துக்கத்தின் நரம்புகளைத் தின்று...

என்றோ நீயறியாமல் திருடிய
உன் கைக்குட்டை மடிப்புக்கலையாமல்
உறங்குகிறது பெட்டிக்குள்
அதே வியர்வை வாசனையோடு...

ன்னைத் தழுவும் ஈரக்காற்று
எனக்கு மிச்சமேதும் வைக்காமல்
திருடிப் போகிறது உன் (சு)வாசத்தை
தன் காதலிக்கு பரிசளிக்க...

தாய்மடி பிரிந்து உன்னைத் தழுவ
ஓடி வரும் மழைத்துளி...
நீ ஒதுங்குவதால் தடம் புரண்டு
தற்கொலை செய்கிறது சாக்கடையில்...

அந்த பேருந்தில் மிக அழகான
காதல் கீதம் கசிந்துருகிறது...
நமக்கிடையே மட்டும் சில இருக்கைகள்
கடக்கமுடியாத தூரமாக...

விழிகள் படபடத்துச் சிறகடிக்க
உன் மௌனங்கள் அடைகாக்கும்
சொற்களில் நீந்துகிறது
வாழ்க்கையின் சூத்திரம்...

உன்மேல் கருக்கொண்ட காதல்
இதயச்சிறையில் துக்கத்தின்
நரம்புகளைத் தின்றுகொண்டிருக்கிறது
வாழ்க்கை இனிக்கிறது

~

17 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

கதிர் இன்னும் காதல் பண்ணுறீகளோ?

க.பாலாசி said...

//தாய்மடி பிரிந்து உன் மேல்
துளிர்க்க ஓடி வரும் மழைத்துளி...
நீ ஒதுங்குவதால் தடம் மாறி தற்கொலை
செய்து கொள்கிறது சாக்கடையில்...//

என்னமா யோசிக்கறாங்கப்பா...

அருமையான வரிகள். காதலாகி கசிந்துருகின்னு சொல்லுவாங்களே, அது இதுதானோ?

மொத்த (கவிதை) துளிகளும்
சிறந்த வார்த்தைகளைத் தொட்டு
வழிந்தோடுகிறது,
வழுக்கை விழுந்த பிறகும். அடடே ஆச்சரிய குறி.

என்னமோ போங்க.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர், கவிதைகள் அருமை!

அதுவும் கைக்குட்டை, தென்றல் இதம்

பழமைபேசி said...

சிறப்பே வந்து, அனுபவத்துல வர்றதுதான்.... இஃகி, அந்த பாட்டுஞ் சேர்த்துதான் சொல்றேன்!

நட்புடன் ஜமால் said...

அருமையான கவிதை.

அந்த கைக்குட்டையுன் வாசம் படித்தவுடன்

என் காதலியின்(இரண்டாம்) முதல் வியர்வை வாசனை நாசியில் வந்து செல்கிறது ...

பிரபாகர் said...

கதிர்,

கவிதையிலும் அசத்துகிறீர்கள்.

வியர்வையின் வாசனையுடன் கைக்குட்டை, எனது மனைவி காய்கறி வெட்டும் போது சிறு காயத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு இரத்தத் துளியை துடைத்ததை நான் பத்திரப்படுத்தி வைத்திருப்பதை நினைவூட்டுகிறது.


காதலியின் வாசம் ஈரக்காற்றின் காதலிக்கு பரிசாம்.... என்ன அழகான கற்பனை?

மேலே படவில்லை என்பதற்காக சாக்கடையில் தற்கொலை செய்யும் மழைத்துளி, சார் உங்களின் சரிபாதி மிகுந்த அதிர்ஷ்டசாலி.... என்னமாய் வர்ணிக்கிறீர்கள்?


பேருந்திலும் விட்டு வைக்கவில்லை நீங்கள்....

வாழ்க்கையின் சூத்திரத்திற்கு அர்த்தம் கொடுக்கும் உங்களின் கவிதை தேனாய் இனிக்கிறது...

நிறைய எழுதுங்கள் தோழா...

பிரபாகர்.

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

//தாய்மடி பிரிந்து உன் மேல்
துளிர்க்க ஓடி வரும் மழைத்துளி...
நீ ஒதுங்குவதால் தடம் மாறி தற்கொலை
செய்து கொள்கிறது சாக்கடையில்..//

அனைத்திலும் அருமை.

வால்பையன் said...

//தாய்மடி பிரிந்து உன் மேல்
துளிர்க்க ஓடி வரும் மழைத்துளி...
நீ ஒதுங்குவதால் தடம் மாறி தற்கொலை
செய்து கொள்கிறது சாக்கடையில்...//

இதுதான் இருக்குறதுலயே பெட்டரா தோணுது தல!

காதலிச்சா கவிதை வருமா!
தோல்வியடைஞ்சா வருமா!?

இப்ப நான் என்ன செய்ய!?

நாகா said...

தனிமைத் துயரில் இன்று மனைவிக்கு உங்கள் இந்தக் கவிதையை அனுப்பினேன் கதிர். ஆம் வாழ்க்கை இனிக்கிறது, உங்களைப் போன்ற கவிஞர்கள் இருப்பதால்...!

க.பாலாசி said...

//ஒவ்வொருமுறையும் உன்னை தழுவும்
ஈரக்காற்று எனக்கு மிச்சம் வைக்காமல்
உன் வாசத்தை திருடிப் போகிறது
தன் காதலிக்கு பரிசாக...//

இதுவும் இதம் தரும் வரிகள்தான். மறுபடியும் வந்து படிக்க தூண்டிய வரிகள். மிக நன்று.

(போட்டோவை மாத்திட்டேன். இன்னைக்கு எடுத்ததுதான், அட நம்புங்க)

sakthi said...

தாய்மடி பிரிந்து உன் மேல்
துளிர்க்க ஓடி வரும் மழைத்துளி...
நீ ஒதுங்குவதால் தடம் மாறி தற்கொலை
செய்து கொள்கிறது சாக்கடையில்..

செம வரி கதிர்
கலக்கல்

nila said...

//ஒவ்வொருமுறையும் உன்னை தழுவும்
ஈரக்காற்று எனக்கு மிச்சம் வைக்காமல்
உன் வாசத்தை திருடிப் போகிறது
தன் காதலிக்கு பரிசாக...//

:) சிலிர்க்க வைக்குது

Anonymous said...

தேனாய் தித்திக்கும் திகட்டாத காதல் வரிகள் வாழ்வாங்கு வாழ்க என வாழ்ந்திடும் காதலுக்கு மிகப் பொருத்தமன்றோ....மெல்லிசையாய் வருடுகிறது வரிகள் ஒவ்வொன்றும் ஆர்பாட்டமில்லாத இளையராஜாவின் இசையைப் போல்..சுகமான ராகம் இந்த கவிதை...

ஈரோடு கதிர் said...

//பிரியமுடன்.........வசந்த் said...
கதிர் இன்னும் காதல் பண்ணுறீகளோ?//

காதல் அழிவதில்லை வசந்த்
.... ஹி..ஹி.. எப்பூபூபூபூபூடீடீடீடீ!!!

//பாலாஜி said...

என்னமா யோசிக்கறாங்கப்பா...

அருமையான வரிகள். காதலாகி கசிந்துருகின்னு சொல்லுவாங்களே, அது இதுதானோ?

....ம்ம்ம்ம்

மொத்த (கவிதை) துளிகளும்
சிறந்த வார்த்தைகளைத் தொட்டு
வழிந்தோடுகிறது,//

நன்றி பாலாஜி

//வழுக்கை விழுந்த பிறகும்.//

அடப்பாவி... இதுதான் ஆப்பு வைக்கிறதா

நன்றி பாலாஜி

//ச.செந்தில்வேலன் said...
கதிர், கவிதைகள் அருமை!
அதுவும் கைக்குட்டை, தென்றல் இதம்//

நன்றி செந்தில்

//பழமைபேசி said...
சிறப்பே வந்து, அனுபவத்துல வர்றதுதான்.... இஃகி, அந்த பாட்டுஞ் சேர்த்துதான் சொல்றேன்!//

இஃகி...இஃகி.. மாப்பு நல்லாருக்கீங்ளா!!!

//நட்புடன் ஜமால் said...
அருமையான கவிதை.
அந்த கைக்குட்டையுன் வாசம் படித்தவுடன்
என் காதலியின்(இரண்டாம்) முதல் வியர்வை வாசனை நாசியில் வந்து செல்கிறது ...//

இரண்டாம்!!!??? ம்ம்ம் நடத்துங்க.. நடத்துங்க..

முதல் வருகைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
நன்றி

//Prabhagar said...
கதிர்,
கவிதையிலும் அசத்துகிறீர்கள்.
வியர்வையின் வாசனையுடன் கைக்குட்டை, எனது மனைவி காய்கறி வெட்டும் போது சிறு காயத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு இரத்தத் துளியை துடைத்ததை நான் பத்திரப்படுத்தி வைத்திருப்பதை நினைவூட்டுகிறது.//

ஆஹா...


//காதலியின் வாசம் ஈரக்காற்றின் காதலிக்கு பரிசாம்.... என்ன அழகான கற்பனை?

மேலே படவில்லை என்பதற்காக சாக்கடையில் தற்கொலை செய்யும் மழைத்துளி, சார் உங்களின் சரிபாதி மிகுந்த அதிர்ஷ்டசாலி....//

ஹி...ஹி

//பேருந்திலும் விட்டு வைக்கவில்லை நீங்கள்....//

இதுதானே பலருக்கு சொர்க்கம்

//வாழ்க்கையின் சூத்திரத்திற்கு அர்த்தம் கொடுக்கும் உங்களின் கவிதை தேனாய் இனிக்கிறது...

நிறைய எழுதுங்கள் தோழா...//

அழகான பின்னூட்டத்திற்கு நன்றி பிரபாகர்.

//துபாய் ராஜா said...
அனைத்தும் அருமை.
அனைத்திலும் அருமை.//

நன்றி துபாய் ராஜா

//வால்பையன் said...
இதுதான் இருக்குறதுலயே பெட்டரா தோணுது தல!//

நன்றி நண்பா

//காதலிச்சா கவிதை வருமா!
தோல்வியடைஞ்சா வருமா!?
இப்ப நான் என்ன செய்ய!?//

கவிதை எப்பவேணாலும் வரும்
ஆனா காதலிச்சாதான் தோல்வி வரும்
(.. அப்பாடா... எப்படியோ சாமாளிச்சுட்டேன்")

//நாகா said...
தனிமைத் துயரில் இன்று மனைவிக்கு உங்கள் இந்தக் கவிதையை அனுப்பினேன் கதிர்.//

ஏன்.. ஏன் நாகா...
சகோதரிக்கு இப்படி தண்டனை

//ஆம் வாழ்க்கை இனிக்கிறது//

மிக்க மகிழ்ச்சி நாகா

//க. பாலாஜி said...
மறுபடியும் வந்து படிக்க தூண்டிய வரிகள். மிக நன்று.//

சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லனும்

//(போட்டோவை மாத்திட்டேன். இன்னைக்கு எடுத்ததுதான், அட நம்புங்க)//

பாலாஜி... அப்படியே என் போட்டோவையும்.. ஆனா தொட்டில்ல தூங்கற குழந்தைமாதிரி
ஹி...ஹி...ஹி


//sakthi said...
தாய்மடி பிரிந்து உன் மேல்
துளிர்க்க ஓடி வரும் மழைத்துளி...
நீ ஒதுங்குவதால் தடம் மாறி தற்கொலை
செய்து கொள்கிறது சாக்கடையில்..

செம வரி கதிர்
கலக்கல்//

நன்றி சக்தி

குடந்தை அன்புமணி said...

அனைத்தும் அருமையாக இருக்கிறது. காதல் கவிதைகள் என்றாலே தனிசுகம்தான்.

காமராஜ் said...

//உன் வாசத்தை திருடிப் போகிறது
தன் காதலிக்கு பரிசாக...//

ஆமாம் அதுவும் வியர்வை
வாசனையும், சேர்த்து இல்லையா கதிர்.

ஈரோடு கதிர் said...

//குடந்தை அன்புமணி said...
காதல் கவிதைகள் என்றாலே தனிசுகம்தான்.//

ம்ம்ம்... ஆமாம்.

நன்றி குடந்தை மணி

//காமராஜ் said...
ஆமாம் அதுவும் வியர்வை
வாசனையும், சேர்த்து இல்லையா கதிர்.//

ஹி..ஹி..ஹி