விலைபோகாத பகல்






விலைமகளாய் வீழ்த்தப்பட்ட போது
நசுங்கிச் செத்துப்போனது கற்பு,
இதுவே வாழ்க்கையென பழகிட
காமம் செத்து வெறும் அலுப்பாய்...

கெட்ட வாசனையோடு இயங்குபவனின்
சட்டைப்பையில் உறங்கும் கசங்கிப்போன,
அழுக்கு நாற்றம் பிடித்த பணத்தாள்களின்
எண்ணிக்கையில் கிளர்ச்சி கொள்கிறது மனம்...

வாடிக்கையாளனின் தோற்ற காதலும்
தூர்ந்து போன வாழ்க்கையும்
தீராத காமத்தை வெல்வதாக
மீண்டும் மீண்டும் தோற்றுப்போகிறது...

சோம்பிக்கிடக்கிறது தாகம் தீராத கனவுகள்
சாயக்கழிவுகளில் செத்துப்போன நிலம் போல்
விடி காலையாய் வடிகின்ற இளமையையும்,
வற்றப்போகும் வருமானத்தையும் எண்ணி...

ல்லாத காமம் காத்துக் கிடக்கிறது
சாலையோர தேநீர் கடையின்
ஒடுங்கிய அலுமினியக் குவளையாய்
கொஞ்சம் கவுச்சியோடு...
இன்னுமொரு இரவுக்காக...




பகுதியில் இடம் பிடித்த கவிதை

முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.


36 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

வலி(மை)யான வரிகள். வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை....

பிரபாகர் said...

கதிர்,

ஒரு விலைமகளின் 'விலை போகாத பகல்'... அற்புதமான வரிகளுடன் அசத்தியிருக்கிறீர்கள்.

நண்பா, வரிகளை எங்கே தேடிப்பிடிக்கிறீர்கள்...

எதார்த்தமாகவும், இதயத்தை இறுக்குவதாகவும் இருக்கிறது...

"காமம் செத்து வெறும் அலுப்பாய்..."

"சாயக்கழிவுகளில் செத்துப்போன நிலம் போல்"

"கொஞ்சம் கவுச்சியோடு...
இன்னுமொரு இரவுக்காக"

"கெட்ட வாசனையோடு இயங்குபவனின்
சட்டைப்பையில் உறங்கும் கசங்கிப்போன,
அழுக்கு நாற்றம் பிடித்த பணத்தாள்களின்"

இதை விட சிறப்பாக யாராலும் சொல்ல இயலாது.

வாழ்த்துக்கள்..

நேசமித்ரன் said...

அற்புதம்
சாயக்கழிவுகளில் செத்துப்போன நிலம்

great !!!!

கிறுக்கல்கள்/Scribbles said...

Kathir, I find a fire and anger in you. Yes a poet should have it and he assumes the social responsibility. Keep trying for the betterment of the society. Good. Keep writing.

க.பாலாசி said...

//வாடிக்கையாளனின் தோற்ற காதலும்
தூர்ந்து போன வாழ்க்கையும்
தீராத காமத்தை வெல்வதாக
மீண்டும் மீண்டும் தோற்றுப்போகிறது...//

இப்படிதான்...
விரக்தியும், விரசமும் நிறைந்த
அவன் வாழ்க்கை செத்துப்போகிறது...
செதுக்கப்படாமல்.

தலைவரே எங்கிருந்து இந்த வார்த்தைகள புடிக்கிறீங்க. மிகவும் பொருத்தமான வார்த்தைகள்.

மீண்டும் மீண்டும்...
படிக்கிறேன்...நன்றாக உள்ளது.

அந்த படத்தினை எங்கிருந்து எடுத்தீர்கள். நல்லாயிருக்கு.

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....



தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

தேவன் மாயம் said...

வீரியமான வரிகள்- வலிந்து அழகியலுக்காக எழுதப்படாமல் எழுதியிருப்பது பாராட்டுக்குறியது!!

நிலாமதி said...

நெஞ்சின் வலியில் எழுந்த் நிஜமான் பதிவு . கசங்கி போன நோட்டுகளுக்காய் கசங்கு கிறது அவள் கற்பு .அழகான் வரிகள் சொன்ன தங்களுக்கு பாராட்டு

ummar said...

யாரும் நினைத்து பார்க்கமுடியாத வகையில் உள்ளதை நினைத்து பார்த்து
குறைந்த வரிகளில் நிறைந்த கருத்துக்களை அள்ளி தந்து எல்லோறையும் சிந்திக்க வைத்த சிந்தனையாலருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க நீடுடிகாலம் இவ்வையகம் உள்ளவரை எனதருமை நண்பரே.

Nathanjagk said...

படமும், தலைப்பும் மட்டுமே பார்த்தேன் - படித்தேன். அதுவே ​போதும் என்று தோன்றுகிறது!

நாகா said...

கவிதையால் வருத்தமாகவும் கவிஞரால் பெருமையாகவும் உணர்கிறேன் அண்ணே..! சற்றே பணிச்சுமை அதிகம், எனவே தொடர்ந்து வர மிகவும் தாமதமாகிறது - மன்னியுங்கள்

முரளிகண்ணன் said...

அருமை கதிர்.

Raju said...

\\ஆரூரன் விசுவநாதன் said...

வலி(மை)யான வரிகள். ஆரூரன் \\

Repeat..

ஈரோடு கதிர் said...

நன்றி ஆருரன்

நன்றி பழமைபேசி

//பிரபாகர் said...
எதார்த்தமாகவும், இதயத்தை இறுக்குவதாகவும் இருக்கிறது...//

நன்றி பிரபாகர்

நன்றி நேசமித்ரன்

//Sampathkumar said...
Kathir, I find a fire and anger in you. Yes a poet should have it and he assumes the social responsibility. Keep trying for the betterment of the society. Good. Keep writing.//

Not only a poet, everyone should have social responsibility.
Thank u very much Sampathkumar

//க. பாலாஜி said...

மீண்டும் மீண்டும்...
படிக்கிறேன்...நன்றாக உள்ளது.//

நன்றி பாலாஜி

//அந்த படத்தினை எங்கிருந்து எடுத்தீர்கள். நல்லாயிருக்கு.//

கூகுள் வங்கியிலிருந்துதான்


//தேவன் மாயம் said...
வீரியமான வரிகள்- வலிந்து அழகியலுக்காக எழுதப்படாமல் எழுதியிருப்பது பாராட்டுக்குறியது!!//

நன்றி தேவன்மயம்

//நிலாமதி said...
நெஞ்சின் வலியில் எழுந்த் நிஜமான் பதிவு . கசங்கி போன நோட்டுகளுக்காய் கசங்கு கிறது அவள் கற்பு .அழகான் வரிகள் சொன்ன தங்களுக்கு பாராட்டு//

நன்றி நிலாமதி

//ummar said...
யாரும் நினைத்து பார்க்கமுடியாத வகையில் உள்ளதை நினைத்து பார்த்து
குறைந்த வரிகளில் நிறைந்த கருத்துக்களை அள்ளி தந்து//

நன்றி உம்மர்


//ஜெகநாதன் said...
படமும், தலைப்பும் மட்டுமே பார்த்தேன் - படித்தேன். அதுவே ​போதும் என்று தோன்றுகிறது!//

நன்றி ஜெகன்

//நாகா said...
கவிதையால் வருத்தமாகவும் கவிஞரால் பெருமையாகவும் உணர்கிறேன் அண்ணே..! சற்றே பணிச்சுமை அதிகம், எனவே தொடர்ந்து வர மிகவும் தாமதமாகிறது - மன்னியுங்கள்//

நன்றி நாகா

பொறுமையாக, நேரம் கிடைக்கும் போது வாருங்கள் நாகா

//முரளிகண்ணன் said...
அருமை கதிர்.//

நன்றி முரளிகண்ணன்


//டக்ளஸ்... said...
Repeat..//

நன்றி டக்ளஸ்

ரோஸ்விக் said...

வார்த்தைகள் வலியையும், வண்ணப்படம் வாசனையையும் சொல்லி விட்டன... மிக அருமை நண்பரே!
--ரோஸ்விக்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகான வரிகள் ,அழகான கவிதை.

ஈரோடு கதிர் said...

//ரோஸ்விக் said...
வார்த்தைகள் வலியையும், வண்ணப்படம் வாசனையையும் சொல்லி விட்டன...//

நன்றி ரோஸ்விக்

//ஸ்ரீ said...
அழகான வரிகள் ,அழகான கவிதை.//

நன்றி ஸ்ரீ...

காமராஜ் said...

மிக அழுத்தமான கவிதை.
மிகவும் பிடித்திருக்கிறது.
வாழ்த்துக்கள் கதிர்

வால்பையன் said...

தலைப்பே கவிதையை சொல்லியிருச்சு தல!

ஈரோடு கதிர் said...

//காமராஜ் said...
மிக அழுத்தமான கவிதை.
மிகவும் பிடித்திருக்கிறது.//

நன்றி காமராஜ்

//வால்பையன் said...
தலைப்பே கவிதையை சொல்லியிருச்சு தல!//

நன்றி அருண்

ப்ரியா said...

நல்ல எழுதியிருக்கீங்க சார்.. அற்புதம்..அழுக்கு நாற்றம் பிடித்த பணத்தாள் அருமையான வரிகள்......

நாடோடி இலக்கியன் said...

அருமை கதிர்.

வேற என்ன சொல்றது,அருமை அருமை....

ஈரோடு கதிர் said...

//எதிர் வீட்டு ஜன்னல் said...
அற்புதம்..அழுக்கு நாற்றம் பிடித்த பணத்தாள் அருமையான வரிகள்......//

நன்றி எதிர் வீட்டு ஜன்னல்...

ஈரோடு கதிர் said...

//நாடோடி இலக்கியன் said...
வேற என்ன சொல்றது,அருமை அருமை....//

நன்றி நன்றி இலக்கியன்

Unknown said...

தப்புத்தாளங்களில் நாய் விற்ற காசு நினைவுக்கு வந்தது..கவிதை....அருமை(படம் சோனாகஞ்ச்சா?)

valaivikadan said...

தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்

http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர் உருக்கமான பதிவு. உங்கள் வார்த்தைத் தேர்வு சிறப்பு! விலைமகளை நிலத்துடன் ஒப்பிட்டது அருமை! தொடருங்கள்!

குட் blogல் இடம் பிடித்ததற்கு வாழ்த்துகள்!

ஈரோடு கதிர் said...

//ச.செந்தில்வேலன் said...
விலைமகளை நிலத்துடன் ஒப்பிட்டது அருமை! தொடருங்கள்!//

விலைமகளாவது அவளும் உடன் படுகிறாள்... ஆனால் நிலம்!!!

//குட் blogல் இடம் பிடித்ததற்கு வாழ்த்துகள்!//

நன்றி செந்தில்


August 16, 2009 12

manjoorraja said...

கவிதையில் வலி தெரிகிறது.

குறிப்பாக இரண்டாம் பத்தி மிகவும் நன்றாக அதை வெளிப்படுத்துகிறது.

Prapavi said...

Oh my God, painful!:-( well written!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Beautiful lines, for their painful lives they live!!!

Unknown said...

இல்லாத காமம் காத்து கிடக்கிறது ஒடுங்கிய குவளையை ... மீண்டும் வலிமிகு இடங்கள் உங்கள் வரிகளில்

சேக்காளி said...

//பணத்தாள்களின்
எண்ணிக்கையில் கிளர்ச்சி கொள்கிறது மனம்//
புணர்ச்சியில் வராத கிளர்ச்சி பணத்தாள்களின் எண்ணிக்கையில் வருகிறது.பாருங்கள் பணம் என்னவெல்லாம் செய்கிறதென்று.

Unknown said...

சாயக்கழிவுகளால் செத்துப்போன நிலம் போல-அருமை...பகலும் அவளுக்கு விலைபோயிருக்கும் இந்த வாடிக்கையாளனின் தூர்ந்து போன வாழ்க்கையால்..