
......மகிழ்ச்சியான செய்தி... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
http://en.wikipedia.org/wiki/Breathalyzer . இதை உபயோகித்துதான், இங்குள்ள காவல்துறையினர் கண்டு பிடிக்கின்றனர்.
டவுட்டு மக்கா டவுட்டு.
ஏங்க! பதிவு போடறவங்கள மட்டும் தான் டிவில பேட்டி எடுப்பாங்களா? அப்ப பின்னூட்டம் மட்டும் போட தெரிஞ்சவங்களுக்கு.
பின்னோட்டம் போட்டு delete பண்றவங்களுக்கு.
....
பின் குறிப்பு. அங்கயும் போய் அவங்க பேட்டிய மட்டும் பாரு அப்பு.
சுரேஷ் பாபுவுக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்..!
அடிக்கடி இப்படி பகிருங்க .
வாழ்த்துகள் கதிர்.
ப்ளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது மிக அவசியம். டெல்லியில் ப்ளாஸ்டிக் கவர்கள் ஒழிக்கப்பட்டு விட்டன.
நல்ல பகிர்வுகள்.
அடிக்கடி இப்படி பகிருங்க.
....மகிழ்ச்சியான செய்தி... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் கதிர்.
வாழ்த்துக்கள் கதிர் அண்ணா காலை மலரில் நீங்கள் வரப்போகும் நாளை தெரிவியுங்கள் மறக்காது
பசிக்கும் நேரத்தில் எதிர்பாரமல் கிடைக்கும் உணவு அமுதமே. இந்த அன்பும், உபசரிப்பும் எனக்கொரு பாடம் என்றே சொல்ல வேண்டும்.
கண்டிப்பாக நான் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது!!!
பகிர்தலுக்கு நன்றி!
இந்த இடுகை ஏன் திரைமணத்துல இருக்குங்க மாப்பு? திரைநட்சத்திரமும் ஆயிட்டீங்களோ??
இருக்கலாம்... இருக்கலாம்.....
நல்ல பகிர்வுகள்
வாழ்த்துகள் கதிர்
வாழ்த்துகள் சுரேஷ் பாபு
வாழ்த்துக்கள் கதிர்.கொஞ்சம் முன்னக்கூட்டி தகவல் தரவும். இந்த நொருக்குத்தீனி சத்தானதாக இருக்கிறது.இயற்கை வளம் ,மாசுகட்டுவ்ப்பாடு குறித்த உங்களின் தளராத ஈடுபாடு பற்றம்மிக்கிறது.இன்னொரு பாராட்டும் பிடிங்க.
போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் ,கருவாயன் (எ) சுரேஷ் பாபு இருவருக்கும் வாழ்த்துக்கள்..
//பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருக்கும் நபரின் வாயை ஊதச் சொன்னால், சொன்னவருக்கும் சங்குதான் ஊத வேண்டியிருக்கும்.//
:)) LOL!
நல்ல பகிர்வுகள்.. வாழ்த்துக்கள் கதிர் .. சுரேஷ் பாபுவுக்கும் வாழ்த்துக்கள்
உறுத்தும் உணவு - நல்ல சிந்தனை!
பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்ச்சி அவசரமான அவசியம்.
நானும் டீ குடிக்க போகும்போது பேப்பர் கப்புகளையே கேட்டு வாங்குகிறேன்.
போடி கமிசனருக்கு வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வுகள் அண்ணா...
பிளாஸ்டிக்.. ப்ச்... :-(..
போடி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்... நாமும் மாற முயற்சி செய்வோம்...
சுரேஷ் அண்ணாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்ங்க.. உங்களுக்கு, போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் மற்றும் கருவாயன் (எ) சுரேஷ் பாபுக்கு..
நீங்க கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒலிபரப்பானதும் சுட்டி கொடுக்கவும்..
வாழ்த்துகள் கதிர் அண்ணா.
வாழ்த்துகள் கதிர் :)
காலை மலர் வெளிவந்ததும் யூட்யூபில் ஏற்றி சுட்டி கொடுக்கவும் கதிர்
வாழ்த்துக்கள். ஜெயா டிவி காலை மலர் நிகழ்ச்சி பங்கேற்பிற்கு.
அண்ணே சென்னை வந்திருந்தது தெரியாமல் போய்விட்டது.. உங்களை சந்தித்து இருப்பேன்...
அண்ணே சென்னை வந்திருந்தது தெரியாமல் போய்விட்டது.. உங்களை சந்தித்து இருப்பேன்...
வாழ்த்துகளையும் அன்பையும் பகிர்ந்த நட்புகளுக்கு நன்றிகள்.
||இந்த இடுகை ஏன் திரைமணத்துல இருக்குங்க மாப்பு? ||
மாப்பு,
முதல் வார்த்தை ஜெயா தொலைக்காட்சி என்று வருவதால் திரைமணத்திற்கு சென்று விட்டது போலும்.
@@ கே.ஆர்.பி.செந்தில்
அவசரமான பயணம் மற்றும் முன்கூட்டியே திட்டமிடாததும் கூட
மன்னிக்கவும்
அடுத்த முறை வரும் போது சந்திக்க மிகப் பெரிய பட்டியலே இருக்கின்றது
எப்டியிருந்தாலும் 8 - 10 பவர் கட்... போட்டப்பெறவு யூட்யூப் லிங்க்கையும் சேர்த்து கொடுங்க...
ஆரூரன்//
தல.. இது நீங்க செய்த சதிதானா?:-)
//உண்மைத் தமிழனிடம் இதற்கு முன்பு ஒரு முறை சில நொடிகள் மட்டுமே கைபேசியில் பேசியிருக்கிறேன்//
அதனால தான் ஏமாந்திட்டாரு
//பதிவுல நண்பர்கள் ஆரூரன் //
தல நீங்களும்மா??? எப்டி தல நீங்க ஏமாந்தீங்க
//இந்த அன்பும், உபசரிப்பும் எனக்கொரு பாடம் என்றே சொல்ல வேண்டும்.
//
தெரிஞ்சா சரி.. குழும மக்களே.. நோட் த பாயிண்ட்
அன்பு நண்பர் கதிர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.. டிவி யில் அவரை பார்க்க மிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றேன்..
மேலும் அவருக்கு நான் நன்றி சொல்ல மிகவும் கடன் பட்டிருக்கின்றேன்...
அவர் எனக்கு அதிகமாக பழக்கம் கிடையாது .. இரண்டொரு முறை சந்தித்திருக்கின்றோம்..இருந்தாலும் என்னையும் மதித்து இந்த பதிவில் தகவல் தந்திருக்கின்றார் என்றால் அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு மறக்கமுடியாதது.. அதற்கு மிக்க நன்றி..
மேலும் படங்களுக்கு வாக்களித்த/வாக்களிக்கப்போகின்ற அனைவருக்கும் நான் மிக்க நன்றி சொல்ல மிகவும் கடமைபட்டிருக்கின்றேன்...
அனைவருக்கும் என் நன்றி..நன்றி..
-சுரேஷ் பாபு.
வாழ்த்துக்கள் கதிர்
இந்த பிளாஸ்டிக் இல்லாமல் மனிதகுலம் நீண்ட காலம் இருக்கத்தான் செய்தது, ஆனால் இப்போது அதை நிராகரிப்பது சமூகத்தின் கடமை. அதன் குரூரம் அறியாமல் வெறும் easy handly என்பதற்காக பழகினோம், நீண்டகாலம் நம் கைகளில் பழகிய துணிப்பையை தொலைத்தோம். மீண்டும் பரணிலிருந்து எடுக்கவேண்டும் அல்லது ஜவுளிக்கடைக் காரர்களாவது முதலில் துணிப் பைகளை மீண்டும் அளிக்கவேண்டும்.
Post a Comment