செதுக்கப்பட்ட கற்கள் கொண்டு
சீராய் அடுக்கப்பட்ட படிகளின்
இடையே அழகிய பூச்செடியாய்
அமர்ந்திருக்கிறாய் நீ...
உற்று நோக்கிச் சிரிக்கும்
உன் கூர் விழிகளில்
ஒளிந்து கிடக்கின்றன
ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்
பகிர்ந்து கொள்ளாமல்
கண்ணாமூச்சியாடும் காதல்
பரிதவிக்கிறது
காற்றில்லா வெற்றிடத்தில்...
உன்னை நோக்கி வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
இயல்பை மீறி மூச்சு வாங்கி
பாதத்தின் பிடிமானம் குழைகிறது...
“மனதைப் படி” என நீட்டிய புத்தகத்தோடு
மோதிரவிரலில் சுருக்கென
உன் விரல் சுண்டியதில்
சிலிர்த்துச் சிரிக்கிறது இரத்தம் ...
உன் கைகளில் இருந்து பிரிந்த புத்தகம்
என் கைகளில் தவழும் விநாடிகளில்
எடை போட முடியாத கனத்தோடு
ஏந்துகிறேன் வாழ்க்கையை...
விடியும் வரைத் தேடி வட்டமிட்ட
எழுத்துகளைக் கூட்டி வாசிக்கிறேன்
“இனியவனே உன்னை நேசிக்கிறேன்”
கிழக்கில் சூரியன் விழித்தெழுகிறது..
சீராய் அடுக்கப்பட்ட படிகளின்
இடையே அழகிய பூச்செடியாய்
அமர்ந்திருக்கிறாய் நீ...
உற்று நோக்கிச் சிரிக்கும்
உன் கூர் விழிகளில்
ஒளிந்து கிடக்கின்றன
ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்
பகிர்ந்து கொள்ளாமல்
கண்ணாமூச்சியாடும் காதல்
பரிதவிக்கிறது
காற்றில்லா வெற்றிடத்தில்...
உன்னை நோக்கி வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
இயல்பை மீறி மூச்சு வாங்கி
பாதத்தின் பிடிமானம் குழைகிறது...
“மனதைப் படி” என நீட்டிய புத்தகத்தோடு
மோதிரவிரலில் சுருக்கென
உன் விரல் சுண்டியதில்
சிலிர்த்துச் சிரிக்கிறது இரத்தம் ...
உன் கைகளில் இருந்து பிரிந்த புத்தகம்
என் கைகளில் தவழும் விநாடிகளில்
எடை போட முடியாத கனத்தோடு
ஏந்துகிறேன் வாழ்க்கையை...
விடியும் வரைத் தேடி வட்டமிட்ட
எழுத்துகளைக் கூட்டி வாசிக்கிறேன்
“இனியவனே உன்னை நேசிக்கிறேன்”
கிழக்கில் சூரியன் விழித்தெழுகிறது..
~
43 comments:
பகிர்ந்து கொள்ளாத என் காதல்
பரிதவிக்கிறது காற்றில்லா வெற்றிடத்தில்...
நல்லா இருக்கு
:-) நல்லாருக்கு கவிதை வரிகள்!!
உன் கைகளில் இருந்து பிரிந்த புத்தகம்
என் கைகளில் தவழும் விநாடிகளில்
எடை போட முடியாத கனத்தோடு
ஏந்துகிறேன் வாழ்க்கையை...
அருமை கதிர்
//உற்று நோக்கிச் சிரிக்கும் உன் விழிகளில்
ஓளிந்திருக்கிறது ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்//
அருமை...அருமை...
//இயல்பை மீறி மூச்சு வாங்கி
பாதத்தின் பிடிமானம் குழைகிறது..//
வயசானாலே இப்படித்தான் விடுங்க...
காதல் கவிதையா இது...(ச்சோ சாமி...) சரி...சரி...காதலுக்கு ஏது வயசு....
//“இனியவனே உன்னை நேசிக்கிறேன்”//
ம்... அப்பறம்....இருங்க இருங்க உங்க வீட்டுக்காரம்மாவ பாத்துட்டு வர்ரேன்...
உற்று நோக்கிப் பார்க்கிறேன்...காதலின் வாசம் சற்று தூக்கலாய்....
/பகிர்ந்து கொள்ளாத என் காதல்
பரிதவிக்கிறது காற்றில்லா வெற்றிடத்தில்.../
ஆஹா! சபாசு.
/மோதிரவிரலில் சுருக்கென
உன் ஆட்காட்டி விரல் சுண்டியதில்
இரத்தம் முழுதும் சிலிர்த்துச் சிரிக்கிறது.../
அசத்தல். மின்சாரக் கதிர்.
/உன் கைகளில் இருந்து பிரிந்த புத்தகம்
என் கைகளில் தவழும் விநாடிகளில்
எடை போட முடியாத கனத்தோடு
ஏந்துகிறேன் வாழ்க்கையை.../
மாப்பு வந்தா இருக்கு இதுக்கு ஆப்பு. ஆனாலும் டாப்பு.
/விடிய விடியத் தேடி, விடியும் பொழுது
வட்டமிட்ட எழுத்துகளைக் கூட்டி வாசிக்கிறேன்
“இனியவனே உன்னை நேசிக்கிறேன்”
கிழக்கில் சூரியன் விழித்தெழுகிறது../
அதிகாலைக் கனவு பலிக்கும்பாங்க. நீங்க தூங்காமலே கனவு கண்டிருக்கீங்க. ராஜ் டிவி ஜோசியருட்டதான் கேக்கணும்.
அழகு எப்பவும் போல் அழகு. காதல் கொள்ளை அழகு. அவஸ்தை அதை விட அழகு. அசத்திட்டீங்க கதிர்.
க.பாலாஜி said...
/வயசானாலே இப்படித்தான் விடுங்க...
ம்... அப்பறம்....இருங்க இருங்க உங்க வீட்டுக்காரம்மாவ பாத்துட்டு வர்ரேன்...
உற்று நோக்கிப் பார்க்கிறேன்...காதலின் வாசம் சற்று தூக்கலாய்..../
ஆரம்பிச்சிட்டாரு. கொள்ளைக்கு போனாலும் கூட்டா போகதன்னா கேக்குறாங்களா? சங்ககிரி படி ஏறினதெல்லாம் பாலாஜி இப்போ நினைச்சி சிரிச்சிகிட்டிருப்பாரு போல. அதெப்புடி உத்து நோக்கினா வாசன தெரியுது. பாலாஜி, கவிதைக்கு பொய்யழகுன்னாலும் இது ரொம்ப ஓவருல்ல.
//
“என் மனதைப் படி” என நீட்டிய
புத்தகத்தோடு, மோதிரவிரலில் சுருக்கென
உன் ஆட்காட்டி விரல் சுண்டியதில்
இரத்தம் முழுதும் சிலிர்த்துச் சிரிக்கிறது...
//
அருமை வரிகள்!!
//
உன் கைகளில் இருந்து பிரிந்த புத்தகம்
என் கைகளில் தவழும் விநாடிகளில்
எடை போட முடியாத கனத்தோடு
ஏந்துகிறேன் வாழ்க்கையை...
//
வாழ்க்கையின் தத்துவம் நான்கே வரிகளில்!
//
விடிய விடியத் தேடி, விடியும் பொழுது
வட்டமிட்ட எழுத்துகளைக் கூட்டி வாசிக்கிறேன்
“இனியவனே உன்னை நேசிக்கிறேன்”
கிழக்கில் சூரியன் விழித்தெழுகிறது..
//
அருமை ரசனைக்குரிய வரிகள்!
அனைத்து வரிகளும் அருமையா இருக்கு.
வரிக்கு வரி வர்ணனை அபாரம்!!
விடிய விடியத் தேடி, விடியும் பொழுது
வட்டமிட்ட எழுத்துகளைக் கூட்டி வாசிக்கிறேன்
“இனியவனே உன்னை நேசிக்கிறேன்”
kathir, you too?
//உன் கைகளில் இருந்து பிரிந்த புத்தகம்
என் கைகளில் தவழும் விநாடிகளில்
எடை போட முடியாத கனத்தோடு
ஏந்துகிறேன் வாழ்க்கையை...//
கிரேட் கதிர்
காதல் வர வர மெருகு கூடி போட்டொவுலயும் அசத்துரீங்க கதிர்
நடக்கட்டும்....
அட அட.. பிரம்மாதம்ங்க..
//வானம்பாடிகள் said...
ஆரம்பிச்சிட்டாரு. கொள்ளைக்கு போனாலும் கூட்டா போகதன்னா கேக்குறாங்களா? சங்ககிரி படி ஏறினதெல்லாம் பாலாஜி இப்போ நினைச்சி சிரிச்சிகிட்டிருப்பாரு போல.//
அப்பதானே தெரிஞ்சுது அவரோட வயசு...(போட்டோவெல்லாம் பாத்து ஏமாந்துடாதிங்க)
//அதெப்புடி உத்து நோக்கினா வாசன தெரியுது. பாலாஜி, கவிதைக்கு பொய்யழகுன்னாலும் இது ரொம்ப ஓவருல்ல.//
என்ன பண்றது நைனா... ஒரே ஊர்காரரா போயிட்டாரு...பொழச்சிபோகட்டும் விடுங்க...
உன் கைகளில் இருந்து பிரிந்த புத்தகம்
என் கைகளில் தவழும் விநாடிகளில்
எடை போட முடியாத கனத்தோடு
ஏந்துகிறேன் வாழ்க்கையை...
///
கதிர் பின்னிட்டிங்க!
அருமை பாஸு ரசித்தேன்
//S.A. நவாஸுதீன் said...
நல்லா இருக்கு
அருமை கதிர்//
//சந்தனமுல்லை said...
:-) நல்லாருக்கு கவிதை வரிகள்!!//
நன்றி @@ நவாஸ்
நன்றி @@ சந்தனமுல்லை
//க.பாலாஜி said...
அருமை...அருமை...
வயசானாலே இப்படித்தான் விடுங்க...
காதல் கவிதையா இது...(ச்சோ சாமி...) சரி...சரி...காதலுக்கு ஏது வயசு....//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒரு கவிதை எழுத உடுங்கப்பா
கதிர்..
கலக்கறீங்க.. வார்த்தைகளில் விளையாடுகிறீர்கள்!! தொடருங்கள் :-)
// வானம்பாடிகள் said...
ஆஹா! சபாசு.
அசத்தல். மின்சாரக் கதிர்.//
நன்றி அய்யா
//மாப்பு வந்தா இருக்கு இதுக்கு ஆப்பு. ஆனாலும் டாப்பு.//
ஏதாவது கூடக்க்கொறைய தப்பு இருந்த சொல்லுங்க...
மாப்பு வரும் முன்னாடி மாத்திடறேன்
//அழகு எப்பவும் போல் அழகு. காதல் கொள்ளை அழகு. அவஸ்தை அதை விட அழகு.//
இதுவே கவிதை தானுங்க
//ஆரம்பிச்சிட்டாரு. கொள்ளைக்கு போனாலும் கூட்டா போகதன்னா கேக்குறாங்களா? சங்ககிரி படி ஏறினதெல்லாம்//
ஆமாங்க தப்புதான்
//பாலாஜி, கவிதைக்கு பொய்யழகுன்னாலும் இது ரொம்ப ஓவருல்ல.//
அய்யா சின்னப் பையனுங்க நம்ம பாலாஜி தம்பி
பாவம் விட்டுருவோம்
இஃகிஃகி
// RAMYA said...
அருமை வரிகள்!!
வாழ்க்கையின் தத்துவம் நான்கே வரிகளில்!
அருமை ரசனைக்குரிய வரிகள்!
அனைத்து வரிகளும் அருமையா இருக்கு.
வரிக்கு வரி வர்ணனை அபாரம்!!//
நன்றி ! நன்றி!! நன்றி!!! @@ ரம்யா
//ஆரூரன் விசுவநாதன் said...
kathir, you too?//
பின்ன...
உங்க கவிதையைப் பார்த்தாவே எனக்கும் ஒரே கவிதையா வருதுங்க
நன்றி @@ ஆரூரன்
நன்றி @@ நாஞ்சில் நாதம்
//பிரியமுடன்...வசந்த் said...
கிரேட் கதிர்
காதல் வர வர மெருகு கூடி போட்டொவுலயும் அசத்துரீங்க கதிர்
நடக்கட்டும்....//
எல்லாம் ஒரு விளம்பரம்தான் வசந்த்
நன்றி @@ வசந்த்
//கலகலப்ரியா said...
அட அட.. பிரம்மாதம்ங்க..//
அக்கா நன்றி
//க.பாலாஜி said...
அப்பதானே தெரிஞ்சுது அவரோட வயசு...(போட்டோவெல்லாம் பாத்து ஏமாந்துடாதிங்க)
என்ன பண்றது நைனா... ஒரே ஊர்காரரா போயிட்டாரு...பொழச்சிபோகட்டும் விடுங்க...//
சரி சரி
பொழச்சுப் போரேன்
விட்டுடுங்க தம்பி
//தேவன் மாயம் said...
கதிர் பின்னிட்டிங்க!//
நன்றி @@ தேவன் மாயம்
//பாலா said...
அருமை பாஸு ரசித்தேன்//
நன்றி @@ பாலா
//ச.செந்தில்வேலன்
கலக்கறீங்க.. வார்த்தைகளில் விளையாடுகிறீர்கள்!! தொடருங்கள்//
நன்றி @@ செந்தில்
//விடிய விடியத் தேடி, விடியும் பொழுது
வட்டமிட்ட எழுத்துகளைக் கூட்டி வாசிக்கிறேன்
“இனியவனே உன்னை நேசிக்கிறேன்”
கிழக்கில் சூரியன் விழித்தெழுகிறது..
//
இப்படிதான் நானும் ஏமாந்து போனேன் பத்தாவது படிக்கும் போது
அருமையா இருக்கு நண்பா.. வாழ்த்துகள்..
//உற்று நோக்கிச் சிரிக்கும் உன் விழிகளில்
ஓளிந்திருக்கிறது ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்
பகிர்ந்து கொள்ளாத என் காதல்
பரிதவிக்கிறது காற்றில்லா வெற்றிடத்தில்...//
ரசித்தேன்..
//இரும்புத்திரை அரவிந்த் said...
இப்படிதான் நானும் ஏமாந்து போனேன் பத்தாவது படிக்கும் போது//
யாருங்க கதையில வந்த சீதாவா
நன்றி @@ அரவிந்த்
//கார்த்திகைப் பாண்டியன் said...
அருமையா இருக்கு நண்பா.. வாழ்த்துகள்..
ரசித்தேன்..//
வாங்க நண்பா.. ரொம்ப நாளச்சு
நன்றி @@ பாண்டியன்
//விடிய விடியத் தேடி, விடியும் பொழுது
வட்டமிட்ட எழுத்துகளைக் கூட்டி வாசிக்கிறேன்
“இனியவனே உன்னை நேசிக்கிறேன்”
கிழக்கில் சூரியன் விழித்தெழுகிறது..//
ஆகா அருமையாக உள்ளது
ரசித்துப் படித்தேன் வாழ்த்துகள் அன்பரே
அருமைங்க கதிர்... நீங்க போட்டு தாக்குங்க... பாராட்டுகள்... ஆமாம்... படத்தை மொதல்ல தேர்வு செய்துட்டு எழுதினதா, இல்லை எழுதினதுக்கு தகுந்த மாதிரி பிடித்து போட்ட படமா? எப்படி இருந்தாலும், மிக நன்றாக இருக்குதுங்க கதிர்..
ரைட்டு!
//பகிர்ந்து கொள்ளாத என் காதல்
பரிதவிக்கிறது காற்றில்லா வெற்றிடத்தில்...//
அருமை கதிர்.
அருமைங்க..
காதலாகி கசிந்துருகி..!!
ம்ம்.. கலக்குங்க..
// தியாவின் பேனா said...
ஆகா அருமையாக உள்ளது
ரசித்துப் படித்தேன் வாழ்த்துகள் அன்பரே//
நன்றி @@ தியாவின் பேனா
//ராசுக்குட்டி said...
அருமைங்க கதிர்... நீங்க போட்டு தாக்குங்க... பாராட்டுகள்...//
இது மட்டும் மெட்டுக்கு பாட்டுங்க
நன்றி @@ ராசுக்குட்டி
//வால்பையன் said...
ரைட்டு!//
சரிங்க @@ அருண்
//நாடோடி இலக்கியன் said...
அருமை கதிர்.//
நன்றி @@ பாரி
//பட்டிக்காட்டான்.. said...
அருமைங்க..
காதலாகி கசிந்துருகி..!!
ம்ம்.. கலக்குங்க..//
நன்றி @@ பட்டிக்காட்டான்
//உற்று நோக்கிச் சிரிக்கும் உன் விழிகளில்
ஓளிந்திருக்கிறது ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்
பகிர்ந்து கொள்ளாத என் காதல்
பரிதவிக்கிறது காற்றில்லா வெற்றிடத்தில்...//
காதலின் பரிதவிப்பு புரிகிறது..
விடிய விடியத் தேடி, விடியும் பொழுது
வட்டமிட்ட எழுத்துகளைக் கூட்டி வாசிக்கிறேன்
“இனியவனே உன்னை நேசிக்கிறேன்”
கிழக்கில் சூரியன் விழித்தெழுகிறது
ஹப்பாடா...ஒருவழியா வெற்றி..
நல்ல கவிதை அழகா பகிர்ந்து கொடுத்திருக்கீங்க..அதன் தவிப்பை..
12/13 voted congrats
//தமிழரசி said...
காதலின் பரிதவிப்பு புரிகிறது..
ஹப்பாடா...ஒருவழியா வெற்றி..
நல்ல கவிதை அழகா பகிர்ந்து கொடுத்திருக்கீங்க..அதன் தவிப்பை..//
ஆமாங்க
நன்றி @@ தமிழ்
//தேவன் மாயம் said...
12/13 voted congrats//
நன்றி @@ Dr.தேவா
எல்லாரும் எனக்கு முன்பே வந்து பிரிச்சி மேய்ஞ்சுட்டாங்க... அதனால வாழ்த்துகளை மட்டும் சொல்லிக்கிறேன். ம்... ஜமாய்ங்க...
ரசித்தேன் நண்பரே!
பூக்களிலிருந்து சில புத்தகங்கள் குறித்த அறிவிப்பை இணைத்ததற்கு நன்றி.
//குடந்தை அன்புமணி said...
வாழ்த்துகளை மட்டும் சொல்லிக்கிறேன். ம்... ஜமாய்ங்க...//
நன்றி @@ அன்புமணி
//மாதவராஜ் said...
ரசித்தேன் நண்பரே!
பூக்களிலிருந்து சில புத்தகங்கள் குறித்த அறிவிப்பை இணைத்ததற்கு நன்றி.//
நன்றி @@ மாதவ்
அன்பின் கதிர்
அருமை அருமை - அழகுப் படம் - நல்ல கவிதை - காதல் கவிதை - கற்பனை சூப்பர் -
படிக்கட்டுகளின் அழகு
பட்டாம்பூச்சிகள் பறக்கும் விழிகளின் சிரிப்பு
நெருங்க நெருங்க மூச்சு வாங்கி இயல்பு நடை குழைகிறது
பரிசம் பட்டவுடன் சிலிர்க்கும் இரத்தம்
புத்தகப் பரிமாற்றத்தில் - எழுத்துக் கூட்டி படித்து மகிழும் போது கிழக்கே ஆதவன் ஒளிர்கிறான்
கற்ப்னை வளம் அருமை கதிர்
நல்வாழ்த்துகள்
நெருங்க,நெருங்க மூச்சு வாங்கி,பாதத்தின் பிடிமானம் குழைந்து,விரல் சுண்டியதில் இரத்தம் சிலிர்க்க....ஆஹா....அனுபவிக்கவேண்டிய தருணம்
Post a Comment