தொடரும் மீறல்கள்


தவறுகள் நிகழ்வதற்கான முக்கிய காரணமாக இருப்பது அதனை ஒட்டிய தேவையா? அல்லது எளிதாக கிடைக்கும் வாய்ப்புகளா?

மேலோட்டமாக பார்க்கும் போது, தேவை என்பதாக தோன்றினாலும், பெரும்பாலும் வாய்ப்புகள்தான் தவறுகளை ஊக்குவிக்கிறதோ என்றும் தோன்றுகிறது.

சிக்னல்களில், ஒரு வழிப் பாதையின் நுழைவுகளில் நிற்கும் போக்குவரத்துக் காவலருக்கு பயந்து போய்த்தான் விதிமுறைகளை பெரும்பாலும் கடைப் பிடிக்கிறோம். எவ்வளவு அவசரமாக இருப்பினும் காவலர் நிற்கும் போது, பிடிபட்டு விடுவோம் எனப் பயந்துதான் அதை மீற மறுக்கிறோம். அப்படி மீற மறுக்கும் சிக்னல்களில், நுழைய மறுக்கும் ஒரு வழிப்பாதைகளில், போக்குவரத்துக் காவலர் இல்லாத போது, யாரோ ஒருவர் கடக்கும் போது அவரைப் பின் தொடர்ந்தோ அல்லது நாமாகவோ சீக்கிரம் கடந்து விடலாம் என்று போவது, ஒரு போதும் மனதில் குற்ற உணர்வாகத் தோன்றுவதேயில்லை.

வாங்கும் சம்பளம் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு போத வில்லையென்ற காரணத்திற்காக ஒருவர் லஞ்சம் வாங்குவதாக தெரியவில்லை. தான் அதிகாரமிக்கவர் என்ற காரணத்தினாலும், லஞ்சம் கேட்டால் கொடுப்பதற்கு மனிதர்களும் இருப்பதாலேயே, நிறைய சம்பாதித்தாலும் இன்னும் முறை தவறிய வகையில் சம்பாதிக்க எளிதான வாய்ப்பாக, தான் வகிக்கும் பதவி அமைவதாலும், ஒரு மனிதன் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் சர்வ சாதாரணமாக லஞ்சம் பெறுகிறான்.

சிக்னலை மதிக்காமல் கடந்து அல்லது ஒரு வழிப்பாதையில் திடீரென புகுந்து இன்னொரு வாகன ஓட்டியை நிலைகுலையச் செய்பவன் என்றுமே அதற்காக பெரிதாக வருத்தப் படுவதில்லை.

இன்னொருவனின் வயிற்றில் நூதனமான முறையில் அடித்துப் பிடுங்கப்பட்ட பணம் என்றாலும், அதற்காக ஒருபோதும் அவன் வருத்தப்படுவதில்லை.

"என்ன நான் மட்டுமா இப்படிச் செய்கிறேன். எல்லோரும் தானே இப்படிச் செய்கிறார்கள். அவர்கள் நிறுத்தட்டும் அப்புறம் வேண்டுமானால் நானும் நிறுத்துகிறேன்" என்ற சொத்தைச் சமாதானம் மிக எளிதாக எல்லோரிடமும் விரவிக்கிடக்கிறது.

சிக்னலை முறை தவறித் தாண்டி பிடிபடும் போது, ஒரு வழிப் பாதையின் பாதியிலோ பிடிபடும் போது அல்லது லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபடும் போது மட்டுமே தான் செய்த காரியம் தவறு என்று உரைக்கிறது.

மாட்டுவதற்கு முந்தைய நிமிடம் வரை தவறில்லை என்று நினைத்திருந்த ஒரு செயல், மாட்டிக்கொள்ளும் விநாடியிலிருந்து தவறு என்று புதிய பரிணாமம் கொள்கிறது.

தேவை என்பதையும் தாண்டி, எளிதாக கிடைக்கும் வாய்ப்பும், அதனால் எந்த தண்டனையும் கிடைத்துவிடாது என்ற புத்திக்கூர்மையின் அடிப்படையில் எழும் அசட்டு நம்பிக்கையும் தான் தவறுகள் தோன்றுவதற்கு பெரும்பாலும் காரணங்களாக இருக்கின்றன.


சரி இதற்கான தீர்வு...

சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும் என்ற ஒரு கூற்று. சில கோணங்களில் இது சரியாக இருந்தாலும். சட்டங்கள் என்பது மனிதனால் மனிதனுக்காக ஏற்படுத்தப் பட்ட ஒன்று. மனிதனால் உருவாக்கி மனிதனால் கையாளப்படுவதால் சட்டம் சில நேரங்களில் இளகத்தான் செய்கிறது.

பிடிபட்டு விட்டால் மட்டும் அது தவறு, பிடிபடாதவரை அது தவறாக இருப்பதில்லை என்ற முரண்பட்ட மனோநிலை சிதைந்து, இன்னொரு மனிதனை ஏதோ ஒரு வகையில் பாதிக்கச் செய்கிற எல்லாமே அடிப்படையில் தவறானது என்ற எண்ணம் வலுவாக வரவேண்டும். அந்த எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒழுக்கமாக உருவெடுக்கும் வரை, மீறல்கள் தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.






-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

34 comments:

சந்தனமுல்லை said...

/பிடிபட்டு விட்டால் மட்டும் அது தவறு, பிடிபடாதவரை அது தவறாக இருப்பதில்லை என்ற முரண்பட்ட மனோநிலை சிதைந்து,/

சூப்பர்!!

Raju said...

சரிதான்.

தமிழ் அமுதன் said...

///மனிதனால் உருவாக்கி மனிதனால் கையாளப்படுவதால் சட்டம் சில நேரங்களில் இளகத்தான் செய்கிறது.//

சிலநேரங்களில் அல்ல பல நேரங்களில் ...!

ஆரூரன் விசுவநாதன் said...

இதற்கெல்லாம் அடிப்படை...
சுயநலம்..... எல்லவற்றிலும் தனக்கென்ன லாபம்? எனும் கொள்கை.

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

அசத்துங்க சார்
நல்லா இருக்குங்க சிந்தனை தூண்டும் பதிவு

ஈரோடு கதிர் said...

நன்றி @@ சந்தனமுல்லை

நன்றி @@ ராஜு


நன்றி @@ ஜீவன்
(அதுதான் வருத்தமே)

நன்றி @@ ஆரூரன்
(ஆமாங்க)
வாழ்த்துக்கள்

நன்றி @@ நேசமித்ரன்

க.பாலாசி said...

//புத்திக்கூர்மையின் அடிப்படையில் எழும் அசட்டு நம்பிக்கையும் தான் தவறுகள் தோன்றுவதற்கு பெரும்பாலும் காரணங்களாக இருக்கின்றன.//

இதில் புத்திக்கூர்மை என்பதைவிட ஆணவமும், அதிகாரமும் தான் பெரும்பாலான தவறுகளுக்கு காரணங்களாய் அமைந்துவிடுகின்றன.

//சம்பாதிக்க எளிதான வாய்ப்பாக, தான் வகிக்கும் பதவி அமைவதாலும், ஒரு மனிதன் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் சர்வ சாதாரணமாக லஞ்சம் பெறுகிறான்.//

இது உண்மை...

//"என்ன நான் மட்டுமா இப்படிச் செய்கிறேன். எல்லோரும் தானே இப்படிச் செய்கிறார்கள். அவர்கள் நிறுத்தட்டும் அப்புறம் வேண்டுமானால் நானும் நிறுத்துகிறேன்"//

எல்லாரும் ஓடுகிறார்கள் நானும் ஓடுகிறேன் என்று சொல்பவனின் காலை ஒடித்தால் சரியாகிவிடும். ஏனெனில் இவன் பின்னே எத்தனையோ பேர்...

//மாட்டுவதற்கு முந்தைய நிமிடம் வரை தவறில்லை என்று நினைத்திருந்த ஒரு செயல், மாட்டிக்கொள்ளும் விநாடியிலிருந்து தவறு என்று புதிய பரிணாமம் கொள்கிறது.//

மாட்டிய பின் அவன் மனிதனாக இருக்கும்பட்சத்தில் தவறு என்று உணர்கிறான். இல்லையேல் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்றே அந்த நொடியிலிருந்து சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறான்.

//அந்த எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒழுக்கமாக உருவெடுக்கும் வரை, மீறல்கள் தொடர்ந்து கொண்டே தானிருக்கும். //

ஒப்புக்கொள்ளவேண்டிய செய்தி....

நல்லதொரு சிந்தனைப் பதிவு...பகிர்வு....

மணிஜி said...

எல்லோரும் நல்லவரே..சந்தர்ப்பம் கிட்டாதவரை

Rekha raghavan said...

//இன்னொரு மனிதனை ஏதோ ஒரு வகையில் பாதிக்கச் செய்கிற எல்லாமே அடிப்படையில் தவறானது என்ற எண்ணம் வலுவாக வரவேண்டும்.//

நல்ல கருத்து. அழ்ந்த சிந்தனை. அருமையான பதிவு.

ரேகா ராகவன்.

Ashok D said...

ரெய்ட் சார்!

கண்ணகி said...

நமமையெல்லாம் அப்படி பழக்கிவிட்டார்கள். மனச்சாட்சி உள்ள மனிதர்கள்தான் எங்கேயும் உண்மையாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் லட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள். கதிர்.

பிரபாகர் said...

இன்றைய சூழலில் இதுபோன்ற பதிவு அவசியம் தேவை... அருமையான பதிவு கதிர்... கலக்குங்கள்...

பிரபாகர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமை கதிர்.

நாம் தவறுகள் செய்வது வாய்ப்புகளாலேயே. இந்தப் போக்கைக் குறைக்க வேண்டுமென்றால் ஒழுக்கம் வர வேண்டும். நம்மில் எத்தனை பேருக்கு வரிசையில் நின்று வண்டி ஏற வேண்டுமென்று தோன்றுகிறது.

நாம் மேலை நாட்டினரிடம் இருந்து படிக்க வேண்டியவையில் ஒழுக்கம் முதலில் நிற்கும்.

இரும்புத்திரை said...

அப்போ இருக்கறதிலே நல்லவன் நான் தான் பைக்கே இல்ல

நிலாமதி said...

இந்த நவீன உலகில் எல்லாவற்றிலும் வேகம் விரைவு என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். சிலருக்கு தடைகளை மீறுவதே ஒரு அலாதி பிரியம் எதோ வென்று காட்டு கிறேன் என்பது ல.....நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு ...மனசாட்சியுள்ள்ள ஒரு சிலர் தான் பிடிபட்ட் பின் குற்றத்தை ஒத்துக்கொள்கிறார்கள். திருந்த முயற்சிக்கிறார்கள். உங்கள் பதிவுக்கு பாராடுக்களும் வாழ்த்துக்களும் ..

azhagan said...

Excellent!!

ப்ரியமுடன் வசந்த் said...

//என்ன நான் மட்டுமா இப்படிச் செய்கிறேன். எல்லோரும் தானே இப்படிச் செய்கிறார்கள். அவர்கள் நிறுத்தட்டும் அப்புறம் வேண்டுமானால் நானும் நிறுத்துகிறேன்" என்ற சொத்தைச் சமாதானம் மிக எளிதாக எல்லோரிடமும் விரவிக்கிடக்கிறது.//

உண்மைதான் அதை அவர்கள் இருமாப்புடன் வீராப்பா சொல்லும்போது சிரிப்புதான் வருது...

Anonymous said...

“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

பழமைபேசி said...

இது நல்லதொரு இடுகை!

இடுகை!

இடுகை!

இடுகை!

இடுகை!

இடுகை!

இடுகை!

பழமைபேசி said...

blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறது இடுகை! இந்த பின்னணியில, பிழை திருத்தின தகவல் இதுங்க:

ஒரு பதிவர், ஒரு தலைப்பின் பேரில் தொடர்ந்து எழுதுவது தொடர் இடுகை!

ஒருத்தர், இனியொருத்தருக்கு கோர்த்துவுடுற இடுகை, சங்கிலித் தொடர் இடுகை!!

ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவிங்களுக்கு கோர்த்துவுட்டா, அது வலைத் தொடர் இடுகை!! அதாவது, வலையில ஒரு கண்ல இருந்து, பல கண்களுக்கு கோர்த்து வுடுறா மாதிரி!!!

இது இடுகை, இடுகை, இடுகை!

Unknown said...

திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால்....

கவிக்கிழவன் said...

வாங்கும் சம்பளம் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு போத வில்லையென்ற காரணத்திற்காக ஒருவர் லஞ்சம் வாங்குவதாக தெரியவில்லை. தான் அதிகாரமிக்கவர் என்ற காரணத்தினாலும், லஞ்சம் கேட்டால் கொடுப்பதற்கு மனிதர்களும் இருப்பதாலேயே

உண்மை உண்மை உண்மை 100%

வால்பையன் said...

சட்டங்கள் கடுமையாக்கப்படுவது தேவையற்றது!

பள்ளி, கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலே நல்ல மாற்றம் ஏற்படும்!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பாலாஜி

(காலை ஒடிக்க வேண்டும் என்ற கோபம் புரிகிறது, ஆனால் யார், எப்படி செய்வது?)

(மாட்டிய விநாடிகளில் பெரும்பாலும் தப்பித்துக் கொள்ளவே முயல்கிறான், முடியாத பட்சத்தில் சிலர் ஒப்புக் கொள்கின்றனர்)

நன்றி @@ தண்டோரா
நிதர்சனம்)

நன்றி @@ ராகவன்

நன்றி @@ அசோக்

நன்றி @@ vattukozhi
(நீங்கள் சொல்வது சரியே)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பிரபா
(என்ன பிரபா, தினம் ஒரு போட்டோ போட்டு கலக்குறீங்க)

நன்றி @@ செந்தில்
(மிகச்சரியாக சொல்கிறீர்கள். ஏன் இத்தனை அவசரம். வரிசையில் நிற்கும் ஒழுக்கம் சுத்தமாக இல்லை)

நன்றி @@ அரவிந்த்
(சீக்கிரம் வாங்க வாழ்த்துகள்)


நன்றி @@ நிலா
(சிலரின் அலாதிப் பிரியம் ஏற்படுத்தும் விளைவுகள் கொடுமையாக இருக்கும் சில நேரங்களில்)

நன்றி @@ அழகன்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வசந்த்
(ஆமாம் வசந்த்)

நன்றி @@ அனானி

நன்றி @@ பழமைபேசி
(மாப்பு நல்லாருக்கீங்களா?)

நன்றி @@ பட்டிக்காட்டான்

நன்றி @@ கவிக்கிழவன்

ராமலக்ஷ்மி said...

மிக மிக நல்ல இடுகை.

தொடரும் மீறல்களைச் சொன்னதோடு நின்றிடாமல் கொடுத்தீர்களே ஒரு தீர்வு. அதுதான் பதிவின் ஹைலைட். வாழ்த்துக்கள் கதிர், இதுபோன்ற இடுகைகள் இனியும் தர!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வால்பையன்
(இது சாலை பாதுகாப்போடு மட்டுமல்ல)

பித்தனின் வாக்கு said...

தவறுகள் செய்யக் காரணம் தேவை மற்றும் வாய்ப்புக்கள் தான், ஆனால் அந்த தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்க காரணம் அதைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் போனதுதான். அதுதான யாரு பண்ணலை நம்ம பண்ணிட்டேம் என்ற சமாதானம்தான் காரணம்.
தவறுகளில் மிகவும் பெரிய தவறு இந்த காம்பரமைஸ் என்று சொல்லக்கூடிய தவறுதான், இதுதான் நமது தவறுகளுக்கு எல்லாம் அடிப்படை. அந்த காலத்தில் புண்ணியம், பாவம் எங்கின்ற ஒர் முறை இருந்தது அதுக்கு பயந்து தேவை மற்றும் வாய்ப்பு இருந்தும் தவறு செய்வபர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது பகுத்தறிவில் புன்னியமாது பாவமாது எனத் துணிந்துவிட்டதால் தவறுகளுக்கு பஞ்சமில்லை.

vasu balaji said...

நல்ல கருத்துக்கள். சரியான தீர்வும் கூட. பாராட்டுக்கள் கதிர்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பித்தன்
(மிக ஆழமாக அலசிய பின்னூட்டம், உங்கள் கருத்தோடு முழுதும் உடன்படுகிறேன்)

நன்றி @@ வானம்பாடிகள்
(என்னங்ணா, ஒருநாள் வெட்டாப்புங்களா)

காமராஜ் said...

மிக நுனுக்கமான அலசல்.
பொறுப்பான தீர்வு.
சட்டங்கள் போதிய அளவு இருக்கிறது.
கடுமையாகவும் இருக்கிறது.
ஒழுக்கம்
கட்டாயம் மேலிருந்து கீழ் வரவேண்டும்.
இங்கே கீழே மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல விழிப்புணர்வு இடுகை. யூத்துக்கும் வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ காமராஜ்
(மிகச்ச‌ரியான வார்த்தை கீழிருப்பவன் ஒழுக்கத்திற்காக அஞ்சுகிறான்)


நன்றி @@ உழவன்