தருணங்களின் தவிப்பு


அழிக்க மறந்திருந்த

அகாலமான நண்பனின்  
அலைபேசி எண்ணை 
அழிக்கும் தினத்தில்
இன்னொருமுறை 
செத்துப்போகிறான்.

***

சிலந்தியின் ஓட்டமும் 
உழைப்பும் கனவும்
ஒற்றை நொடியில் 
கலைந்து போகிறது
ஒட்டடையாய் 
கண்ணில் படும்போது

***

கடிக்கத் தவிக்கும் 
கொசுவை
அடிக்கும் கையில் 
சிதறிப்படிகிறது
வேறொருவரின் 
இரத்தம்

***

குதூகல குறும்புகளையும்
பட்டாம்பூச்சி படபடப்பையும்

பள்ளி கிளம்பும் பிள்ளை
தன் பையோடு 
சுமந்துபோகிறது
வீட்டை வெறுமையாக்கி!


***

17 comments:

Rekha raghavan said...

நான்கும் அருமை. விகடனில் சொல்வனத்தில் வந்திருக்கவேண்டியவை.

settaikkaran said...

//குதூகல குறும்புகளையும்
பட்டாம்பூச்சி படபடப்பையும்
பள்ளி கிளம்பும் பிள்ளை
தன் பையோடு
சுமந்துபோகிறது
வீட்டை வெறுமையாக்கி!//

அனைத்தும் அருமை என்றாலும், இது தான் பெஸ்ட்! :-)

//அகாலமான நண்பனின்//

ஏதோ ’மிஸ்’ ஆனமாதிரி இருக்குது கதிர்! ஆனால், கவிதை பிரமாதம்! :-)

எனக்குக் கூட வரவர கவிதை புரிய ஆரம்பிச்சிருச்சு! :-)

vasu balaji said...

நாலு ரெண்டு ஒன்னு:)

பழமைபேசி said...

//அழிக்க மறந்திருந்த
அகாலமான நண்பனின்
அலைபேசி எண்ணை//

அகாலமான நாண்பனின்
அழிக்க மற்ந்திருந்த
அலைபேசி எண்ணை

என இருத்தல் வேண்டும். அல்லாவிடில் பொருட்பிழை நேரிடுகிறது.

////அழிக்க மறந்திருந்த
அகாலமான நண்பனின்//

நீங்கள் அழிக்க மறந்திருந்த நண்பர் அகால மரண்ம் ஏற்பட்டவர் என்றாகிவிடுகிறது. ஒருவேளை நீங்கள் அழிக்க எண்ணியும் இருந்திருக்கலாம். அப்படி இருப்பின் என்னை அழிக்காமல் மன்னிப்பீராக!!

பழமைபேசி said...

குதூகலக் குறும்புகளையும்
பட்டாம்பூச்சி படபடப்பையும்
தன் பையோடு
சுமந்துபோகிறது
பள்ளி கிளம்பும் பிள்ளை
வீட்டை வெறுமையாக்கி!

இஃகிஃகி... பட்டி பாக்குறது...

பா.சதீஸ் முத்து கோபால் said...

All are Kathir Special..!!

anandrajah said...

சொல்லாடல்கள்.. உங்களுக்கு சிறு புள்ளை விளையாட்டாய் போய்விட்டது. சும்மா கலக்குறீங்க..!!

முனைவர் இரா.குணசீலன் said...

தவிப்பை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Kumky said...

ஹைக்கூ போல முயற்சிக்கலாம்..

நான்கை இரண்டாக்கினால் இன்னமும் அற்புதமாக வர வாய்ப்பிருக்கிறது..

கொஞ்சம் மலையாள கவிஞர் குஞ்ஞுண்ணியின் தமிழ் மொழி பெயர்ப்பு கிடைத்தால் வாசித்துப்பாருங்களேன்.

ஓலை said...

"நாண்பனின்" - pazhamaiyaa ithu?

நிலாமதி said...

First is best.

KSGOA said...

நல்லாயிருக்கு.

க.பாலாசி said...

மூன்றாவது கவிதை ரொம்ப அருமை... நல்லாருக்கு...

Franklin said...

அற்புதமான கவிதை வரிகள்.வாழ்த்துக்கள்.
- பிராங்கிளின்.

சத்ரியன் said...

கடைசியா இருக்கிறது மனசை பிசையுது மக்கா.

Unknown said...

அழகு அனைத்தும்....