சுதந்திரமாக...
இன்னொருவன்
வாழ்வை பிடுங்க
குறுக்கு வழிகளை
கண்டுபிடித்தோம்...
தூங்கிக் கொண்டிருந்த
சாதிகளை தூசி தட்டி
கட்சிகள் ஆரம்பித்து
ஆட்சிகளை பிடித்தோம்...
வற்றாமல்
ஓடிக்கொண்டிருந்த
ஆறுகளில் மெல்ல
நஞ்சை கலந்தோம்...
வீசிக்கொண்டிருந்த
காற்றை கற்பழித்து
விஷ விந்துவை
திணித்தோம்...
ரெண்டாவது
சனிக்கிழமைல வந்து
லீவு போச்சேனு
மனசு நொந்தோம்...
கடைசியாக
இப்போ காசுக்கு
ஓட்டை விற்க
கற்றுக் கொண்டோம்...
சுதந்திரத்தை
சொத்தைனு சொல்ல
நமக்கென்ன
யோக்கிதை இருக்கு...!!!???
முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
21 comments:
எப்பா...உண்மை குத்துது.
கருத்து நல்லாயிருக்குது. ஆனா சந்திப்பிழைகள் இருக்கு.
//டக்ளஸ்... said...
எப்பா...உண்மை குத்துது.
//
இவருக்கு குத்துதாம்.... எனக்கு சுடுது!
முதலில் ஏதோ அரசியல்வாதிகளைப் புரட்டி எடுக்கப்போகிறீர் என நினத்தால், கடைசியில், பாமரமகக்ளைப்பார்த்து, என்ன அருகதை எனக் கேட்டுவிட்டீர்!
கவிதை எங்கோ தொடங்கி எங்கோ முடிகிறது.
அனவரும் குற்றவாளிகள் அல்லர்.
//தூங்கிக் கொண்டிருந்த
சாதிகளை தூசி தட்டி
கட்சிகள் ஆரம்பித்து
ஆட்சிகளை பிடித்தோம்...//
ஆமாம்
ஆமாம்
ஆமாம்!
//ரெண்டாவது
சனிக்கிழமைல வந்து
லீவு போச்சேனு
மனசு நொந்தோம்...//
அட ஆமால்ல
சுதந்திரமாக என்னவெல்லாம் செய்யக் கற்றுக் கொண்டோம் என்பதை அருமையா சொல்லிட்டீங்க. சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை நம்ம மக்கள் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் விளைவுகள் இவை என நான் சொல்லியிருக்கிறேன் என் சுதந்திரதினப் பதிவில்!
உண்மைதான், சுதந்திரத்தை ‘சொத்தை’ என சொல்ல எவருக்கும் இல்லைதான் யோக்கியதை.
சுதந்திரதின வாழ்த்துக்கள் கதிர்!
தூங்கிக் கொண்டிருந்த
சாதிகளை தூசி தட்டி
கட்சிகள் ஆரம்பித்து
ஆட்சிகளை பிடித்தோம்...]]
செம செம செம
உண்மை சுடும், ஸ்.... உங்களின் கவிதையும் சுளீரென சுடுகிறது.
உள்ளுக்குள் இருக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடு வெகு காரமாய்...
வழக்கமான உங்களின் மிளிர்ச்சி இல்லை, கோபத்தினாலோ?
பிரபாகர்.
//வீசிக்கொண்டிருந்த
காற்றை கற்பழித்து
விஷ விந்துவை
திணித்தோம்...//
unmaithan. oppukollvaithai thavira verondrum illai ennidam.
ஆமாம் ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள் தோழா.
அது சந்தைப்பொருளல்லவே.
கடைசியாக
இப்போ காசுக்கு
ஓட்டை விற்க
கற்றுக் கொண்டோம்..
அருமை கதிர்
//..வற்றாமல்
ஓடிக்கொண்டிருந்த
ஆறுகளில் மெல்ல
நஞ்சை கலந்தோம்...//
நொய்யல் ஆறு மட்டும் தானா, இல்ல காவேரியுமா..??
//டக்ளஸ்... said...
எப்பா...உண்மை குத்துது.//
எப்போதுமே உண்மை அதைத்தான் செய்யும்
நன்றி டக்ளஸ்
//ஊர்சுற்றி said...
கருத்து நல்லாயிருக்குது. ஆனா சந்திப்பிழைகள் இருக்கு.//
திருத்திக்கொள்கிறேன்
நன்றி ஊர்சுற்றி
//பழமைபேசி said...
இவருக்கு குத்துதாம்.... எனக்கு சுடுது!//
நன்றி மாப்பு
//வெண் தாடி வேந்தர் said...
//பாமரமகக்ளைப்பார்த்து, என்ன அருகதை எனக் கேட்டுவிட்டீர்!//
110 கோடியில் மொத்தம் 1 லட்சம் பேர் அரசியல்வாதிகளாக இருப்பார்களா?
சாதாரண மனிதனின் அலட்சியமே அரசியல்வாதிகளின் வெற்றி
நன்றி வெண்தாடி வேந்தரே
வால்பையன் said...
//ஆமாம்
ஆமாம்
ஆமாம்!//
நன்றி அருண்
//பிரியமுடன்.........வசந்த் said...
அட ஆமால்ல//
நன்றி வசந்த்
//ராமலக்ஷ்மி said...
சுதந்திரமாக என்னவெல்லாம் செய்யக் கற்றுக் கொண்டோம் என்பதை அருமையா சொல்லிட்டீங்க//
நன்றி
//சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை நம்ம மக்கள் புரிந்து கொள்ளாததால் ஏற்படும் விளைவுகள் இவை என நான் சொல்லியிருக்கிறேன் என் சுதந்திரதினப் பதிவில்! //
உங்கள் பதிவு அருமை
//உண்மைதான், சுதந்திரத்தை ‘சொத்தை’ என சொல்ல எவருக்கும் இல்லைதான் யோக்கியதை.//
நன்றி ராமலக்ஷ்மி
//நட்புடன் ஜமால் said...
செம செம செம//
நன்றி ஜமால்
//பிரபாகர் said...
உண்மை சுடும், ஸ்.... உங்களின் கவிதையும் சுளீரென சுடுகிறது.
உள்ளுக்குள் இருக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடு வெகு காரமாய்...//
நன்றி பிரபா
//வழக்கமான உங்களின் மிளிர்ச்சி இல்லை, கோபத்தினாலோ?//
கோபம் மற்றும் அவசரத்தினால்
//August 14, 2009 6:54 PM
unmaithan. oppukollvaithai thavira verondrum illai ennidam.//
நன்றி பாலாஜி...
சொந்த ஊரில் சுதந்திரமாக இருக்கிறீர்கள்
மகிழ்ச்சி
//காமராஜ் said...
அது சந்தைப்பொருளல்லவே.//
ஆமாம் நண்பரே
கருத்திற்கு நன்றி
//sakthi said...
கடைசியாக
இப்போ காசுக்கு
ஓட்டை விற்க
கற்றுக் கொண்டோம்..
அருமை கதிர்//
மிகப்பெரிய அவலம் இது
நன்றி சக்தி
/பட்டிக்காட்டான்.. said...
நொய்யல் ஆறு மட்டும் தானா, இல்ல காவேரியுமா..??//
நொய்யல் செத்துவிட்டது, காவிரி...பவானி குமாரபாளையத்திலிருந்து நோய்கண்டிருக்கிறது
சிறப்பான பதிவு கதிர். துண்டுப் பிரசுரமாக எல்லா பக்கமும் ஒட்ட வேண்டும்!
நம் நாகரிகத்தையே கேள்வியாக்கி வருகிறோம் நம் செய்கைகளால் :((
//ச.செந்தில்வேலன் said...
துண்டுப் பிரசுரமாக எல்லா பக்கமும் ஒட்ட வேண்டும்!
நம் நாகரிகத்தையே கேள்வியாக்கி வருகிறோம் நம் செய்கைகளால்//
பகிர்வு மகிழ்ச்சியளிக்கிறது
நன்றி செந்தில்
நல்ல கருத்து
//தியா said...
நல்ல கருத்து//
நன்றி தியா
Really Good my dear..!
Really Good my dear ..!
Wonderful! சுதந்திரமாய் குறை மட்டும் சொல்ல கற்றுக் கொண்டோம்!
Post a Comment