Dec 14, 2009

நினைவூட்டல் - பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம்

ஈரோட்டில் நடைபெறவுள்ள பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. மனதில் என்றும் நிழலாடும் சங்கமமாக அமைந்திட திட்டமிட்டு வருகிறோம். ஈரோடு பகுதியைச் சார்ந்த பதிவர்கள் சங்கமத்தை திறம்பட நடத்த ஒன்றிணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது
இடம்
பில்டர்ஸ் அசோசியேசன் ஹால்
(லோட்டஸ் ஷாப்பிங் பின்புறம், கலெக்டர் அலுவலம் அருகில், பெருந்துறை ரோடு, ஈரோடு)

அரங்கம் நகரத்தின் மையத்தில் இருப்பதால், எந்த திசையில் இருந்து வந்தாலும் மிக எளிதாக அடைய முடியும்

நாள் : 20.12.2009 ஞாயிறு
நேரம் : மாலை 3.30 மணி

நிகழ்ச்சி நிரல்:
சங்கமம் துவக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
பதிவர்கள் - அறிமுகம்
சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துரை

எழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல்
வலைப்பக்கத் தொழில் நுட்பம்

தேநீர் இடைவேளை

பதிர்வர்களின் முக்கிய கடமை
வாசகர்களின் எதிர்பார்ப்பு

கலந்துரையாடல்



மாலை 07.00 மணி
இரவு உணவு (சைவம் / அசைவம்)

அனைவருக்கும் சைவ, அசைவ உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். விழா அரங்கு, உபகரணங்கள், உணவுக்கான செலவுகளை சங்கம ஒருங்கிணைப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஈரோடு பகுதியைச் சார்ந்த பதிவர் வேறு யாராவது செலவுகளை பகிர்ந்து கொள்ள விழைந்திடின், என் அலைபேசி எண்ணுக்கோ, மின்னஞ்சல் முகவரிக்கோ தெரியப்படுத்தவும்.

ஒருங்கிணைப்பாளர்கள்
1. ஆரூரன்
2. வால்பையன்
3. ஈரோடு கதிர்

4. க.பாலாசி
5. வசந்த்குமார்
6. அகல்விளக்கு
7. கார்த்திக்

8. கோடீஸ்வரன்
9. நந்து
10. லவ்டேல் மேடி

11 .தங்கமணி

14. முருக.கவி

15. பீம்பாய்

கலந்துகொள்ளும் பதிவர்கள்:

1.பழமைபேசி
2. வலைச்சரம் சீனா
3. செந்தில்வேலன்

4. வானம்பாடி
5. நாகா
6. வெயிலான்
7. பரிசல்காரன்
8. ஈரவெங்காயம்

9. தேவராஜ் விட்டலன்
10. சுமஜ்லா

11. ரம்யா
12. நர்சிம்
13. தண்டோரா
14. பட்டர்பிளை சூர்யா

15. கேபிள் சங்கர்
16. குணசீலன்
17. இளையகவி
18. கும்க்கி
19. கார்த்திகை பாண்டியன்
20. ஸ்ரீதர்
21. முரளிகுமார் பத்மனாபன்
22. அப்பன்

23. அகநாழிகை வாசுதேவன்
24. ஈரோடு வாசி
25. சங்கவி
26. ஜெர்ரி ஈசானந்தா

சிறப்பு அழைப்பாளர்கள்
1. முனைவர். இராசு
2. க.சீ.சிவக்குமார்
3. தமிழ்மணம் காசி

கலந்துகொள்ளும் வாசகர்கள்
1. ஜாபர்
3. பைஜு
4. ராஜாசேதுபதி

(இதில் யாராவது வருவதாக உறுதியளித்து பெயர் விடுபட்டிருந்தால் அது என்னுடைய தவறு, தயவுசெய்து தெரிவிக்கவும். தயவு செய்து தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்)

உணவு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால், கலந்து கொள்ளும் பதிவர்கள், வாசகர்கள் தங்கள் வருகையை உடனே உறுதிப்படுத்தவும். தயவுசெய்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு...
வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037- 05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)

சங்கமம் சிறப்பாக நடைபெற உதவும்
திரட்டிக்கு நன்றிகள் ____________________________________________

48 comments:

நாடோடி இலக்கியன் said...

20ம் தேதி லைவ் கமெண்ட்ரி கொடுக்க வேண்டும் என்று சிங்கை யூசூன் பதிவர்கள் சார்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

vasu balaji said...

வாழ்த்துகள். (நினைவூட்டல் இல்லை. திரும்பவும்). முகவரிக்கு நன்றி

கலகலப்ரியா said...

சிர்ர்ரர்ர்ர்றப்பு/ பிரதம விருந்தினர்ன்னு தலைவி பேரு போடாதது கண்டித்து... இன்னிக்கே கூட்டத்ல இருந்து வெளிநடப்பு செய்யுறேன்... ப்ரியா வாழ்க.... தலைவி வாழ்க...! என்னுடன் சேர்ந்து என் கட்சித் தொண்டர்கள்... கதிர் உட்பட எல்லாரும் வெளிநடப்புச் செய்வார்கள்...! (நாளைக்கு மழையோ வெயிலோ வந்து ஏதாவது ஆனா.. அபசகுனமா சொல்லிப்புட்டான்னு சண்டைக்கு வரவங்களுக்கு இடுகை இட நான் தயார்..)

கலகலப்ரியா said...

//தயவு செய்து தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்//

ஆமாம்... என்னிய மாதிரி சட்டுப் புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க மக்கா...! இந்த வானம்பாடி மாதிரி வரும்.... ஆனா வராதுன்னு... இழுத்தா எதிர்க்கட்சித் தொண்டர்களுக்கு எவ்ளோ கஷ்டம்...

வால்பையன் said...

நான் இதை வழிமொழிகிறேன்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கண்டிப்பா வந்துவிடுகிறேன். முகவரிக்கு நன்றி.

க.பாலாசி said...

சிறப்புற நடத்துவோம்...

வானதி said...

முதன்முறையாக பதிவர் சந்திப்பில் பயனுள்ள விஷயங்களை பேசப்போகறீர்கள் என எண்ணுகிறேன்.
வாழ்த்துக்கள்.

தயவுசெய்து பதிவர் சந்திப்பினை drinkers' meeting போலக்கி விடாதீர்கள்.

மணிஜி said...

/முதன்முறையாக பதிவர் சந்திப்பில் பயனுள்ள விஷயங்களை பேசப்போகறீர்கள் என எண்ணுகிறேன்.
வாழ்த்துக்கள்.

தயவுசெய்து பதிவர் சந்திப்பினை drinkers' meeting போலக்கி விடாதீர்கள்/

?????????????

அப்புறம் இதுக்குமா மைனஸ் ஓட்டு?

வானதி said...

//தண்டோரா ...... December 14, 2009 8:26 PM

/முதன்முறையாக பதிவர் சந்திப்பில் பயனுள்ள விஷயங்களை பேசப்போகறீர்கள் என எண்ணுகிறேன்.
வாழ்த்துக்கள்.

தயவுசெய்து பதிவர் சந்திப்பினை drinkers' meeting போலக்கி விடாதீர்கள்/

?????????????

அப்புறம் இதுக்குமா மைனஸ் ஓட்டு?
//

எனக்கின்னும் ஓட்டுரிமை கிடைக்கவில்லை நண்பரே

butterfly Surya said...

வாழ்த்துகள்.

RAMYA said...

வாழ்த்துகள்! முகவரிக்கு நன்றி!!

குறும்பன் said...

எதுதெல்லாம் பரிமாற போறிங்கன்னு சொன்னா வசதியா இருக்கும். காடை,கவுதாரி உண்டா? ஈரோடு பக்கம் இந்த வகையான விருந்து சிறப்புன்னு கேள்வி. சைவ பிரியர்களுக்கு குசுபு இட்லி கிடைக்கும்ன்னு நினைக்கிறேன். OC, OM எல்லாம் உண்டா இல்ல Mc மட்டும் தானா?

முனைவர் இராசு சிறந்த கல்வெட்டறிஞர், தமிழறிஞர். கொங்கு மண்டலத்தை பற்றி நிறைய தெரிந்து வைத்திருப்பவர். காசி பற்றி தமிழ்மணம் பதிவர்களுக்கு தெரிந்திருக்கும். க.சீ.சிவக்குமார் பற்றி எனக்கு தெரியவில்லை. சங்கமம் முடிந்ததும் இவர்களை பற்றி இடுகை போடுங்க.

ஏன் ஹால்ல இருந்து ஏ/சி-ய எடுத்திட்டிங்க. இஃகிஃகி.

பழமைய நல்லா கவனிச்சுடுங்கப்பா.

சீமான்கனி said...

விழா சிறப்பாய் வர வாழ்த்துகள்.... அண்ணே

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது போல - நல்வாழ்த்துகள்

சங்கமம் வெற்றி பெற நல்வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

பதிவர் சந்திப்பு நன்கு நடை பெற வாழ்த்துகள்.

புலவன் புலிகேசி said...

அகல்விளக்கு ராஜாவிடம் முந்தைய நாள் தான் ஏற்பாடுகள் குறித்து கேட்டுக் கொண்டிருந்தேன்...சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

விழா சிறப்பாக அமைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. உங்கள் ஒவ்வொருவரின் பங்கேற்பும் தான் விழாவின் வெற்றியை உறுதி செய்யும். அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

V.N.Thangamani said...

எல்லா விபரமும் அருமைங்க .

தமயந்தி said...

வாழ்த்துகள்.

ரோஸ்விக் said...

நல்ல திட்டமிடல். எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

அண்ணாமலையான் said...

சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

கதிர், வந்துட்டேன், சாரி.

வாழ்த்துக்கள்... இனி வரும் பதிவர் சந்திப்புக்கு முன்னுதாரனமாய் செய்யுங்கள்...

பிரபாகர்.

நாகா said...

Done & will be there with Senthil..

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள்.

Unknown said...

நண்பரே நானும் எனது பங்களிப்புடன் கலந்து கொள்கிறேன்
அன்புடன்
தாமோதர் சந்துரு

முருக.கவி said...

விழா வெற்றி பெற வாழ்த்துகள்!
இதில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

தாராபுரத்தான் said...

பங்களிப்பபுடன் கலந்துகொள்கிறேன்,வணக்கத்துடன்,,

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா... இப்படி ஒரு வாய்ப்பு இன்னொரு முறை கிடைத்தால் நானும் கலந்துகொள்ள முனைகிரேன். ஆனால் இம்முறை முடியாது.. :(

சந்திப்பு சிறப்பாக நடக்கவும், அடுத்த நகர்வுக்கு வழிவகுக்கவும் உதவட்டும்.

வாழ்த்துக்கள்

தோழன்
பாலா

அகல்விளக்கு said...

சிறப்பாக நடத்துவோம்....

Sanjai Gandhi said...

வாழ்த்துகள்.. 28+28 டிக்கெட் செலவுக்கு மட்டும் காசு குடுங்க.. வந்துடறேன்.. :)

Sanjai Gandhi said...

//சிர்ர்ரர்ர்ர்றப்பு/ பிரதம விருந்தினர்ன்னு தலைவி பேரு போடாதது கண்டித்து.//

லகலகப்ப்ரியா, அதான் சிறப்பு ’பிரதமர்’ விருந்தினர் போறாரே.. உங்களுக்கும் சேர்த்து அவரே சாப்டுவார்.. கவலை வேண்டாம். :)

பார்வைகள் said...

வலைப் பதிவர் மற்றும் வாசகர்கள் சங்கமம் ஈரோடையில் நடைபெறும் செய்தி அறிந்து மகிழ்ந்தோம். நிகழ்வு வெற்றிபெற நல்வாழ்த்துகள்.
-முனைவர் தி.நெடுஞ்செழியன்
ஆசிரியர்,www.tamilthinai.com
தமிழ் இணைப்பேராசிரியர்
ஏவிசி கல்லூரி, மயிலாடுதுறை.

சக்திவேல் said...

சங்கமம் திறம்பட செயல்பட வாழ்த்துக்கள்... ஒன்றிணைவோம்... நாம்,,,,

Unknown said...

//

சஞ்சய்காந்தி said ,

வாழ்த்துகள்.. 28+28 டிக்கெட் செலவுக்கு மட்டும் காசு குடுங்க.. வந்துடறேன்.. :) //



தல நீங்க 28 ரூவா குடுத்து லோக்கல் பஸ்சுல வர்றதா .......??!!!??

உங்குளுக்கு 85 +85 குடுத்து ஏசி பஸ்சுல வரவெக்குறோம்....

priyamudanprabu said...

வாழ்த்துகள்

*இயற்கை ராஜி* said...

சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்..

*இயற்கை ராஜி* said...

கலந்துகொள்ள(கொல்ல) முடியலியே..:‍((

Kasi Arumugam said...

ஏற்பாடுகளும் பட்டியலும் பாத்தா பிரமிப்பா இருக்கு அசத்துங்க நண்பர்களே. நேரில் பார்க்கலாம்.

Kasi Arumugam said...

♠ யெஸ்.பாலபாரதி ♠ said... //சந்திப்பு சிறப்பாக நடக்கவும், அடுத்த நகர்வுக்கு வழிவகுக்கவும் உதவட்டும்.//

தம்பி, மூணு வருசமா அடுத்த கட்டத்துக்கு நகத்தியும் இன்னுமா நகரலை? ;-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு பெரிய கட்சி மாநாடு மாதிரித் தடபுடலான அறிவிப்புக்கள்,பலருடைய பதிவுகளில் செய்திகள் தவிர, தமிழ்மணம் முகப்பிலும் பானர் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ஈரோடு பதிவர்கள்-வாசகர்கள் சம்கமத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

என்னுடைய கருத்தாக ஒன்றை முன் வைக்க விரும்புகிறேன்!

எழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல் என்பதை ஒரு மையக் கருத்தாக, நிகழ்ச்சி நிரலில் சேர்த்திருப்பதைப் பார்த்தேன்.

எழுதுவதில் தயக்கம் எல்லாம் ஆரம்ப நிலைகளில் தான்! ஆரம்பித்து விட்டால்,எப்போது நிறுத்தப்போகிறார் என்று விசிலடித்து நிறுத்ததுகிற வரை ஓய மாட்டோம் என்பது நமக்கே தெரியும். அதைச் சொல்வதில், நம்முடைய கருத்தை, பதிவுகளாகவோ, பின்னூட்டங்களாகவோ சொல்லும் போது, எப்படி மென்மையாக, எவரது மனமும் புண்படாத விதத்தில் சொல்வது என்பதையுமே சேர்த்துச் சொல்ல முடிந்தால் உண்ணும் பயனுள்ளதாக இருக்கும்.

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/d591523ece379a28?pli=1

http://www.chinadaily.com.cn/world/2009-02/04/content_7446244.htm

இந்த இரண்டு சுட்டிகளையும் கொஞ்சம் படித்துப் பார்த்தால், இணையத்தில் அதிகமாகி வரும் வன்முறைப் பேச்சு, பின்னூட்டங்கள், மனச் சோர்வுக்கு உள்ளாக்குதல் என்று நம்மை அறியாமலேயே, நாமும் ஒரு காரணமாகிவிடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதும் கூட அவசியமான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது.

அடுத்து, புதிதாக எழுத வரும் பதிவர்கள், ஏகப்பட்ட விட்ஜெட்டுக்கள் தவிர பின்னூட்டங்களில் நமக்குத் தெரியாமலேயே உள்ளே நுழைந்து மொத்த வலைப்பதிவையுமே முடக்கிவைத்துவிடுகிற சூழ்நிலை, அதில் இருந்து எப்படிப்பாதுகாத்துக் கொள்வது, பேக் அப் செய்துகொள்ளும் விதம் குறித்தும் கொஞ்சம் அறிமுகம், குறிப்புக்கள் கொடுத்தால், உதவியாக இருக்கும்.

இவ்வளவு தடபுடலாக ஏற்பாடெல்லாம் செய்கிறீர்கள்! அப்படியே நிகழ்ச்சிகளை வீடியோப் பதிவுகளாகவும், வழக்கமாக யூட்யூபில் பத்துப் பத்து நிமிடங்களாகக் குறுக்கிப் போடுகிற மாதிரி இல்லாமல், Veoh Player வழியாக இன்னும் கொஞ்சம் அதிக நேரம் பார்க்கக் கூடிய காணொளிகளாகக் கிடைக்கிற மாதிரியும் செய்து விட மாட்டீர்களா என்ன!

வாழ்த்துக்கள்!

Unknown said...

விழா சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

N.Ganeshan said...

நானும் வருவதாகத் தெரிவித்திருந்தேன். ஆனால் பெயர் விடுபட்டிருக்கிறது. விழாவில் சந்திப்போம்.

என்.கணேசன்

ஹேமா said...

ஒன்றுகூடலும் நினைவூட்டலும் சிறப்புற என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

Naanjil Peter said...

விழா வெற்றி பெற வாழ்த்துகள்!
அமெரிக்காவில் இருந்து என் நண்பர் பழமை பேசி வருகிறார்.

நாஞ்சில் பீற்றர்

☀நான் ஆதவன்☀ said...

சபாஷ்! மாபெரும் சந்திப்பு :)

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் கதிர் :)

இனியன் பாலாஜி said...

அடுத்து எங்கே ?எப்போ?

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...