வெளுத்த வானம் சுமக்கும் மௌனம்
பசி கொண்ட மிருகமாய் வறட்சி
நம்பிக்கை நூலில் சிக்குண்டு
நகரும் நாட்களோடு விவசாயி...
-0-
இடைவிடாத அடைமழை
வற்றிப்போன வாடிக்கையாளன் வருகை
திறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்
கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...
-0-
காற்றில் வரும் சாம்பார் வாசம்
களித்துச் சிரிக்கிறது விழித்த பசி
மீந்து போன உணவுகளோடு விழும்
எச்சில் இலைக்காக பிச்சைக்காரன்...
-0-
பசி கொண்ட மிருகமாய் வறட்சி
நம்பிக்கை நூலில் சிக்குண்டு
நகரும் நாட்களோடு விவசாயி...
-0-
இடைவிடாத அடைமழை
வற்றிப்போன வாடிக்கையாளன் வருகை
திறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்
கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...
-0-
காற்றில் வரும் சாம்பார் வாசம்
களித்துச் சிரிக்கிறது விழித்த பசி
மீந்து போன உணவுகளோடு விழும்
எச்சில் இலைக்காக பிச்சைக்காரன்...
-0-
-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
32 comments:
//நம்பிக்கை நூலில் சிக்குண்டு
நகரும் நாட்களோடு விவசாயி...//
வறுமையின் ஆற்றில் எதிர் நீச்சலடித்தபடி...
//திறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்
கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...//
மழை வேண்டி வறண்டிருக்கும் மண் குவியலாய்...
//மீந்து போன உணவுகளோடு விழும்
எச்சில் இலைக்காக பிச்சைக்காரன்...//
பசியின் விளிம்பில் தொங்கிகொண்டிருக்கும் விடையில்லா கேள்வியாக...
கவிதை அருமை என்பதைவிட எழுத்தாளுமை என்று சொல்வதே சிறந்தது.
100/100 அருமை!
//இடுகை பற்றிய//
அது!
//வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.//
ஒப்புதலை அமுக்க வேண்டும்... ஒப்பமுக்குங்கள்! இஃகிஃகி!!
எனக்கு மூன்றாவது மிகவும் பிடித்தது..மூன்றாவது ஓட்டை போட்டேன்
எனக்கு பிடித்த யதார்த்த கவி தண்டோரா அண்ணன் சொன்னது போல் யாவும் அருமை.
//கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...
//
//களித்துச் சிரிக்கிறது விழித்த பசி//
மிகவும் அற்புதமான வரிகள்...
ஓட்டும் போட்டாச்சு.....
பிரபாகர்.
//மீந்து போன உணவுகளோடு விழும்
எச்சில் இலைக்காக பிச்சைக்காரன்...//
வார்த்தைக்கோர்வை...
நன்றி @@ பாலாஜி
(பின்னூட்டமும் கவிதையாக)
நன்றி @@ பழமைபேசி
(ஒப்பமுக்கியதற்கு நன்றி மாப்பு)
நன்றி @@ தண்டோரா
(வாக்குக்கு நன்றி)
நன்றி @@ பிரபா
(வாக்குக்கு நன்றி)
நன்றி @@ அகல் விளக்கு
ஒவ்வொருவரும், ஒவ்வொன்றுக்காய் காத்திருக்கிறோம்.
காத்து,காத்து......
வார்த்தைகள் இல்லை. ஏற்றுக்கொள்வீர்
http://ngprasad.blogspot.com/2009/08/blog-post_04.html
தண்டோராக்காப்புறம் நல்லாருக்கு கதிர் என்ற என் பின்னூட்டத்தைக் காணாமல் காத்திருக்கிறேன்.
நன்றாக இருக்கிறது கதிர்.
நன்றி @@ ஆரூரன்
(காத்திருப்போம், வேறென்னங்க செய்ய)
நன்றி @@ குரு
(தங்கள் அன்பிற்கு இதயம் நிறைந்த நன்றிகள் குரு)
நன்றி @@ வானம்பாடிகள்
(அண்ணா, நானும் தான். ஆனால் வரலையே அண்ணா)
ஈரோட்டில் வசிக்கும் "வார்த்தை நெசவாளியே" பின்னுகிறீர்கள்.
காத்திருத்தல் ..கவி வரிகள் அழகு .
உங்கள்க்விதைக்காக் காத்திருக்கிறோம். நன்றி.
கதிர் சும்மா புகுந்து விளையாடி இருக்கீங்க வார்த்தைகளோடு. கவிதையை படித்து முடித்து நீண்ட நேரம் கனத்த மனதுடன் வெறுமனே உட்கார்ந்திருந்தேன். அருமை அருமை. வாக்கு பதிந்த கையோடு...
ரேகா ராகவன்.
கதிரின் இன்னொரு நெஞ்சை உருக்கும் படைப்பு.
எடுத்துக்கொண்ட விசயத்திற்குள் உங்கள் வார்த்தை விளையாட்டு அசத்துகிறது. தொடருங்கள்.
நன்றி @@ ஜெரி
(வார்த்தை நெசவாளி - ரசித்தேன்)
நன்றி @@ அசோக்
நன்றி @@ நிலா
நன்றி @@ ராகவன்
(மனது கனத்ததை கௌரவமாக கருதுகிறேன்)
நன்றி செந்தில்
(தொடரும் பாராட்டே என்னை உந்துகிறது செந்தில்)
முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -3
//திறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்
கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...//
aaha super
//கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...//
//பசி கொண்ட மிருகமாய் வறட்சி//
உவமைகள் அருமை கதிர்....
நல்ல கவிதை..... இரசித்தேன்.
// இடைவிடாத அடைமழை
வற்றிப்போன வாடிக்கையாளன் வருகை
திறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்
கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்... //
நாட்டுல பஞ்சம் வராத ஒரு விசயம் இதுதான், இப்ப அதுக்கு கூட பஞ்சமா? அடக் கடவுளே.
நன்றி @@ காமராஜ்
நன்றி @@ வசந்த்
நன்றி @@ மாதவராஜ்
நன்றி @@ சந்ரு
நன்றி @@ பித்தனின் வாக்கு
(கவலைப்படாதீங்க வெட்டாப்பு விட்டா பஞ்சம் முடிஞ்சுரும்)
ஒவ்வொரு வரியும்.. அருமை..! பிரமாதம் போங்க..! (தாமதமாக வந்ததுக்கும்.. தாமதித்த வாக்குக்கும் மன்னிச்சிடுங்க..)
நன்றி @@ பிரியா
(என்ன பெரியவார்த்தையெல்லாம் சொல்லிட்டு)
நன்றி @@ ஸ்ரீ
லேட்டா வந்தாலும் ஒரு நல்ல கவிதை படித்த திருப்தி!
பாராட்டுகள் கதிர். விகடன் தலைவாசலில்
http://youthful.vikatan.com/youth/Nyouth/kathir01102009.asp
தேர்ந்தெடுத்த முத்துக்களாய் ஒவ்வொரு கவிதையும் ஆனால் எல்லாம் உண்மை வலியறிந்து கோர்த்து இருக்கிறீர்கள் வார்த்தையை....
நன்றி @@ தேவன் மாயம்
நன்றி @@ பாலா அண்ணா
(இப்பொழுதுதான் பார்த்தேன்)
நன்றி @@ பிரியமுடன் பிரபு
நன்றி @@ தமிழ்
அருமை நண்பா
நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்
வாழ்க்கை வலிகள்,ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி........
Post a Comment