கீச்சுகள் - 41கோபத்துல கத்திட்டு, பக்கத்தில இருக்கிறவங்ககிட்ட கோபப்பட்டு கத்துனா நமக்குத்தா கெடுதல்னு அட்வைஸ் பண்ற அல்ப சுகம் இருக்கே... அப்பப்பா செம :)

-

உங்கள் நம்பிக்கையின்மையை அவர்கள் கேள்விக்குட்படுத்தாத போதும், அவர்களின் நம்பிக்கையை நீங்கள் கேள்விக்குட்படுத்துவதை நம்புகிறீர்களா?

-

புதிய பாராட்டும் மகிழ்ச்சியும் முந்தைய மகிழ்ச்சியை மறக்கடித்து விடுகின்றன. அவமானமும் துக்கமும் மட்டும் முந்தையவைகளோடு இணைந்துவிடுகின்றன.

-

நிரூபணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லைதான், ஆனாலும் நிரூபித்துவிட மனது தவிக்கிறது!

-

அவசியப்படாத தருணத்தில் ஓய்வெடுத்துப் பாருங்கள். அப்போது தெரியும் ஓய்வு எத்தனை பெரிய நரகமென்று!

-

 தினமும் இருக்கும் 24மணி நேரத்தில், குறைந்தபட்சம் ஒருபக்க அளவுகூட பேனாவினால் எழுதாமல் அப்படி என்னதான் வெட்டி முறிக்கிறேன்னு ஒன்னும் புரியல!

-

மௌனமாய் இருப்பதை, ”சொன்னாத்தானே தெரியும்!” என்கிறார்கள் :) #ஙே

-

சில கதவுகள் பூட்டியிருப்பது போலவே தென்படுகின்றன. அழுத்தித் தள்ளினால்தான் தெரிகிறது அவை பூட்டப்படவில்லையென!

-


முத்தங்களுக்கு அனுமதி கிடையாது ஆனால்நீ அத்து மீறலாம்!

-

அதோ அந்த மூலையிலிருந்து அரை நிலா யாரையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உங்களையோ!?


-

பல வருடங்கள் தீனிபோட்டு தடவித்தடவி வளர்த்ததொப்பையை சில வாரங்களில் கரைக்க நினைக்கிறதுக்குப் பேருதான்பேராசைப்பிணாத்தல்போபியாவியாதி!


-

நம்மூர்லயும் ஒருஅமேசான் காடுஇருந்திருந்தா பல பிரச்சனைகளிலிருந்து தப்பிச்சிருக்கலாம் குறிப்பா சாவடிக்கிற இந்த டிவி விளம்பரங்களிலிருந்து!

-

எதைநிரூபிக்கஇந்த வாழ்க்கை!?


-மனசுக்கு ஒரு Mute பட்டன் இருந்திருக்கலாம்!

-

ட்விட்டர் மாதிரி 140 எழுத்துகதானு ஃபேஸ்புக்லயும் வெச்சிருந்தா, ஃபேஸ்புக்ல இத்தனை யுத்தங்கள் நடந்திருக்காதுனு தோணுது!


-

சரி try பண்றேன்என்பதிலிருக்கும் ’try’க்கு நிகரான தப்பித்தல், பொய் வேறெதும் இருக்குமா என்பதைக் கண்டுபிடிக்க நான் try பண்ணிட்டிருக்கேன்!


-


குளிர்ந்து கிடக்கும் இந்த விடியலை, கதகதப்பாய் கட்டியணைத்து முன்னுச்சியில் ஒரு முத்தமிட்டாலலென்ன!


-


இப்போது கவ்வியிருக்கும் இந்த உணர்வு, ஒரு உறக்கத்திற்குப்பின் மாறிடச் சாத்தியமுண்டு. மாறிடச் சாத்தியமுடைய உணர்வுக்கா இத்தனை போராட்டம்?


-

நமக்கு IRCTCகூட நேரடிதொடர்பு இருக்குமோ? யாருக்கு Tatkal போட்டாலும் கிடைக்குது. நம்ம பேரு ராசிக்கு ஆடி போயி ஆவணி போயி புரட்டாசி வந்தும் ம்ஹூம்

-

9 comments:

lakshmi prabha said...

கீ ... கீ .. கீ ..

sathiyananthan subramaniyan said...

மிகவும் என்னை சிதிக்கவைத்தது //சில கதவுகள் பூட்டியிருப்பது போலவே தென்படுகின்றன. அழுத்தித் தள்ளினால்தான் தெரிகிறது அவை பூட்டப்படவில்லையென!// அருமை அண்ணா !

Anonymous said...

வணக்கம்
அனைவரையும் சிந்திக்கவைக்கும் பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராஜி said...

சிந்திக்க வைத்தன அத்தனை கீச்சுகளும்

சே. குமார் said...

கீச்சுக்கள் அருமை...

Usha rajah rajeshwari said...

wow!

Usha rajah rajeshwari said...

wow!

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அனைத்துமே அருமை - அத்து மீற அனுமதிக்கும் முத்தங்கள் சூப்பர் - அனைத்தையும் இரசித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Avargal Unmaigal said...


அனைத்துமே மிக மிக அருமை . அத்து மீற அனுமதிக்கும் முத்தங்கள் மிக அருமை வாவ்வ்வ்வ்வ்வ்வ்-