மயிலும் குயிலும்


படம் : இணையத்தில்


சிக்கன் பப்ஸ்
சாப்பிட்டிருக்கியா!
வெல்லம் போட்ட
கச்சாயம் தின்னிருக்கியா!

எங்க வீட்டுப் பக்கம்
பிக் சிக்இருக்கு!
எங்க வீட்ல
நாட்டுக்கோழி இருக்கு!

அங்கே மேரிப்ரவுன் கூட
இருக்குதே!
எங்க அப்பத்தா
கல்லக்கா சுட்டுத்தருமே!

குஷி ரைட்
செமையா இருக்குமே!
ஆலமரத்துல
தூரி ஆடியிருக்கியா!

சம்மர்க்கு
தீம்பார்க் போவோமே!
மொட்டக் கெணத்துல
நீச்சலடிப்போமே!

ஷாப்பிங் போவோம்
தெரியுமா!
சனிச் சந்தைக்கு போவோம்
தெரியுமா!

எங்க வீட்ல
ஃப்ரிட்ஜ் இருக்கு!
எங்கூட்ல
புதுப் பானையிருக்கு!

வெஜிடபுள்ஸ்க்கு கூட
ஏசி மார்ட்தான்!
நாங்க காட்டுலயே
பொறிச்சுக்குவோம்

நூடுல்ஸ் எனக்கு
ரொம்பப் பிடிக்கும்!
பழம் சக்கரை போட்ட
சந்தவை ரொம்பப் பிடிக்கும்!

அப்பா பீட்சா
வாங்கிட்டு வருவாரே!
காடை முட்டை சாணி உருண்டையில
சுட்டு திம்பமே!

எங்க வீட்டுல
பொமரேனியன் டாக் இருக்கே!
எங்க வீட்டுல
ரெண்டு எருமை இருக்கே!

ஸ்விம்மிங் கிளாஸ்
போலாம்னு இருக்கேன்
வாய்க்கால்ல
சம்மர் சாட் அடிப்பனே!

நகரத்து மயிலுக்கும்
கிராமத்து குயிலுக்கும் நடந்த
நிதர்சன
வாள் வீச்சுகளில்
இரத்தம் சிந்திக்கொண்டிருந்தேன்!

வெற்றி
தோல்வி தரவல்லாத
மொண்ணை ஆயுதங்கள்
தாங்கியவனாய்!


-0-

12 comments:

கவியாழி said...

வெளிநாட்டு மசாலாவை விட நம்மூரு கம்பங்கஞ்சியும் மாங்கா பத்தையும் இருந்தால் நாளெல்லாம் ஆனந்தமாய் உற்சாகமாய் இருக்க முடியுமே

Subasree Mohan said...

Fantastic

ராமலக்ஷ்மி said...

அருமை:).

கிருத்திகாதரன் said...

மிக அருமை.

Janci said...

arumai....

Unknown said...

அருமை அண்ணா !
வெற்றி கிராமத்துக்குத்தான் !
சுவையும் சத்தும் உண்டு ,
நகரத்தில் அழகும் விஷமும் உண்டு ,
உண்டு பார்த்தவர்களுக்கு தெரியும் ,
எது உண்மையென்று !

Unknown said...

அருமை அண்ணா !
வெற்றி கிராமத்துக்குத்தான் !
சுவையும் சத்தும் உண்டு ,
நகரத்தில் அழகும் விஷமும் உண்டு ,
உண்டு பார்த்தவர்களுக்கு தெரியும் ,
எது உண்மையென்று !

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நிறைய விஷயங்கள் இனிமேல் அருங்காட்சியகத்தில் வைத்து குழந்தைகளுக்கு காட்ட வேண்டும். பால் என்றால் பாக்கெட் தான் நினைவுக்கு வரும்; மாடு நினைவுக்கு வராது.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கதிர் சார்.

Prapavi said...

அருமை! மெதுவே இன்றைய காலக்கட்டத்தில், குயிலும், மயிலும் கலந்துவிட்டது பழக்கவழக்கத்தில்!

நாகராஜன் said...

ஆஹா... அருமையான பதிவுங்க கதிர். மயிலும் குயிலும் ஒப்பீடு அருமையிலும் அருமை. கிராமம் தான் வெல்லும்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - மயில் குயில் - இருவரின் வாள் வீச்சிலும் கண்ட உண்மைகள் - நிதர்சன்ங்கள் - நம்மால் பதில் கூறா இயலாது - இருப்பினும் காலம் மாறிக்கொண்டே தான் வருகிறது - கிராமத்தில் நகரத்தின் தாக்கமும் - நகரத்தில் கிராமத்தின் தாக்கமும் ( ???) வந்து கொண்டே தான் இருக்கின்றன. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

manichudar blogspot.com said...

நீங்க சொல்றதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு.எல்லாம் மாடர்ன் ஆகி எவ்வளோ காலம் ஆகுது !