ஒலிக்கும் கடைசிக்குரல்


விருந்தாளிபோல் வந்துபோகும்
பட்டணத்தில் பணம் சேர்க்கும்
ஒற்றை மகனின் சின்ன குடும்பம் ...

பிஞ்சுப் பிள்ளையை பஞ்சுப்பொதியாய்
கட்டியணைத்து கன்னம் இழைக்க
காத்துக்கிடக்கும் கருத்த கைகள்...

நாசித்துவாரங்கள் ஏங்கிக் கிடக்கும்
நகரத்து வர்ணம் பூசிய
பேரக்குழந்தையின் வாசம்...

கேட்க ஆளில்லாமல்
மறந்து கொண்டிருக்கும் கதைகளோடு
முதுமை தவழும் கொடுந்தனிமையில்...

செல்லமாய் தடவி வளர்த்து
சித்திரைத் திருவிழாவில்
வெட்டி சாப்பிட்ட ஆடு...

பால் வற்றும் வரை மட்டும்
பச்சைப்புல் போட்டு பராமரித்து
விற்றுத் தீர்த்த கிடாய் கன்று...

டிப் பட்டத்திற்கு பிறகு
அடிமாடாக விலைபேசி விற்ற
ஓய்ந்து போன உழவு மாடு...

லித்துக் கொண்டேயிருக்கிறது
ஒவ்வொன்றின் கடைசிக்குரலும்
குறுகுறுக்கும் குற்ற உணர்வோடு...




முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

47 comments:

vasu balaji said...

அருமையா முதுமையின் ஏக்கம் சொல்லி இருக்கீங்க. வலி உணர முடிகிறது.

இரும்புத்திரை said...

ஒரே நாள்ல இத்தன பேரு கவிதை எழுதுன நான் எதுக்கு எதிர் கவிதைப் போட

கவிதை ரொம்ப நல்லா இருக்கு

//கேட்க ஆளில்லாமல்
மறந்து கொண்டிருக்கும் கதைகளோடு
முதுமை தவழும் கொடுந்தனிமையில்...//

கதை சொல்ல ஆளில்லாமல்
மற்றவர்களை விளையாட்டில் கொல்லும்
இளமை ததும்பும் குழந்தை

கை சும்மாவே இருக்க மாட்டேங்குது

அகல்விளக்கு said...

வேதனை மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.

நிதர்சனத்தின் கவிதை.

அருமை நண்பா.............

பிரபாகர் said...

//ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
ஒவ்வொன்றின் கடைசிக்குரலும்
குறுகுறுக்கும் குற்ற உணர்வோடு...
//

வாழ்வில் நான் சந்திக்க விரும்பாதது முதுமை, அதிலும் மூதோர் சொன்னது போல் முதுமையில் வறுமை...
மனமெல்லாம் பாரமாயிருக்கிறது, படித்தவுடன்...

நல்ல பதிவு.

பிரபாகர்.

க.பாலாசி said...

//விருந்தாளிபோல் வந்துபோகும்
பட்டணத்தில் பணம் சேர்க்கும்
ஒற்றை மகனின் சின்ன குடும்பம் ...
பிஞ்சுப் பிள்ளையை பஞ்சுப்பொதியாய்
கட்டியணைத்து கன்னம் இழைக்க
காத்துக்கிடக்கும் கருத்த கைகள்...//

என்ன செய்வது......
இழந்த இடம்தனையும்...
சரியும் சரீரமதையும்...
குன்றிய குலம்தனையும்...
மீட்டெடுக்க அவள் ஈன்ற,
மகனுக்கு வேறென்ன வழி என்று தெரியவில்லையே...

மறுபடியும் வீட்டுக்கு போகனும்னு தோன்றுகிறது தலைவா... நல்ல ஆழமான வரிகள்...

//செல்லமாய் தடவி வளர்த்து
சித்திரைத் திருவிழாவில்
வெட்டி சாப்பிட்ட ஆடு...//

//பால் வற்றும் வரை மட்டும்
பச்சைப்புல் போட்டு பராமரித்து
விற்றுத் தீர்த்த கிடாய் கன்று...//

//ஆடிப் பட்டத்திற்கு பிறகு
அடிமாடாக விலைபேசி விற்ற
ஓய்ந்து போன உழவு மாடு...//

எல்லாமே சிந்திக்க தக்க வரிகள் அன்பரே... யோசிச்சு பாத்தா, நாம் வளர்க்கும் பிராணிகள் எல்லாத்தையும் முடிவிலையோ, அல்லது இடையிலையோ...ஸ்வாகா பண்ணிடுறோம். எப்படிதான் ஜீரணம் ஆவுதுன்னே தெரியல..

வால்பையன் said...

நகரத்தில் இதற்கு வேலையில்லையே!

ப்ரியமுடன் வசந்த் said...

படம் பார்த்ததும் எங்க அப்பத்தா ஞாபகம் வந்துடுச்சு கதிர் நன்றி

கவிதையில் முதுமையின் ஏக்கம்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்..

இன்றைய சூழ்நிலையை மிக அழகாக வடித்துள்ளீர்கள்.

பலர் கவனிக்க அல்லது பதிய மறக்கும் விடயங்களை நீங்கள் எழுதுவது அழகு.

இதையே பேரப்புள்ளைகளின் நிலையில் இருந்து யோசித்தால் எப்படி இருக்கும்?

Unknown said...

அய்யா, நீங்க இனிமேல் கதை எழுதுங்க.
கவிதை எழுதாதீங்க.

பழமைபேசி said...

ப்ச்

காமராஜ் said...

//கேட்க ஆளில்லாமல்
மறந்து கொண்டிருக்கும் கதைகளோடு
முதுமை தவழும் கொடுந்தனிமையில்//

simply super and high rated poetic

நாகராஜன் said...

கதிர்,

அருமையா உணர்த்தியிருக்கீங்க... முதுமையில் தனிமை, மிகவும் கொடுமைங்க... அதுவும் கொஞ்சம் வறுமையும் சேர்ந்திருசுன்னா ரொம்பவுமே கொடுமைங்க...

நட்புடன் ஜமால் said...

ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
ஒவ்வொன்றின் கடைசிக்குரலும்
குறுகுறுக்கும் குற்ற உணர்வோடு...]]

உண்மை.

sakthi said...

பால் வற்றும் வரை மட்டும்
பச்சைப்புல் போட்டு பராமரித்து
விற்றுத் தீர்த்த கிடாய் கன்று...


arumai

ஆரூரன் விசுவநாதன் said...

மாடு கன்றைத் தேடுவதும், கன்று மாட்டைத்தேடுவதும், நாள்தோறும் காணும் காட்சிகள். மனிதனும் இதற்கு மாறுபட்டவன் அல்ல. முதுமையினை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள், இதோ, இங்கே ஒரு கன்றின் குரலையும் கேளுங்களேன்
http://www.thiruvilaiyattam.com/2009/08/blog-post_12.html
அன்புடன்
ஆரூரன்.

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
அருமையா முதுமையின் ஏக்கம் சொல்லி இருக்கீங்க. வலி உணர முடிகிறது.//

நன்றி வானம்பாடிகள் ஐயா

ஈரோடு கதிர் said...

//இரும்புத்திரை அரவிந்த் said...
ஒரே நாள்ல இத்தன பேரு கவிதை எழுதுன நான் எதுக்கு எதிர் கவிதைப் போட//

ஆஹா

//கதை சொல்ல ஆளில்லாமல்
மற்றவர்களை விளையாட்டில் கொல்லும்
இளமை ததும்பும் குழந்தை//

குழந்தைக்கு இளமை ததும்புதா

எனக்கும்... கை சும்மாவே இருக்க மாட்டேங்குது

நன்றி அரவிந்த்

ஈரோடு கதிர் said...

//அகல் விளக்கு said...
நிதர்சனத்தின் கவிதை.
//

நன்றி அகல்

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
மனமெல்லாம் பாரமாயிருக்கிறது, படித்தவுடன்...//

பிரபா இது கிராமத்தின் பெரும்பாலான பாட்டிகளின் கதை

நன்றி நண்பா

ஈரோடு கதிர் said...

//க. பாலாஜி said...
என்ன செய்வது......
இழந்த இடம்தனையும்...
சரியும் சரீரமதையும்...
குன்றிய குலம்தனையும்...
மீட்டெடுக்க அவள் ஈன்ற,
மகனுக்கு வேறென்ன வழி என்று தெரியவில்லையே...//

பின்னூட்டமும் கவிதையாகவே

//மறுபடியும் வீட்டுக்கு போகனும்னு தோன்றுகிறது தலைவா... நல்ல ஆழமான வரிகள்...//

அடிக்கடி போங்க பாலாஜி

//யோசிச்சு பாத்தா, நாம் வளர்க்கும் பிராணிகள் எல்லாத்தையும் முடிவிலையோ, அல்லது இடையிலையோ...ஸ்வாகா பண்ணிடுறோம்.//

பாலாஜி.... ஸ்வாக பண்ணத்தானே வளர்க்கிறோம்

ஈரோடு கதிர் said...

//வால்பையன் said...
நகரத்தில் இதற்கு வேலையில்லையே!//

பாட்டிகள் எல்லாம் பெரும்மாலும் கிராமத்தில் தானே இருக்கிறார்கள்.

ம்ம்ம்.... நகரத்தில் முதியோர் இல்லம்

கார்த்திகைப் பாண்டியன் said...

சான்சே இல்லை.. அருமை

ஈரோடு கதிர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
படம் பார்த்ததும் எங்க அப்பத்தா ஞாபகம் வந்துடுச்சு கதிர் நன்றி//

இதுபோதும் இப்போதைக்கு

நன்றி வசந்த்

ஈரோடு கதிர் said...

//ச.செந்தில்வேலன் said...
பலர் கவனிக்க அல்லது பதிய மறக்கும் விடயங்களை நீங்கள் எழுதுவது அழகு.//

நன்றி செந்தில்

//இதையே பேரப்புள்ளைகளின் நிலையில் இருந்து யோசித்தால் எப்படி இருக்கும்?//
இன்னொரு கவிதை பிறக்கும் நண்பரே

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி said...
ப்ச்//

வணக்கம் மாப்பு

ஈரோடு கதிர் said...

//காமராஜ் said...
simply super and high rated poetic
//

நன்றி நண்பரே.. நலமா இருக்கிறீர்களா?

ஈரோடு கதிர் said...

// ராசுக்குட்டி said...
அருமையா உணர்த்தியிருக்கீங்க... முதுமையில் தனிமை, மிகவும் கொடுமைங்க... அதுவும் கொஞ்சம் வறுமையும் சேர்ந்திருசுன்னா ரொம்பவுமே கொடுமைங்க...//

பெரும் வறுமையே பாசம்தான் ...

நன்றி ராசுக்குட்டி

ஈரோடு கதிர் said...

//sakthi said...
arumai//

நன்றி சக்தி

ஈரோடு கதிர் said...

//C said...
அய்யா, நீங்க இனிமேல் கதை எழுதுங்க.//

கதை எழுத தெரியாது

ஈரோடு கதிர் said...

//நட்புடன் ஜமால் said...
உண்மை.//

நன்றி ஜமால்

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
//முதுமையினை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்//

நன்றி ஆரூரன்

//இதோ, இங்கே ஒரு கன்றின் குரலையும் கேளுங்களேன்
http://www.thiruvilaiyattam.com/2009/08/blog-post_12.html//

கேட்டேன். நன்றி நண்பரே

ஈரோடு கதிர் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
சான்சே இல்லை.. அருமை//

நன்றி நண்பா

சீமான்கனி said...

//நாசித்துவாரங்கள் ஏங்கிக் கிடக்கும்
நகரத்து வர்ணம் பூசிய
பேரக்குழந்தையின் வாசம்...//

அருமை அண்ணே....
பெற்றோரை இறுதிவரை கூடவே வைத்திருக்க ஆசையும் பொறுப்பும் கூடி இருக்கிறது......

கிறுக்கல்கள்/Scribbles said...

முதுமை மிகக்கொடுமை அதை உணர்த்தியவிதம் அருமை.
நாளை நாமும் படுவோம் இந்த பாடு எச்சரிக்கை மணியே இந்த பதிவு.
கதிர்!
உண்மைகள் மிகச் சுடுகின்றன.
உமது வரிகள் நெஞ்சை தொடுகின்றன.

ஈரோடு கதிர் said...

seemangani said...
//பெற்றோரை இறுதிவரை கூடவே வைத்திருக்க ஆசையும் பொறுப்பும் கூடி இருக்கிறது......//

மிக்க மகிழ்ச்சி தோழா

ஈரோடு கதிர் said...

//Sampathkumar said...
நாளை நாமும் படுவோம் இந்த பாடு எச்சரிக்கை மணியே இந்த பதிவு. //

நன்றி சம்பத்

நாஞ்சில் நாதம் said...

///விருந்தாளிபோல் வந்துபோகும்
பட்டணத்தில் பணம் சேர்க்கும்
ஒற்றை மகனின் சின்ன குடும்பம் ...////


ஆஆஆஆஆஆஆஆ

பெறறோரை மறந்த பிள்ளைகளுக்கும் முதுமையில் இந்த நிலைதான்

ஈரோடு கதிர் said...

//நாஞ்சில் நாதம் said...
பெறறோரை மறந்த பிள்ளைகளுக்கும் முதுமையில் இந்த நிலைதான்//

ஆமாம் நாஞ்சில்

நன்றி நாஞ்சில்

jothi said...

//பால் வற்றும் வரை மட்டும்
பச்சைப்புல் போட்டு பராமரித்து
விற்றுத் தீர்த்த கிடாய் கன்று...//

kalakkal kathir

ஈரோடு கதிர் said...

//jothi said...
kalakkal kathir//

நன்றி ஜோதி

கீர்த்தி said...

simply superb

ஈரோடு கதிர் said...

//கீர்த்தி said...
simply superb//

நன்றி கீர்த்திமா...

நிறைய படி...
நிறைய எழுத முயற்சி செய்
வாழ்த்துகள் கீர்த்தி

Jerry Eshananda said...

ரியலி அமேசிங்.

நாடோடி இலக்கியன் said...

கதிர்,
எல்லோரும் சொல்லிட்டாங்க, நானென்ன சொல்றது.

பெரிய உயரங்கள் காத்திருக்கு அவ்வளோ தான்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ jerry eshananda

நன்றி @@ நாடோடி இலக்கியன்

Unknown said...

ம்ம்ம்...........ஒலித்துகொண்டே இருக்கும் ஒவ்வொன்றின் கடைசிகுரலும்,குற்றஉணர்வும்

Unknown said...

ம்ம்ம்...........ஒலித்துகொண்டே இருக்கும் ஒவ்வொன்றின் கடைசிகுரலும்,குற்றஉணர்வும்