![]() |
படம் : சாமு க்ளிக்ஸ் |
இரவின் வாசனையும்
பகலின் வெளிச்சமும்
மூச்சுக்காற்றில்
மணக்க
மெள்ளப் புரள்கிறது
புது மலர்
புதிய வண்ணங்களைக்
சேகரித்துக் கொண்டிருக்கிறது
இமைகளுக்குள்
உறங்கும் உலகம்
கனவொன்றில்
கடவுளுடன் கதைக்கையில்
திறவும் சின்ன இதழ்களில்
விடியலின் கதவு
திறக்கப்படலாம்
அப்போது
சிந்தும் புன்னகையில்
சிந்தும் புன்னகையில்
உலகம் சிலிர்க்கும்
உயிர்கள் பூக்கும்
உயிர்கள் பூக்கும்
மொழியொன்று மெருகேறும்
இசையில் லயம் கூடும்!
-
இசையில் லயம் கூடும்!
-
1 comment:
கனவொன்றில்
கடவுளுடன் கதைக்கையில்
திறவும் சின்ன இதழ்களில்
விடியலின் கதவு திறக்கப்படலாம் = அருமை சார்.
Post a Comment