பியர் பாட்டில் அழகி
கம்பிகளினூடே கை நுழைத்து நிதானமாக
பியர் பாட்டிலை வாங்கியவளின் பேரழகு
வெயிலில் மோதி வீதியில் சிதறிக்கொண்டிருந்தது
அவளின் செம்பருத்தி நிற உடை
காணும் விழிகளில் ஒளிர்ந்து கொண்டிருந்தது
நவீன பார் எனும் கதவின் வழியாக நுழைகையில்
த்திருந்த கூட்டம் உறைந்து போனது

கலைந்து கிடந்த நாற்காலியொன்றை நேராக்கி அமர்ந்தவளை
உறைந்த கூட்டத்தின் பார்வை குதறத் தொடங்குகையில்
அருகில் வந்து சிரிப்போடு நின்றபடி
பியர் பாட்டில் திறக்க சாவி நீட்டிய பார் பையனைத் தடுத்து
கடைவாயில் கடித்து மேசை மீது மூடியைத் துப்பினாள்
பாட்டிலின் கழுத்தில் லிப்ஸ்டிக் கறை பதிந்திருந்தது
கைப் பையிலிருந்து மைசூர்பாகு பெட்டியை எடுத்து
ஒரு விள்ளல் வாயில் போட்டாள்

பாட்டிலை எடுத்து முகர்ந்து ஆழ மூச்சிழுத்தாள்
நிலத்தில் சிறிது கவிழ்த்து கொட்டினாள்
யாரோ படம் பிடிக்கும் கிளிக் ஓசை கேட்டது
பைக்குள்ளிருந்து பளபளக்கும் துப்பாக்கி ஒன்றையெடுத்து
மேசை மீது நிதானமாக வைத்தாள்
வீடியோ எடுக்க முனைந்த ஒருவன்
தன் கைபேசியைத் தவறவிட்டான்

இன்னொரு வில்லல் வாயில் போட்டபடி
கைப் பையிலிருந்து ஒரு சிறிய குப்பியை எடுத்து
பியர் பாட்டிலில் கொட்டிக் கவிழ்த்துவிட்டு
மீண்டும் முகர்ந்து ஆழ்ந்து மூச்சிழுத்தாள்

உறைந்த கூட்டம் தங்களுக்குள் பேசி
மெல்ல பயத்தைத் தணிக்க முயன்றது
தடுமாறியபடி அவசரமாக சிலர் வெளியேறினார்கள்

பியர் பாட்டிலை கையில் எடுத்தவள்
மேசை அதிர ஓங்கி வைத்தாள்
குனிந்து பாட்டிலின் உதட்டில் முத்தம் பகிர்ந்தாள்
சட்டென எழுந்தவள் துப்பாக்கியை பையில் வைத்து
கதவின் வழியே கம்பீரமாக வெளியேறினாள்

வெளியேறி விட்டதை உறுதிப்படுத்திகொண்ட கூட்டம்
கதவின் அருகே வந்து அவளைத் தேடுகையில்
அவள் வானத்தை நோக்கி மேலெழும்பிக் கொண்டிருந்தாள்
அவளின் கழுத்தில் வழிந்த ஆடை இறக்கையாக மாறியிருந்தது

அவள் விட்டுப்போன பியர் பாட்டிலைத் தொடாமல்
மேசையைச் சூழ்ந்து நின்றது கூட்டம்
மொபைலில் படம் பிடித்தவன்
தான் எடுத்த படத்தை நோக்கினான்
பியர் பாட்டில் மைசூர்பாகு துப்பாக்கியோடு
அவன் வாழ்வின் மிக நெருங்கிய பெண்ணொருத்தி
மெல்ல நெளியத் துவங்கும் உதடுகளோடு இருந்தால்
கையிலிருந்த மொபைல் நழுவி விழுந்து சிதறியது.


-

3 comments:

Tamil Us said...

உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil Us

Mathu S said...

வாவ் வாவ் வாவ்
அருமை தோழர்
முகநூல் மலர்த்தரு பக்கத்திற்கு கடத்துகிறேன் இணைப்பை மட்டும்

Ramesh Ramar said...

I would highly appreciate if you guide me through this.Thanks for the article…
IELTS Score Better Bands
International English Training
Improve Your English
Learn spoken English
English courses online
Communication soft skills
Business Soft Skills
Learn English Fluency
Workshops Soft Skills
Spoken English Institute