Feb 19, 2020

வேண்டுதல் வேண்டாமை


பஞ்சர் கடைகளை
அடையாளம் காட்ட
பளபளக்கும் பலகைகளும்
வண்ண விளக்குகளும் தேவையில்லை
சாலையோரத்தில் ஒரு டயரை
நிறுத்தி வைத்தல் போதும்
விளம்பரம் தேவைப்படின்
வெள்ளை மஞ்சள் நிறத்தில்
கோணல் மாணலாய்
எழுதி வைத்தல் போதும்
நிறுத்தி வைக்கப்படும் டயர்கள்
ஓடித் தேய்ந்து போனவை
பொத்தல் ஆனவை
கிழிந்தவை என எப்படியும் இருக்கலாம்
எப்படி இருந்தாலும்
இன்னும் வாழ்வு மிச்சமுண்டு
நிறுத்தப்பட்ட டயரின் குழிவில்
பூனையொன்று குட்டிகளை ஈனலாம்
கீழே அடுக்கி வைக்கப்பட்ட
டயர்கள் மறைவில்
எலியொன்று இனப்பெருக்கம் செய்யலாம்
இவற்றிற்கிடையே
ஓடிக்கொண்டிருக்கும் ஓய்ந்திருக்கும் டயர்களில்
எது எலி எது பூனை எனும்
கேள்வியும் எழலாம்!


No comments:

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...