தடயங்கள்




தீராத தூக்கத்தில் தத்தி வந்து
கழுத்தைக்கட்டி கண் சொருகி
மடிமேல் தொடரும் காலைத் தூக்கம்...

வசரமாய் உடை மாற்றும் போது
“அப்பா... பப்பி ஷேம்”என முகம் பொத்தி
வெட்கி சிரிக்கும் குட்டிக் குறும்பு...

றுக்கும் காலணிக்குள் கால் புதைத்து
தளர்ந்திருக்கும் சீருடையில் உடல் திணித்து
என் முதுகு வலிக்க நீ சுமக்கும் புத்தகப்பை...

கூண்டு விட்டுச் சிறகடித்து பறந்து வரும்
மாலை நேரத்தில் தோற்றுப்போவதற்காகவே
உன்னோடு நான் ஆடும் விளையாட்டு...

நீண்ட பயணத்தில் கசங்கிய அலுப்பில்
புரளும் படுக்கையில் செல்லமாய் நீவி விடும்
சின்னச்சின்ன பிஞ்சு விரல்கள்...

ன்னை உறங்கவைக்கக் கதை சொல்லி
உனக்குமுன் உறக்கத்தில் குளறும் என்னைத்
தட்டியெழுப்பி கை கொட்டும் சிரிப்பு...

னவுகள் ஆளும் ஆழ்ந்த உறக்கத்தில்
திசை தெரியாமல் உருண்டு புரண்டு
நெஞ்சில் உதைக்கும் பஞ்சுப் பாதங்கள்...



ரைந்து தீரும் நாட்களின் பசியாறலிலும்
கனத்துக்கிடக்கின்றன இதயத்தின் மையத்தில்
ஏராளமான தடயங்கள்
இவைபோலவே!


~

47 comments:

க.பாலாசி said...

//கூண்டு விட்டு சிறகடித்து பறந்து வரும்
மாலை நேரத்தில் தோற்றுப்போவதற்காகவே
உன்னோடு நான் ஆடும் விளையாட்டு...//

இனிமை தரும் சில நினைவுகள் அனுபவத்தில், இதற்காகவே சில ஆண்டுகள் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது...

கற்பனையில் வரையப்படும் கவிதைகளை விட அனுபவத்தில் உருவான உணர்வுப்பூர்வமான கவிதைகளுக்கு என்றுமே உயிருண்டு...காண்கிறேன் உங்களின் பதிவில்...

மிகவும் நன்று....

சந்தனமுல்லை said...

ரசித்தேன்!

//தளர்ந்திருக்கும் சீருடையில் உடல் திணித்து
என் முதுகு வலிக்க நீ சுமக்கும் புத்தகப்பை...//

அருமையான கவிதை! சுட்டிக்கு வாழ்த்துகள்! :-)

நாடோடி இலக்கியன் said...

அருமை கதிர்.

//உன்னை உறங்க வைக்க கதை சொல்லி
உனக்குமுன் உறக்கத்தில் குளறும் என்னை
தட்டியெழுப்பி கைகொட்டும் சிரிப்பு...//

வெகுவாக ரசித்தேன்.

jaffer-erode said...

arumai, enathu anubavangalai appadiea kavithaiyaga eluthiuleerkal,

nandru, valthukal

B.Jaffer sadiq.erode

தல ரசிகன். said...

\\அவசரமாய் உடை மாற்றும் போது
“அப்பா... பப்பி ஷேம்”என முகம் பொத்திவெட்கி சிரிக்கும் குட்டிக் குறும்பு...\\

இதுதான் சூப்பர்.
கவிதைமுழுவதும் அருமை.
உங்கள் ஜூனியருக்கு வாழ்த்துக்கள்.
:-)

குடந்தை அன்புமணி said...

//கனவுகள் ஆளும் ஆழ்ந்த உறக்கத்தில்
திசை தெரியாமல் உருண்டு புரண்டு
நெஞ்சில் உதைக்கும் பஞ்சு பாதங்கள்...//

இந்த ஒன்றுமட்டுமே இப்பொழுது எனக்கும் நேர்ந்திருக்கிறது. இன்னமும் மற்றவை வாய்க்கவில்லை. வயது இரண்டுதானே ஆகிறது...

பழமைபேசி said...

//முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால....//

படித்தீர்களாவா? அனுபவிச்சோம்யா... குட்டியின் புன்சிரிப்புலயே வுழுந்துட்டம்ல?!

பழமைபேசி said...

//க.பாலாஜி said...

கற்பனையில் வரையப்படும் கவிதைகளை விட அனுபவத்தில் உருவான உணர்வுப்பூர்வமான கவிதைகளுக்கு என்றுமே உயிருண்டு...காண்கிறேன் உங்களின் பதிவில்...
//

பாலாஜி அண்ணே,

உற்பத்தியாவது கவிதை அல்ல; நெஞ்சில இருந்து உதிரமா வடியணும்... நம்ம மாப்பிள்ளைக்கு உதிரம் ஆறா பெருக்கெடுத்தல்ல ஓடுது?! என்ன நாஞ்சொல்றது?!

ஆனா, மாப்பிள்ளை ஒன்னு சொல்லுறங் கேட்டுகுங்க.... என்னைக்கு வணிகத்துக்கு மாறினாலும், மவனே குடிக்கக் கூட நாலு சொட்டு கிடைக்காச் செஞ்சு போடுவான் அந்த சென்னிமலை ஆண்டவன்... அதான் ய்தார்த்தம்!

sakthi said...

அழகான பிஞ்சு விரல்கள்

vasu balaji said...

கவிதையில் பிஞ்சு விரல்களின் ஸ்பரிசம் உணர்கிறேன். அருமை. அருமை.

thiyaa said...

நிஜமான வரிகளில் அனுபவத்தின் ஊற்று தெரிகிறது

ஷண்முகப்ரியன் said...

என் முதுகு வலிக்க நீ சுமக்கும் புத்தகப்பை...

கூண்டு விட்டு சிறகடித்து பறந்து வரும்
மாலை நேரத்தில் தோற்றுப்போவதற்காகவே
உன்னோடு நான் ஆடும் விளையாட்டு...//

அருமையான மெனமைகள்,கதிர்.வாழ்த்துகள்.

Jerry Eshananda said...

கொஞ்சும் மொழியில் இதயம் வருடுகிறது பிஞ்சுவிரல்..

சீமான்கனி said...

குறிப்பிட்டு சொல்லமுடியாத அளவுக்கு ஒவ்வொரு வரிஉம் அழகாய் செதுக்கி இருகிறிர்கள்...
மிகவும் ரசித்து படித்தேன்.....
பாராட்டுகள் அண்ணே....

ஈரோடு கதிர் said...

இனியவர்களே...
என் 6 வயது மகளோடு மகிழ்ந்திருக்கும் சம்பவங்களே இந்த கவிதை....

கருத்து இட்ட அனைவருக்கும் நன்றி

ஈரோடு கதிர் said...

நன்றி @@ க.பாலாஜி

//அனுபவத்தில் உருவான கவிதைகளுக்கு//
ஆமாம் பாலஜி


நன்றி @@ சந்தனமுல்லை
//சுட்டிக்கு வாழ்த்துகள்!//


நன்றி @@ நாடோடி இலக்கியன்


நன்றி @@ jaffer-erode
//enathu anubavangalai//

எல்லா தந்தையின் உணர்வாகவே இருக்கும்


ஸ்பெஷல் நன்றி டப்ள்ஸ் @ தல ரசிகன்
//ஜூனியருக்கு வாழ்த்துக்கள்//


நன்றி @@ குடந்தை அன்புமணி
//வயது இரண்டுதானே ஆகிறது...//

வாழ்த்துகள் குட்டிக்கு

நன்றி @@ மாப்பு (பழமைபேசி)
//அனுபவிச்சோம்யா... குட்டியின் புன்சிரிப்புலயே வுழுந்துட்டம்ல?!//

//ஆனா, மாப்பிள்ளை ஒன்னு சொல்லுறங் கேட்டுகுங்க.... என்னைக்கு வணிகத்துக்கு மாறினாலும், மவனே குடிக்கக் கூட நாலு சொட்டு கிடைக்காச் செஞ்சு போடுவான் அந்த சென்னிமலை ஆண்டவன்... அதான் ய்தார்த்தம்!//

அய்யோ

நன்றி @@ sakthi

நன்றி @@ வானம்பாடிகள் said...
//பிஞ்சு விரல்களின் ஸ்பரிசம் உணர்கிறேன்//.
மகிழ்ச்சி


நன்றி @@ தியாவின் பேனா

நன்றி @@ ஷண்முகப்ரியன்

நன்றி @@ jerry eshananda.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ seemangani

நாகராஜன் said...

அருமைங்க கதிர்... பாச உணர்வுகளை அற்புதமா கவிதையா எழுதிருக்கீங்க... பாராட்டுகள்.

காமராஜ் said...

//கூண்டு விட்டு சிறகடித்து பறந்து வரும்
மாலை நேரத்தில் தோற்றுப்போவதற்காகவே
உன்னோடு நான் ஆடும் விளையாட்டு//v

இனிது இனிது, கதிர் இது சிலாக்கியமானவை.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஆரூரன் விசுவநாதன்

நன்றி @@ ராசுக்குட்டி

நன்றி @@ காமராஜ்

Anonymous said...

கவிதை அருமை !!
நீங்கள் காதல் கவிதை எழுதினால் நன்றாக இருக்கும்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை கதிர்.

வால்பையன் said...

எனக்கும் அதே ஃபீலிங் தான்!

ப்ரியமுடன் வசந்த் said...

//உன்னை உறங்க வைக்க கதை சொல்லி
உனக்குமுன் உறக்கத்தில் குளறும் என்னை
தட்டியெழுப்பி கைகொட்டும் சிரிப்பு...//

ரொம்ப அனுபவித்து சிலாகிச்சு எழுதியிருக்கிங்க கதிர்

குட்டி என்ன படிக்குறான்?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்,

கலக்கலான வரிகள். உங்கள் செல்லத்திற்கு விவரம் தெரியும் வயதில் இந்த வரிகளைக் காட்டுங்கள். கண்டிப்பாக ரசிப்பான்.

உங்க மகன் "ஷேம் ஷேம் பப்பி ஷேம்" சொல்வதை மிகவும் ரசித்தேன். உங்கள் செல்லத்திற்கு எங்கள் ஆசிகள் :)

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லா இருக்குங்க..

SUMAZLA/சுமஜ்லா said...

எளிமையான, இனிமையான, காதுக்கு குளுமையான மெல்லிய கவிதை!

Admin said...

நல்ல இடுகை அத்தனையும் அருமை

பித்தனின் வாக்கு said...

good, kulanthaikal enrum nalla ithayangal. antha malailaiyum inimai. en kan munnal en annanin kulanthai therinthal.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நொண்டிசாமியார்
//நீங்கள் காதல் கவிதை எழுதினால் நன்றாக இருக்கும்..//

ஏற்கனேவே கொஞ்சம் இழுதியிருக்கேன்

நன்றி @@ நட்புடன் ஜமால்

நன்றி @@ ஸ்ரீ

நன்றி @@ வால்பையன்
//எனக்கும் அதே ஃபீலிங் தான்!//
பையனா? பொண்ணா?

நன்றி @@ பிரியமுடன்...வசந்த்ரொம்ப

//அனுபவித்து சிலாகிச்சு எழுதியிருக்கிங்க கதிர்//

ஆமாம் வசந்த்

//குட்டி என்ன படிக்குறான்?//
முதல் வகுப்பு (பெண்)

நன்றி @@ ச.செந்தில்வேலன்(
//உங்கள் செல்லத்திற்கு எங்கள் ஆசிகள்//
மிக்க நன்றி

நன்றி @@ கலகலப்ரியா


நன்றி @@ SUMAZLA/சுமஜ்லா

நன்றி @@ சந்ரு

நன்றி @@ PITTHAN said...
//en kan munnal en annanin kulanthai therinthal.//
மிக்க மகிழ்ச்சி

நன்றி @@ ஆ.ஞானசேகரன்

விமலரூபன் said...

உன்னை உறங்க வைக்க கதை சொல்லி
உனக்குமுன் உறக்கத்தில் குளறும் என்னை
தட்டியெழுப்பி கைகொட்டும் சிரிப்பு

அருமையான மனதை தொடும் வரிகள்.....

குடுத்து வைத்த குழந்தைக்கு என் வழ்த்துக்கள்

-Niru

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நிரூ

//குடுத்து வைத்த குழந்தைக்கு என் வழ்த்துக்கள்//

மிக்க நன்றி

நாகா said...

As usual very nice and touching..

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நாகா

என்ன ஆச்சு... ஒரு மாதமாக பார்க்க முடியவில்லை. நலம்தானே

மாதவராஜ் said...

ரசித்தேன் நண்பரே!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ மாதவராஜ்

தங்கள் தொடர் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

இது நம்ம ஆளு said...

அருமை

ஈரோடு கதிர் said...

நன்றி @@ இது நம்ம ஆளு

நாஞ்சில் நாதம் said...

வாவ் சூப்பர். குழந்தைங்களை பற்றி படிகிறதே குதுகலம்தான்

Raj said...

எளிமையாக எழுதியிருக்கீர்கள். நன்று . இப்படி பட்ட கவிதைகள் தமிழுக்கு தேவை . சிலர் கற்பனை மிகுதியால் கவிதைகளை கடினப்படுத்தி விடுவார்கள் . இப்படித்தான் இருக்க வேண்டும் . உங்களுக்கு அனுபவம் இருந்திருந்தாலும் சில உணர்வுகளை சொல்ல தனியாக சொற்கள் தேவைப்படும் . அதை நன்கு தேர்ந்தெடுத்திருகீர்கள் . தொடரட்டும் உன் பயணம் .

ஈரோடு கதிர் said...

நண்றி @@ நாஞ்சில் நாதம்


நன்றி @@ இராஜ்குமார் said...

//உங்களுக்கு அனுபவம் இருந்திருந்தாலும் சில உணர்வுகளை சொல்ல தனியாக சொற்கள் தேவைப்படும் . அதை நன்கு தேர்ந்தெடுத்திருகீர்கள்//

கூர்ந்து கவனித்தமைக்கு நன்றி இராஜ்குமார்

வேதன் said...

அனுபவத்தை வார்த்தைகளாய் வடிக்கும்போது
படிப்பவர்கள் அனுபவித்த சுகம் தரும் திறமை
ஒரு சிலருக்கே! நீங்கள் அந்த வகை!

கண்ணகி said...

கவிக்கு ஒரு கவிதைக்குட்டி. அழகு.

Kathir said...

ரொம்ப நல்லா இருக்குண்ணே...

கிருத்திகாதரன் said...

உன்னை உறங்கவைக்கக் கதை சொல்லி
உனக்குமுன் உறக்கத்தில் குளறும் என்னைத்
தட்டியெழுப்பி கை கொட்டும் சிரிப்பு...

அருமை..இது எங்கும் நடக்கிறதா? செம..

Prapavi said...

அருமை, அப்பா! அருமையான மகள்! :-)

Unknown said...

மகளாய் இருப்பதே வரம்.மகளின் அசைவுகளையும்,குறும்புகளையும் கவிதையாய் பார்க்கும் தகப்பனின் மகளாய் இருப்பது பெரும்பேறு...வாழ்த்துக்கள் ஒரு பொறுப்பான அப்பாவிற்க்கு