நாய்கள் கற்க மறுக்கும் தமிழ் மொழி

காட்சி 1:
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஒரு இளம் பெண் இந்தியா வருகிறார். தமிழ் மொழி மேல் பற்று கொண்டு, தமிழ் கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டு பரத நாட்டியம் கற்றுக்கொள்கிறார். சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடந்த வல்வில் ஓரி விழாவில் ஒரு தமிழ் பாடலுக்கு அற்புதமாக பரத நாட்டியம் ஆடுகிறார்.

காட்சி 2:
அதே வல்வில் ஓரி விழாவில் பல நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதில் ஒன்று நாய் கண்காட்சி. சுற்றுப்புற நகரங்களிலிருந்து நிறைய நாய்கள் கலந்து கொள்கின்றன. அதன் பயிற்சியாளர்கள் நாய்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே கட்டளையிடுகின்றனர். அதன் பயிற்சியாளர் “சிட்” என்றால் உட்காருகிறது, “ஸ்டேண்ட்” என்றால் நிற்கிறது, “ரன்” என்றால் ஓடுகிறது, “ஜம்ப்” என்றால் குதிக்கிறது, “லே டவுன்” என்றால் படுக்கிறது...

(இந்தச் சம்பவத்தை மிகுந்த வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்கள்)

சரி...
அந்த நாய்ப்பயிற்சியாளர்களிடம் சில கேள்விகள்...


இந்த நாய்களை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி ஆங்கிலம் கற்றுக் கொடுத்தீர்களா!!!???

ஆங்கிலப் பள்ளிக்குழந்தைகள் போல், இந்த நாய்களுக்கும் தமிழ் மொழி பிடிக்காதா!!!???

நாய்கள் கற்க மறுத்த, நம் தமிழ் மொழியை, எப்படி ஒரு பிரான்ஸ் பெண்மணியால் கற்றுக்கொள்ள முடிந்தது!!!???

டமிள் சரியா வராது, ஒன்லி இங்கிலீஷ் தான் என்று சொல்லும் தமிழர்களை நாங்கள் நாய்கள் என்றே கருதலாமா!!!???

ஒரு தமிழனாக நாங்கள் யாரை புறக்கணிப்பது தமிழ் கற்காத ஐந்தறிவு படைத்த நாயையா? கற்றுக் கொடுக்காத ஆறறிவு(!!!) படைத்த உங்களையா!!!???

நாய்கூட தமிழ் கற்கவில்லையென வருத்தப்படுவதா!!!??? அல்லது நாய் கற்கும் மொழியல்ல தமிழ் என மகிழ்ச்சியடைவதா!!!???



முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

32 comments:

ummar said...

என்னதான் சொல்ல வருகிறீர்கள் புரியலயே

The King said...

Sariyaaga Sonneergal....Tamil Nattil Irunthu Kondu Tamil karkaathavargal Anaivarum NAAIGALE....

ப்ரியமுடன் வசந்த் said...

நம்ம குழந்தைகளே மம்மி டாடி கூப்புடனும்ன்னு நினைக்குறவங்க நாய விடுவாங்களா கதிர்?

குழந்தைகளுக்கும் ஆங்கிலப்பெயர்


நாய்களுக்கும் ஆங்கிலப்பெயர்

இதிலும் ஒற்றுமை

வாழ்ஹ டமில் வளர்க டமில்னாட்

sakthi said...

நாய்கள் கற்க மறுத்த, நம் தமிழ் மொழியை, எப்படி ஒரு பிரான்ஸ் பெண்மணியால் கற்றுக்கொள்ள முடிந்தது!!!???

அதானே எப்படி முடிந்த்து

sakthi said...

டமிள் சரியா வராது, ஒன்லி இங்கிலீஷ் தான் என்று சொல்லும் தமிழர்களை நாங்கள் நாய்கள் என்றே கருதலாமா!!!???


சரியான சவுக்கடி கதிர் சார்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர், டமில் பேஸாத டாக்ஸ கல்லால் அடிச்சதுக்காக புளூ கிராஸில் உங்க மேல கம்ப்ளைன் பண்ணப் போறேன்.. இக்கிக்கிக் :))

காமராஜ் said...

சபாஷ் சரியான கல்லெறி.
உறைக்கவேண்டுமே.
நமக்கு ஆங்கில மோகம் மிக அதிகம்.

பிரபாகர் said...

கதிர்,

இதெல்லாம் கலாச்சார மாற்றத்திற்கு நாம் கொடுக்கும் விலை.

வேறொரு கோணத்தில் பாருங்களேன், நாயினை தமிழில் பயிற்றுவித்தால் தமிழ் நாட்டில் மட்டும்தான் வித்தை காட்ட இயலும், தமிழ் தெரிந்தோர் முன்னால்.

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தமிழில் தான் படிக்க வேண்டும், கான்வென்ட்டில் படித்தால் தேர்தலில் நிற்க முடியாது என சொல்லி பாருங்கள், குழந்தை இல்லாதோரை தவிர தேர்தலில் தற்போதைய அரசியல்வாதிகள் யாரும் போட்டியிட முடியாது.

பிரபாகர்.

நட்புடன் ஜமால் said...

பிரான்ஸ் நாட்டாரின் தமிழ் பற்று சந்தோஷமடைய வைக்கிறது.

பழமைபேசி said...

மாப்பு, இப்படியெல்லாங்கூட...?

சிரிப்பு தாங்க முடியலைடா சாமீ!

புருனோ Bruno said...

நியாயமான கேள்விகள்

Deepa said...

//டமிள் சரியா வராது, ஒன்லி இங்கிலீஷ் தான் என்று சொல்லும் தமிழர்களை நாங்கள் நாய்கள் என்றே கருதலாமா!!!???//

நெத்தியடி! :-))

வால்பையன் said...

//டமிள் சரியா வராது, ஒன்லி இங்கிலீஷ் தான் என்று சொல்லும் தமிழர்களை நாங்கள் நாய்கள் என்றே கருதலாமா!!!???//

இதிலென்ன சந்தேகம் நண்பரே!

உமா said...

//சரி...
அந்த நாய்ப்பயிற்சியாளர்களிடம் சில கேள்விகள்...//

சரி...நான் பெற்றதையே ஆங்கிலம் கற்க அனுப்பும் போது, நாய் எந்த மூலை.

நண்பன் said...

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆங்கிலம் ஆளுபவர்க்ளின் மொழி என்றும், தமிழ் அடிமைகளின் மொழி என்றும்தான் தெரிகிறது. தன்மானம், சுய கௌரவம், தன்நம்பிக்கை, வீரம், மரியாதை, சூடு, சொரணை அற்ற தமிழர்களிடம் இருந்து வேறு எதை எதிர் பார்க்க முடியும்?

இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக பேசப்படும் இதே தமிழகம், புதுவை, ஈழம் ஆகிய இடங்களில் இதே தமிழை பேசியும் பழகியும் வளர்த்தும் வரும் ஒரு சாரத்து எளிய மக்களை மற்றொரு தமிழ் பேசும் (உயர்?)பிரிவினரால் ஒதுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு வந்தார்கள்? அப்போது உங்க தமிழ் என்ன செய்து கொண்டிருந்தது?

ஏதோ ஒரு வெள்ளைக்காரி வந்து ஆடினால் பாடினால் என தலையில் தூக்கி வைத்து கூத்தாடும் நீங்கள், உங்கள் அருகில் பல ஆயிரம் ஆண்டுகளாக இதே தமிழை பழகிவரும் தலித் மக்களை இந்த வெள்ளைக்காரிக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையில் கால்வாசி மரியாதைவது கொடுத்து மதித்து இருப்பீர்களா?

போங்க நீங்களும், உங்க தமிழ் பற்றும். எல்லாம் சும்மா கும்பல் கூடி கூத்தடிக்கத்தான் உதவும். இதே போல் தமிழ் பேசும் ஈழத்து தமிழர் நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

பொருமையுடன் படித்ததற்கு நன்றி.

குடந்தை அன்புமணி said...

சரியான தலைப்பு கதிர். குரைக்க... சே... உறைக்க வேண்டியவங்களுக்கு உறைச்சா போதும்.

குடந்தை அன்புமணி said...

// உமா said...
//சரி...
அந்த நாய்ப்பயிற்சியாளர்களிடம் சில கேள்விகள்...//

சரி...நான் பெற்றதையே ஆங்கிலம் கற்க அனுப்பும் போது, நாய் எந்த மூலை.//

உலகத்தோடு போராட ஆங்கிலம், இந்திகூட கற்பது நல்லதுதான் தோழி. ஆனால் தமிழை கொலை பண்ணுவதுதான் கூடாது. இந்த தெளிவு எல்லாருக்கும் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

சந்தனமுல்லை said...

கொடுமைதான்!! ஒருமுறை எனது அயல்நாட்டுத்தோழி சென்னையின் பெரிய புத்தகக்கடையில் புத்தகம் வாங்கியபின் "நண்டரி(நன்றி)" என்றார். அந்தக்கடையிலிருப்பவரோ, 'தாங்க்ஸ், விஸிட் அகெய்ன்' என்றார்!! :-)

ஈரோடு கதிர் said...

ummar said...
என்னதான் சொல்ல வருகிறீர்கள் புரியலயே
//என்ன புரியல உங்களுக்கு//

//The King said...
Sariyaaga Sonneergal....Tamil Nattil Irunthu Kondu Tamil karkaathavargal Anaivarum NAAIGALE....//

நன்றி தி கிங்

//பிரியமுடன்.........வசந்த் said...
குழந்தைகளுக்கும் ஆங்கிலப்பெயர்
நாய்களுக்கும் ஆங்கிலப்பெயர்
இதிலும் ஒற்றுமை
வாழ்ஹ டமில் வளர்க டமில்னாட்//

மாற்றுவதற்கு ஏதாவது முயற்சி செய்வோம்

நன்றி வசந்த்

//sakthi said...
அதானே எப்படி முடிந்தது//

அந்தப் பெண்ணுக்கு தமிழ் மேல் ஈர்ப்பு இருந்திருக்கலாம்

//சரியான சவுக்கடி கதிர் சார்//

நன்றி சக்தி

//ச.செந்தில்வேலன் said...
கதிர், டமில் பேஸாத டாக்ஸ கல்லால் அடிச்சதுக்காக புளூ கிராஸில் உங்க மேல கம்ப்ளைன் பண்ணப் போறேன்.. இக்கிக்கிக் :))//

சீக்கிரமா.... கூடவே ஆங்கிலம் சொல்லிக் கொடுத்த பயிற்சியாளர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்

//காமராஜ் said...
நமக்கு ஆங்கில மோகம் மிக அதிகம்.//

ஏன் இந்த மோகம்... யாருக்குமில்லாத மோகம்


//பிரபாகர் said...
வேறொரு கோணத்தில் பாருங்களேன், நாயினை தமிழில் பயிற்றுவித்தால் தமிழ் நாட்டில் மட்டும்தான் வித்தை காட்ட இயலும், தமிழ் தெரிந்தோர் முன்னால்.//

சரி நம்பிட்டோம்

//அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தமிழில் தான் படிக்க வேண்டும் என சொல்லி பாருங்கள், குழந்தை இல்லாதோரை தவிர தேர்தலில் தற்போதைய அரசியல்வாதிகள் யாரும் போட்டியிட முடியாது.//

ஆமாம் பிரபாகர்.
கல்வி என்பது அவரவர் விருப்பம். ஆனால் தாய்மொழிமேல் ஏன் நாட்டமில்லை என்பது தான்.

//நட்புடன் ஜமால் said...
பிரான்ஸ் நாட்டாரின் தமிழ் பற்று சந்தோஷமடைய வைக்கிறது.//

ஆமாம்... ஜமால்

//பழமைபேசி said...
மாப்பு, இப்படியெல்லாங்கூட...?
சிரிப்பு தாங்க முடியலைடா சாமீ!//

ஏதோ நம்மால முடிஞ்சது

//புருனோ Bruno said...
நியாயமான கேள்விகள்//

நன்றி புரூனோ

//Deepa said...
நெத்தியடி! :-))//

நன்றி தீபா

//வால்பையன் said...
இதிலென்ன சந்தேகம் நண்பரே!//

நன்றி அருண்

//உமா said...
சரி...நான் பெற்றதையே ஆங்கிலம் கற்க அனுப்பும் போது, நாய் எந்த மூலை.//

வாழ்க்கை போரட்டத்திற்காக ஆங்கிலக் கல்விக்கு தள்ளப்பட்டு விட்டோம் என்பது கசப்பான உண்மைதான் ஆனால் தமிழை தள்ளி வைப்பதைத்தான் தாங்க முடிவதில்லை

//நண்பன் said...
ஒரு சாரத்து எளிய மக்களை மற்றொரு தமிழ் பேசும் (உயர்?)பிரிவினரால் ஒதுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு வந்தார்கள்? அப்போது உங்க தமிழ் என்ன செய்து கொண்டிருந்தது? //

இந்த பதிவுற்கும் சாதி வெறிக்கும் என்ன தொடர்பு

//ஏதோ ஒரு வெள்ளைக்காரி வந்து ஆடினால் பாடினால் என தலையில் தூக்கி வைத்து கூத்தாடும் நீங்கள்//

யார் தலையில் வைத்து ஆடுகிறார்கள் ?

//இதே தமிழை பழகிவரும் தலித் மக்களை//

நீங்கள் சொல்லும் தலித் மட்டும் தான் தமிழ் மொழி பேசுகிறார்களா!!!

சாதீய உணர்வை தூண்டும் நோக்கம் என் இடுகையில் இல்லை

//குடந்தை அன்புமணி said...
சரியான தலைப்பு கதிர். குரைக்க... சே... உறைக்க வேண்டியவங்களுக்கு உறைச்சா போதும்.//

ஆமாம் குடந்தை மணி

//குடந்தை அன்புமணி said...
// உமா said...
சரி...நான் பெற்றதையே ஆங்கிலம் கற்க அனுப்பும் போது, நாய் எந்த மூலை.//

//உலகத்தோடு போராட ஆங்கிலம், இந்திகூட கற்பது நல்லதுதான் தோழி. ஆனால் தமிழை கொலை பண்ணுவதுதான் கூடாது. இந்த தெளிவு எல்லாருக்கும் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.//

உங்கள் கருதோடு உடன்படுகிறேன் மணி

Jackiesekar said...

யோசிக்க வைக்கும் நல்ல கேள்விகள் கதிர்...

நண்பன் said...

நான் சாதி மத பிரச்சினைகளை கிளப்பி குளிர்காய வரவில்லை. சற்றே சிறிதேனும் விழிப்புணர்வு ஏற்படாதா என்கிற ஏக்கத்தில்தான் இப்படி கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து பார்த்தேன்.

தமிழ் பேசுபவர் பிச்சைக்காரர், தொழு நோயாளியாக ஏன், கொலைகாரனாக இருந்தாலும் கூட அதற்காக அவரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான தமிழன்பு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//டமிள் சரியா வராது, ஒன்லி இங்கிலீஷ் தான் என்று சொல்லும் தமிழர்களை நாங்கள் நாய்கள் என்றே கருதலாமா!!!???//

என்ன? இந்த மாதிரி தாக்குறீங்க!
மேலும் பிரான்சில் பல்கலைக்கழகமொன்றில் திரு. மெய்யப்பன் எனும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த விரிவுரையாளரிடம் சுமார் 20 மாணவர்கள் வருடா வருடம் தமிழ்மொழி கற்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் நடந்த பாரதி விழாவில் அவர் சில மாணவமாணவிகள். பாரதியார்
கவிதை படித்ததுடன் சிற்றுரையும் ஆற்றினார்கள்.
நிகழ்ச்சி முடிவில் அவர்களுடன் தமிழில் அளவளாவினேன்.
சிலவருடங்களுக்கு முன் வித்துவான் ரி.எம்.கிருஸ்ணாவின் கச்சேரிக்கு ;இந்த விரிவுரையாளர் தன் பல மாணாக்கர்களை
கூட்டிவந்திருந்தார். கச்சேரிமுடிவில் அவருடன் பலர் உரையாடியபோது, ஒரு பிரஞ்சு , தமிழ்கற்றும் மாணவன்
"நீங்கள் மிக இனிமையாகப் பாடினீர்கள்; உங்கள் கச்சேரியை மிக ரசித்தேன்; மிக்க நன்றி" எனத் தமிழில் கூற
நம்ம வித்துவான் சிரித்துக் கொண்டு"Thanks for coming" என்று கூற
அந்த மாணவன் அவரை ஆங்கிலத்தில் "Are you not a Tamil?" என கேட்க; தமிழ் தான் ஆனால் பேசிப் பழக்கமில்லை.
ஆங்கிலமே பழகிவிட்டது என நெளிந்தார்
இப்படி நிறையக் கூறலாம்

தமிழைவைத்துப் பிழைக்கும் தலைவர் தொலைக்காட்சியின் கூத்தைவிடவா,,
இந்த நாய்களின் கூத்து.

Unknown said...

நாய்கள் எங்கே கற்க மறுக்குது, நாம தான் நம் மொழியை ஒதுக்குறோம். அப்படி கற்க மறுப்பவர்களை நாய்களோட ஒப்பிடாதிங்க, பிறகு நாய்கள் கோபித்துக்கொள்ளக்கூடும்.

//வேறொரு கோணத்தில் பாருங்களேன், நாயினை தமிழில் பயிற்றுவித்தால் தமிழ் நாட்டில் மட்டும்தான் வித்தை காட்ட இயலும், தமிழ் தெரிந்தோர் முன்னால்.//

பிரபாகர், கேரளத்து யானைகளுக்கு யானைப்பாகர்கள் மலையாளத்தில் தான் கட்டளை இடுகிறார்கள். மிருகங்களின் வித்தையைப் பார்ப்பவர்கள் அது எந்த மொழியில் கிரகித்துக்கொண்டு வித்தை செய்கிறது என்று யாரும் கவனிப்பது இல்லை, எப்படி வித்தை செய்கிறது என்று தான் பார்க்கிறார்கள்.

SUBBU said...

சூப்பருங்க

ஆர்.வேணுகோபாலன் said...

நல்ல வேளை! நாய் வளர்ப்பவர்கள் அதற்கு 'ஜிம்மி,சீஸர்,ரோஸி,' என்றெல்லாம் ஆங்கிலத்திலே பெயர் வைக்கிறார்கள். 'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவி மாத்திரமே தனது நாய்க்குட்டிக்கு 'சுப்பிரமணி,' என்று பெயர் வைத்ததாக ஞாபகம். :-))

நாய் ஆர்வலர்களுக்குத் தமிழ்ப்பாசம் வந்து விட்டால் மூவேந்தர்கள் தொடங்கி, சம காலத்தலைவர்கள் வரையிலுமான பெயர்களை வைத்து நம் மானத்தைக் கப்பலேற்றி விட மாட்டார்களா? அந்த வகையில் தப்பித்தோம்!

தமிழன் வேணு

வந்தியத்தேவன் said...

சரியான சாட்டையடி, இவங்கள் திருந்தமாட்டார்கள். தமிழ்மொழியில் பேசினால் தீட்டாம்.

Agathiyan John Benedict said...

சிந்திக்கத் தூண்டும் குத்தல் கேள்விகள்!

உடன்பிறப்பு said...

நாய்கள் எவ்வளவோ மேல் எந்த மொழியில் கற்று கொடுத்தாலும் அவை படித்துவிடும், ஆனால் தமிழன் மட்டும் தான் தன் தாய் மொழியை படிக்கமாட்டேன் என்று அடம் செய்வான்

க.பாலாசி said...

//ஒரு தமிழனாக நாங்கள் யாரை புறக்கணிப்பது தமிழ் கற்காத ஐந்தறிவு படைத்த நாயையா? கற்றுக் கொடுக்காத ஆறறிவு(!!!) படைத்த உங்களையா!!!???//

என்ன சொல்வது என்று தெரியவில்லை.
நல்ல பதிவு. தமிழை முன்னிருத்தி, நாம் புறக்கணிக்க வேண்டியது நாயையா, அல்லது மனிதனையா என்ற ஒப்பீடலில் எனக்கு உடன்பாடில்லை.

//நாய்கூட தமிழ் கற்கவில்லையென வருத்தப்படுவதா!!!??? அல்லது நாய் கற்கும் மொழியல்ல தமிழ் என மகிழ்ச்சியடைவதா!!!???//

இரண்டாவது சொன்னது சரியெனப்படுகிறது.

மற்றபடி தங்களின் ஆதங்கம் எனக்குள்ளும் உண்டு.

Indy said...

உங்களுக்கும் தமிழ் வியாபாரம் தானா?

சரண் said...

அருமையான பதிவு..

//நாய்கூட தமிழ் கற்கவில்லையென வருத்தப்படுவதா!!!??? அல்லது நாய் கற்கும் மொழியல்ல தமிழ் என மகிழ்ச்சியடைவதா!!!???//

மிகவும் ரசித்தேன்..

ஈரோடு கதிர் said...

//சந்தனமுல்லை said...
அயல்நாட்டுத்தோழி "நண்டரி(நன்றி)" என்றார். அந்தக் கடையிலிருப்பவரோ, 'தாங்க்ஸ், விஸிட் அகெய்ன்' என்றார்!! :-)//

எல்லாம் ஆங்கில் மோகம்தான்

நன்றி சந்தனமுல்லை

// jackiesekar said...
யோசிக்க வைக்கும் நல்ல கேள்விகள் கதிர்...//

நன்றி ஜாக்கிசேகர்

//நாஞ்சில் நாதம் said...
:))//

ஐயா ஏதாவது சொல்லுங்க

//நண்பன் said...
தமிழ் பேசுபவர் பிச்சைக்காரர், தொழு நோயாளியாக ஏன், கொலைகாரனாக இருந்தாலும் கூட அதற்காக அவரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான தமிழன்பு.//

மனிதனை மனிதத்தோடு முதலில் மதிப்போம், அடுத்து தமிழன்பு நிலை பெறட்டும்

நன்றி நண்பன்

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//ஒரு பிரஞ்சு , தமிழ்கற்றும் மாணவன்
"நீங்கள் மிக இனிமையாகப் பாடினீர்கள்; உங்கள் கச்சேரியை மிக ரசித்தேன்; மிக்க நன்றி" எனத் தமிழில் கூற நம்ம வித்துவான் சிரித்துக் கொண்டு "Thanks for coming" என்று கூற அந்த மாணவன் அவரை ஆங்கிலத்தில் "Are you not a Tamil?" என கேட்க; தமிழ் தான் ஆனால் பேசிப் பழக்கமில்லை.
ஆங்கிலமே பழகிவிட்டது என நெளிந்தார்//

அருமையான பின்னூட்டம் நண்பரே
முகத்தில் அறையும் உண்மை, தமிழர்களின் ஆங்கில மோகம்

நன்றி யோகன்

//தமிழைவைத்துப் பிழைக்கும் தலைவர் தொலைக்காட்சியின் கூத்தைவிடவா,,
இந்த நாய்களின் கூத்து.//

நாய்களை நாம் குறை சொல்லக் கூடாது!!!

//ராஜா | KVR said...
நாய்கள் எங்கே கற்க மறுக்குது, நாம தான் நம் மொழியை ஒதுக்குறோம். அப்படி கற்க மறுப்பவர்களை நாய்களோட ஒப்பிடாதிங்க, பிறகு நாய்கள் கோபித்துக்கொள்ளக்கூடும்.//

கண்டிப்பாக

நன்றி ராஜா

//பிரபாகர், கேரளத்து யானைகளுக்கு யானைப்பாகர்கள் மலையாளத்தில் தான் கட்டளை இடுகிறார்கள். மிருகங்களின் வித்தையைப் பார்ப்பவர்கள் அது எந்த மொழியில் கிரகித்துக்கொண்டு வித்தை செய்கிறது என்று யாரும் கவனிப்பது இல்லை, எப்படி வித்தை செய்கிறது என்று தான் பார்க்கிறார்கள்.//

நன்றி

// SUBBU said...
சூப்பருங்க//

ம்ம்ம்ம்


// தமிழன் வேணு said...
நல்ல வேளை! நாய் வளர்ப்பவர்கள் அதற்கு 'ஜிம்மி,சீஸர்,ரோஸி,' என்றெல்லாம் ஆங்கிலத்திலே பெயர் வைக்கிறார்கள். 'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவி மாத்திரமே தனது நாய்க்குட்டிக்கு 'சுப்பிரமணி,' என்று பெயர் வைத்ததாக ஞாபகம். :-))
நன்றி தமிழன் வேணு

//வந்தியத்தேவன் said...
சரியான சாட்டையடி, இவங்கள் திருந்தமாட்டார்கள். தமிழ்மொழியில் பேசினால் தீட்டாம்.//

சரியாக சொன்னீர்கள்
நன்றி வந்தியத்தேவன்

//John Peter Benedict said...
சிந்திக்கத் தூண்டும் குத்தல் கேள்விகள்!//

நன்றி ஜான் பீட்டர்

//உடன்பிறப்பு said...
நாய்கள் எவ்வளவோ மேல் எந்த மொழியில் கற்று கொடுத்தாலும் அவை படித்துவிடும், ஆனால் தமிழன் மட்டும் தான் தன் தாய் மொழியை படிக்கமாட்டேன் என்று அடம் செய்வான்//

சரியான சாட்டையடி உடன்பிறப்பு

//க. பாலாஜி said...
மனிதனையா என்ற ஒப்பீடலில் எனக்கு உடன்பாடில்லை.//

இந்த ஒப்பீடல் கோபத்தின் குரல்.
நாய் என்ன செய்யும் மனிதர்களின் தவறுகளுக்கு.

இரண்டாவது சொன்னது சரியெனப்படுகிறது.

மற்றபடி தங்களின் ஆதங்கம் எனக்குள்ளும் உண்டு.

//Indy said...
உங்களுக்கும் தமிழ் வியாபாரம் தானா?//

அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்
நல்ல விலைக்கு கொள்முதல் செய்து, நல்ல முறையில் பயன்படுத்துங்கள்


//சூர்யா said...
அருமையான பதிவு..
மிகவும் ரசித்தேன்..//

நன்றி சூர்யா