அமைதியாய் மூச்சிரைப்போம்


தூய்மை குறித்து
புனிதம் குறித்து
குரலொன்று எதிரொலிக்கிறது.
அது தூய்மையில்
தோய்ந்த குரலா?

தாய்மை மொழி
சாதி எழுத்து
காதல் பக்தி  
காமம் சிந்தனை
தூய்மையென எதை
ஆய்வுக்குட்படுத்துகிறீர்கள்

தூமைக்குள்ளிருந்து துளிர்த்தோம்
விட்டுத்தராமல்
பற்றிக்கொள்ளாமல் மொழியேது
எதிர்பார்ப்பின்றி எழுத்தா
தங்கியதெல்லாமே முதற்காதலா
தேவையின்றி தொழுதலெதற்கு
அழுகில்லாக் காமமேது
வடிகட்டா சிந்தனையேது...

வா
முதலில் கொஞ்சம் அமைதியாய்
மூச்சிரைப்போம்!

1 comment:

சு ராபின்சன் said...

தங்கள் அருமையான பதிவுகளை தமிழ்அருவி திரட்டியில் இணைக்கலாமே http://www.tamilaruvi.in