ஏரி குளம் வாய்க்கல் வரப்பு
சித்தாளுக்கு மண் நிரப்பி நிமிர்ந்து
தூக்குவதோடு நிறைகிறது அவன் கடமை
கழுத்து சுளுக்கச் சுமந்து கொட்டி
அலுக்காமல் மீண்டும் மீண்டும்
சுமப்பதில் தொடர்கிறது அவள் கடமை
காதலோ, காமமோ நிமிடங்களின்
எண்ணிக்கையில் நிறைந்து தளர்ந்து
தூக்கத்தில் தொடர்கிறது அவன் கடமை
கருவாக தாங்கி வளர்ப்பதா
வேண்டாமென கலைத்து வீசுவதா
வியர்த்து தூக்கம் துறப்பது அவள் கடமை
அவரவர் கடமையிலிருந்து
எப்போதேனும் மாற நினைப்பது
மாற நினைத்ததை சட்டென
மறந்து போவது மட்டும் இருவரின் கடமை
சித்தாளுக்கு மண் நிரப்பி நிமிர்ந்து
தூக்குவதோடு நிறைகிறது அவன் கடமை
கழுத்து சுளுக்கச் சுமந்து கொட்டி
அலுக்காமல் மீண்டும் மீண்டும்
சுமப்பதில் தொடர்கிறது அவள் கடமை
காதலோ, காமமோ நிமிடங்களின்
எண்ணிக்கையில் நிறைந்து தளர்ந்து
தூக்கத்தில் தொடர்கிறது அவன் கடமை
கருவாக தாங்கி வளர்ப்பதா
வேண்டாமென கலைத்து வீசுவதா
வியர்த்து தூக்கம் துறப்பது அவள் கடமை
அவரவர் கடமையிலிருந்து
எப்போதேனும் மாற நினைப்பது
மாற நினைத்ததை சட்டென
மறந்து போவது மட்டும் இருவரின் கடமை
-------------------------------------------------------------------------
முழுவதும் படித்தீர்களா பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
34 comments:
ஹ்ம்ம்...*Sigh*
//மாற நினைத்ததை சட்டென
மறந்து போவது மட்டும் இருவரின் கடமை //
நச்!!
'சிக்' என்று வரிகளால், வலிகளை படம் பிடித்துள்ளீர்கள்.
கடமை என்பதால் வலி தெரிவதில்லை. பலரும் இதே கடமைகளைச் செய்வதால்....(பழகி/பிடித்து விடுகிறது)
நல்ல கவிதை.
//காதலோ, காமமோ நிமிடங்களின்
எண்ணிக்கையில் நிறைந்து தளர்ந்து
தூக்கத்தில் தொடர்கிறது அவன் கடமை//
காதலையும் ,காமத்தையும் ஒரே டப்பாக்குள் போட்டு அமுக்கிய வார்த்தை பிரயோகம் பிடித்திருக்கிறது!
ஆனா எவனும் சொன்னா நம்ப மாட்டிங்கிறானே!
"அவர்களின் கடமை"
அருமை அருமை!!
கலக்கறீங்க கதிர்,
இயல்பான நடை,,,,,முடிவில் மட்டும் சிறு வலி
அன்புடன்
ஆரூரன்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பலனை எதிர்பாராமல் கடமையை செய்துவிட்டேன்(ஓட்டு போட்டதை சொன்னேன் கதிரு)
//காதலோ, காமமோ நிமிடங்களின்
எண்ணிக்கையில் நிறைந்து தளர்ந்து
தூக்கத்தில் தொடர்கிறது அவன் கடமை//
பலரின் இல்லற வாழ்க்கையில் இப்போதுள்ள நிலையை கொஞ்சம் உணர்த்தும்படி உரைக்கும் வரிகள்...
அருமை....
ரொம்ப நல்லா இருக்குங்க..
//அவரவர் கடமையிலிருந்து
எப்போதேனும் மாற நினைப்பது
மாற நினைத்ததை சட்டென
மறந்து போவது மட்டும் இருவரின் கடமை//
ஆழமான வரிகள்...
கலக்கலா இருக்கு! நச் வரிகள்!
அவரவர் கடமையிலிருந்து
எப்போதேனும் மாற நினைப்பது
மாற நினைத்ததை சட்டென
மறந்து போவது மட்டும் இருவரின் கடமை//
அருமை,கதிர்.
-------------------------------------------------------------------------
கதிர், அசத்தறீங்க.
//
அவரவர் கடமையிலிருந்து
எப்போதேனும் மாற நினைப்பது
மாற நினைத்ததை சட்டென
மறந்து போவது மட்டும் இருவரின் கடமை
//
வார்த்தைகள் கச்சிதமா வந்து விழுது.
நல்லாருக்குங்க..
கடமையுணர்வோட கடமையச் செய்திருக்கீங்க... இஃகி!
நன்றி @@ சந்தனமுல்லை
//*Sigh*//
இது என்ன?
நன்றி @@ Shakthiprabha
//பலரும் இதே கடமைகளைச் செய்வதால்....(பழகி/பிடித்து விடுகிறது)//
ஆமாங்க
நன்றி @@ வால்பையன்
//காதலையும், காமத்தையும் ஒரே டப்பாக்குள் போட்டு அமுக்கிய வார்த்தை பிரயோகம் பிடித்திருக்கிறது!
//
டப்பா எல்லாம் எங்க புடிக்கறீங்க
நன்றி @@ வானம்பாடிகள்
நன்றி @@ ஆரூரன்
//முடிவில் மட்டும் சிறு வலி//
உண்மைதானே
நன்றி @@ ராசுக்குட்டி
நன்றி @@ தண்டோரா
//பலனை எதிர்பாராமல் கடமையை செய்துவிட்டேன்(ஓட்டு போட்டதை சொன்னேன் கதிரு)//
இந்தக் கடமையை மாத்தனும்னு நினைச்சிராதீங்க.... இஃகிஃகி
நன்றி @@ பாலாஜி
//பலரின் இல்லற வாழ்க்கையில் இப்போதுள்ள நிலையை கொஞ்சம் உணர்த்தும்படி உரைக்கும் வரிகள்...//
சரிங்க
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ அகல் விளக்கு
நன்றி @@ ரம்யா
மேலும் இரண்டு நன்றிகள் விருது கொடுத்ததற்கு மற்றும் பாலோயர் ஆனதற்கு
நன்றி @@ ஷண்முகப்ரியன்
நன்றி @@ செந்தில்
//வார்த்தைகள் கச்சிதமா வந்து விழுது.//
நன்றிங்க
நன்றி @@ பட்டிக்காட்டான்
நன்றி @@ மாப்பு (பழமைபேசி)
கதிர் கவிதை ரொம்ப அழகா வந்துருக்கு.
நல்லாருக்கு தல.
நன்றி @@ வசந்த்
நன்றி @@ ராஜு
எழுதுவது உங்கள் கடமை படித்து ஓட்டு போட்டு பாராட்டுவது எங்கள் கடமை..
காலத்தின் கடமைகளை கவிதையாய் சொல்லியிருக்கீங்க கதிர்..
நன்றி @@ தமிழரசி
//படித்து ஓட்டு போட்டு பாராட்டுவது எங்கள் கடமை//
நன்றி தமிழ்
சான்ஸ்சே... இல்லனே...
அருமையான வரிகள் அண்ணே .....ரசித்து படித்தேன்....
நன்றி @@ சீமான்கனி
//ரசித்து படித்தேன்....//
மிக்க மகிழ்ச்சி
கதிர், உங்களின் எண்ணவோட்டங்கள் வித்தியாசமாக உள்ளன
தரமான படைப்புக்களை இன்னும் நிறைய எழுத வாழ்த்துகிறேன்
நன்றி @@ தியாவின் பேனா
//தரமான படைப்புக்களை இன்னும் நிறைய//
நிச்சயம் முயற்சிக்கிறேன்
மிக எளிமையாக, இந்த சமூகத்தில் நிலவும் ஆண் பெண் வாழ்நிலையைச் சொல்ல முடிந்திருக்கிறது. நல்ல சொற்சித்திரம்.
தரம் கதிரிடம் நிரந்தரம்.
நன்றி @@ மாதவராஜ்
நன்றி @@ நாடோடி இலக்கியன்
//தரம் கதிரிடம் நிரந்தரம்.//
மிக்க மகிழ்ச்சி பாரி
நல்லதோர் படைப்பு
:)
அருமையான,ஆழமான வரிகள்.மிகவும் ரசித்தேன்.
//அவரவர் கடமையிலிருந்து
எப்போதேனும் மாற நினைப்பது
மாற நினைத்ததை சட்டென
மறந்து போவது மட்டும் இருவரின் கடமை//
அருமை அருமை
நன்றி @@ D.R.Ashok said...
நன்றி @@ சுரேஷ்குமார்
நன்றி @@ ஆ.ஞானசேகரன்
:))
மாற நினைத்து மறந்துபோவது-முற்றிலும் உண்மை....நல்லாயிருக்கு
Post a Comment