எனக்கு பிடிக்காத ஏழு போலீஸ்


------------------------------------------------------------------------------
மத்தியான காட்சி படம் பார்த்துட்டு, மாலை வெயில் கண் கூச டிரிள்ஸ் போற வழியில எதிர் பக்கம் வெள்ளைக் கலர் புல்லட்ல வரும் டிராபிக் போலீஸ்.
------------------------------------------------------------------------------
சுத்தி வரவேண்டுமே? சில நூற அடி தூரம்தானேனு ஒரு வழிப் பாதையில் வாகனத்தை நுழைக்க, மறைவான நிழலில் இருந்து பாய்ந்து வந்து பிடிக்கும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
செல் போன் அடிக்க “அப்புறம் கூப்பிடரேனு” சொல்லலாம்னு செல் போன எடுத்து காதில் வைக்க, பக்கத்தில் ஜீப்பில் வந்து நம் வண்டியை ஓரம் கட்டச் சொல்லும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
தங்கமணி வீட்டில் இல்லைனு ஒரு பியர் சாப்பிட்டு(!!!) மெயின் ரோடுல போலீஸ் சோதிப்பாங்கனு, பாதுகாப்பா சந்து பொந்தெல்லாம் போயி வீடு இருக்கிற தெருவிற்கு போனா, முக்குல இரவு சோதனைங்கற பேருல வாய ஊதுன்னு சொல்ற போலீஸ்.
------------------------------------------------------------------------------
சிக்னல்ல யாரும் இல்லைனு சட்டுனு தாண்டும் போது, எங்கிருந்தென்றே தெரியாம கப் என பிடித்து, சாவியை எடுத்துக் கொள்ளும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
இடம் காலியா இருக்கேனு நிறுத்திட்டு ஹோட்டல்ல சாப்பிட்டு வந்து பார்க்கும் போது, நோ பார்கிங்னு ஏரியானு சொல்லி வண்டிய கொக்கி மாட்டி தூக்கிக் கொண்டிருக்கும் போலீஸ்.
------------------------------------------------------------------------------
ஏசி கார்ல செல் போன் பேசிட்டு ஓட்டறவன விட்டுட்டு, சைக்கிளில் டிரிப்ள்ஸ் வர்றவனோட டயர்ல இருந்து காற்றை பிடுங்கி விடும் காமெடி போலீஸ்.
------------------------------------------------------------------------------


முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

19 comments:

manjoorraja said...

இவை அனைத்தும் ஒரே போலீஸின் ஏழு வெவ்வேறு முகங்களே.

இதிலெல்லாம் மாட்டியவரை தான் ஏழு இடங்களில் போலிஸில் மாட்டியவரின் அனுபவம் என போட்டிருக்கலாம் அல்லது போலிசில் மாட்டக்கூடிய முக்கியமான ஏழு இடங்கள் எனவும் போட்டிருக்கலாம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர், கலக்கலாக கலவையா வருது உங்க கிட்ட இருந்து வர்ற பதிவுகள் :))

ஆமா, தங்கமணி கதைய சொல்றீங்களே. இத நான் எதிர்பாக்கலயே :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆக.. எல்லாத்திலேயும் தப்பு நம்ம பக்கம் இருக்கு :))))))

பழமைபேசி said...

//மஞ்சூர் ராசா said...
இவை அனைத்தும் ஒரே போலீஸின் ஏழு வெவ்வேறு முகங்களே.
//

ஐயா, அதெப்படி உங்களுக்குத் தெரியுமுங்க? இஃகிஃகி, கோயமுத்தூர் போன கொஞ்ச நாட்கள்ல இந்த அனுபவமும் கிடைச்சதுங்களா??

பிரபாகர் said...

கதிர்,

வித்தியாசமாய் யோசித்து பதிக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. இன்னும் மூன்றை சேர்த்து பத்தாக ஆக்கியிருக்கலாம். தொடருங்கள்...

பிரபாகர்.

ப்ரியமுடன் வசந்த் said...

சரி சரி எவ்ளோ பணம் இதுவரைக்கும் லஞ்சமா குடுத்துருக்கீங்க?

ட்ராபிக் போலீஸ்ல மட்டும்தான் மாட்டுனீங்களா?

Azhagan said...

In all the categories, the fault lies with you, not the POLICE. so , i really wonder why you DONT like these POLICE.
We should hate POLICE when they go outside the law. As long as they are within the purview of the law and are trying to uphold it, we should salute them.
Have we become so unsighted to say these are "mistakes" by the POLICE and not by us??

நட்புடன் ஜமால் said...

செல் போன் அடிக்க “அப்புறம் கூப்பிடரேனு” சொல்லலாம்னு செல் போன எடுத்து காதில் வைக்க, பக்கத்தில் ஜீப்பில் வந்து நம் வண்டியை ஓரம் கட்டச் சொல்லும் போலீஸ்.]]


இது சிரிப்பு

நட்புடன் ஜமால் said...

ஏசி கார்ல செல் போன் பேசிட்டு ஓட்டறவன விட்டுட்டு, சைக்கிளில் டிரிப்ள்ஸ் வர்றவனோட டயர்ல இருந்து காற்றை பிடுங்கி விடும் காமெடி போலீஸ். ]]


இது வருத்தம்.

ஈரோடு கதிர் said...

//மஞ்சூர் ராசா said...
இவை அனைத்தும் ஒரே போலீஸின் ஏழு வெவ்வேறு முகங்களே.//

சரிங்க
நன்றி ராசா

//ச.செந்தில்வேலன் said...
ஆமா, தங்கமணி கதைய சொல்றீங்களே. இத நான் எதிர்பாக்கலயே :)//

நம்மூர்ல இதுதான் அதிகமா மாட்டறது
நன்றி செந்தில்

//குறை ஒன்றும் இல்லை !!! said...
ஆக.. எல்லாத்திலேயும் தப்பு நம்ம பக்கம் இருக்கு//

ஆமாம் தலைவா..

வருகைக்கு நன்றி

//பழமைபேசி said...
//கோயமுத்தூர் போன கொஞ்ச நாட்கள்ல இந்த அனுபவமும் கிடைச்சதுங்களா??//

நன்றி மாப்பு

//பிரபாகர் said...
வித்தியாசமாய் யோசித்து பதிக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. இன்னும் மூன்றை சேர்த்து பத்தாக ஆக்கியிருக்கலாம். தொடருங்கள்...//

பத்துதான் சலிச்சுபோச்சேனு சமாளிக்கல
இன்னும் மூன்று எழுத சோம்பேறித்தனம்

நன்றி பிரபா


//பிரியமுடன்...வசந்த் said...
சரி சரி எவ்ளோ பணம் இதுவரைக்கும் லஞ்சமா குடுத்துருக்கீங்க?
ட்ராபிக் போலீஸ்ல மட்டும்தான் மாட்டுனீங்களா?//

குடுக்கமாட்டமுல்ல, கெஞ்சிக்கூத்தாடி வந்துருவமுல்ல
எப்ப்ப்பூபூபூபூடி!!!!

//Azhagan said...
In all the categories, the fault lies with you, not the POLICE. so , i really wonder why you DONT like these POLICE.
We should hate POLICE when they go outside the law. As long as they are within the purview of the law and are trying to uphold it, we should salute them.
Have we become so unsighted to say these are "mistakes" by the POLICE and not by us??//

அழகண்ணா... இது மொக்கைக்காக எழுதினது... ரொம்பா சீரியஸா எடுத்துக்காதீங்க

//நட்புடன் ஜமால் said...
//இது சிரிப்பு//
இஃகி இஃகி

//இது வருத்தம்.//
ப்ச்

நன்றி ஜமால்

க.பாலாசி said...

//தங்கமணி வீட்டில் இல்லைனு ஒரு பியர் சாப்பிட்டு(!!!) மெயின் ரோடுல போலீஸ் சோதிப்பாங்கனு, பாதுகாப்பா சந்து பொந்தெல்லாம் போயி வீடு இருக்கிற தெருவிற்கு போனா, முக்குல இரவு சோதனைங்கற பேருல வாய ஊதுன்னு சொல்ற போலீஸ்.//

ரொம்ப அனுபவிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அப்படியா?

எப்படிதான் போலீஸ்கிட்டேர்ந்து தப்பிக்கிறதுன்னு தெரியல. நானும் அததான் யோசிக்கிறேன். ஏதாவது இருந்தா சொல்லுங்களேன்.

ஈரோடு கதிர் said...

//க. பாலாஜி said...
எப்படிதான் போலீஸ்கிட்டேர்ந்து தப்பிக்கிறதுன்னு தெரியல. //

வாங்க டாஸ்மாக்ல ஒக்காந்து யோசிப்போம்

அமுதா கிருஷ்ணா said...

தங்கமணி இல்லைனா வெறும் பியர் மட்டும் தானா??? அது சின்ன பசங்க குடிக்கிற ஹெல்த் ட்ரிங்க இல்லையா?

ஈரோடு கதிர் said...

//அமுதா கிருஷ்ணா said...
அது சின்ன பசங்க குடிக்கிற ஹெல்த் ட்ரிங்க இல்லையா?//

அக்கா.. நானும் மனசுல இன்ன சின்னப்பையன் தானுங்கோ

வருகைக்கு நன்றிங்க

வால்பையன் said...

அரசுக்கு நிறைய தண்டம் கட்டியிருப்பிங்க போலயே!

ஈரோடு கதிர் said...

//வால்பையன் said...
அரசுக்கு நிறைய தண்டம் கட்டியிருப்பிங்க போலயே!//

வாங்க அருண்... பாலாஜி ஏதோ சந்தேகம் கேட்டாரு... போன்ல உங்கள கேக்க சொல்லியிருக்கேன்

Unknown said...

எனக்கும் இந்த போலீச புடிக்காதுங்க (அது என்னமோ தெரியல அவங்களுக்கும் நம்மள புடிக்க மாட்டிங்குது..)..

யாசவி said...

So u don't want police to work??

Of course hide in One way to catch is for collection

ஈரோடு கதிர் said...

//பட்டிக்காட்டான்.. said...
அது என்னமோ தெரியல அவங்களுக்கும் நம்மள புடிக்க மாட்டிங்குது..)..//

இல்லீங்க அவங்களுக்கும் நம்மள ரொம்ப பிடிக்கிறதுதான் பிரச்சனையே...

நன்றி பட்டிக்காட்டான்

//யாசவி said...
So u don't want police to work??
Of course hide in One way to catch is for collection//

யாசவி ஒரு மொக்கைக்கு நீங்க சீரியஸ் ஆனா....
அவ்வ்வ்வ்வ்வ் அழுதுறுவேன்