வாசிப்பைத் தவிர வேறெதில் புதுப்பித்துக்கொள்ளமுடியும்?

சமீப காலங்களில் ஏதாவது நிகழ்ச்சி அல்லது விழாக்களில், பரிசு அல்லது நினைவுப்பரிசு என்ற பெயரில் வண்ண நெகிழித்தாளால் சுற்றப்பட்டு அளிக்கப்படுபவைகளில் புத்தக வடிவத்தையொத்த பரிசுகள் மேல் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்பு ஏற்படுவதுண்டு. அதே சமயம் அதுகுறித்து அச்சமும் அலுப்பும் சிலசமயம் தோன்றுவதுமுண்டு, காரணம் ஏற்கனவே நம்மிடம் இருக்கு புத்தகமாகவோ அல்லது ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆவது எப்படியென்ற சுயமுன்னேற்ற புத்தகமாகவோ அமைந்துவிடுவதால். அந்த நேரங்களில் இந்தப் புத்தகம் கொடுத்ததற்குப் பதிலாக ஒரு பொட்டலம் வெள்ளைக்காகிதம் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்குமேயென்று நினைத்துக்கொள்வதுண்டு.

வருடந்தோறும் தமிழ்மணம் திரட்டி நடத்தும் போட்டியில், 2010 ஆண்டிற்கான போட்டியில் மட்டுமே கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இருவேறு பிரிவுகளில் ஒரு முதல் பரிசும், ஒரு இரண்டாம் பரிசு கிடைத்தது. பரிசுக்கான தொகைக்கு புத்தகமாக மட்டுமே வாங்க முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. நியூ புக்லேண்ட்ஸ், நூல் உலகம் ஆகிய புத்தக நிலையங்களிலிருந்து தமிழ்மணம் சார்பாக பரிசாக நான் பெற்ற புத்தகங்களின் பட்டியல்:



நியூ புக்லேண்டில் இருந்து………….

1 .நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி - ராமச்சந்திர நாயர்
2. உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்
3. கள்ளி - வாமுகோமு
4. அரசூர் வம்சம் - இரா.முருகன்
5. சித்தன் போக்குபிரபஞ்சன்
6. என் வீட்டின் வரைபடம் - ஜே.பி.சாணக்யா
7. பேசாத பேச்செல்லாம் - .தமிழ்ச்செல்வன்
8. பீக்கதைகள் - பெருமாள் முருகன்
9. ஏழாம் உலகம்ஜெயமோகன்
10. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
11. ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
12. லா.ச.ராமாமிர்தம் கதைகள்
13. மெல்ல சுழலுது உலகம் – செல்வராசு
14. யுத்தங்களுக்கிடையில் அசோகமித்ரன்



நூல்உலகம்.காம்-ல் இருந்து….

15. சுஜாதாட்ஸ் – சுஜாதா
16. கூண்டும் வெளியும் - சுப்ரபாரதிமணியன்
17. கொள்ளைக்காரர்கள் - பொன்னீலன்
18. மூடிய முகங்களில் - அழகியபெரியவன்
19. தேடல் - பொன்னீலன்
20. சொல்லாத சொல் - மாலன்
21. ரெண்டு – பா.ராகவன்
22. களை எடு - நம்மாழ்வார்
23. இருளர்கள் ஓர் அறிமுகம் – க.குணசேகரன்
24. கடல்புரத்தில் - வண்ணநிலவன்
25. நரிப்பல் - இறையன்பு
26. விசும்புஜெயமோகன்



வேண்டிவிரும்பிக்கேட்ட புத்தகங்கள் வந்தடைந்துவிட்டன. புத்தகத்தின் புது’மை’ வாசம், எடுத்துக்கொள் என இருகரம் விரித்து அழைக்கிறது.

அதேசமயம், வாசிக்காமல் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியலில் இந்தப் புத்தகங்களும் இணைந்து, வாசிக்க நேரம் ஒதுக்கமுடியா சோம்பேறித்தனம் குறித்த குற்ற உணர்வின் அடர்த்தியை கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறது.

மனது குதூகலிக்கும் வகையில் பரிசளித்த தமிழ்மணம் திரட்டி, நியூபுக்லேண்ட், நூல்உலகம்.காம் மற்றும் வாக்களித்த பதிவுலக நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இயந்திரத்தனமான போக்கிலிருந்து கொஞ்சம் கூடுதல் நேரத்தை வாசிப்பிற்காக பதியனிடவேண்டும். வாசிப்பைத் தவிர வேறெதில் புதுப்பித்துக்கொள்ளமுடியும்.

-0-

20 comments:

Anonymous said...

வாழ்த்துகள் தோழா!

vasu balaji said...

புக்கு எடு கொண்டாடு..கண்ணா இன்னோரு புக் படிக்க ஆசையா..இப்படியெல்லாம் மனசுகுள்ள சொல்லிப் பார்த்துக்கிடுங்க..இல்லன்னா கண்ணுல படுற இடமா ஒட்டி வைங்க..ஜமாய்ங்க சாமியோவ்:)) வாழ்த்துகள்.

ஓலை said...

Ithil pazhamai yeththanai suttaaru unga kitteyirinthu. Aththanaiyum naanga padikka uthavum.

settaikkaran said...

வாழ்த்துக்கள்! அதிகம் வாசிப்பனுபவம் இல்லாத எனக்கு, இதில் ஒரு பட்டியலே கொடுத்து உசுப்பேற்றியிருக்கிறீர்கள். திருந்துகிறேனா இல்லையா பார்க்கலாம். :-)

பிரபாகர் said...

நானும் ஒரு சில வாசிக்க முயற்சிக்கிறேன் கதிர்...

பிரபாகர்...

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள், விரைவில் வாசித்து முடிப்பதற்கும்:)!

VELU.G said...

வாழ்த்துக்கள்

வாசித்து முடித்ததும் சொல்லுங்கள் கேள்விகளை அனுப்பி வைக்கிறேன்

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு கதிர் அண்ணா. பதிவின் இறுதி வரிகள் மிக அருமை.

16 மணி நேர வேலைகளுக்கு பின்பும் ஒரு சில மணி நேரங்களை வாசிப்பிற்குக் கொடுப்பதாலேயே இந்த பாலை மண்ணின் துயரிலிருந்து மெல்ல விடுபட முடிகிறது. எப்போதும் என்னைப் புதுப்பித்துக்கொள்ள வாசிப்பே உற்ற துணையாக இருக்கிறது.

எனக்கும் கூட தமிழ்மண விருதுகளில் கிடைத்த கூப்பனைப் பயன்படுத்தி நூல்கள் வாங்கவேண்டும். சவுதியில் இருப்பதால் கொஞ்சம் தாமதமாகிறது.

நூல்களை வாசித்தபின் அந்த அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் கதிர் அண்ணா.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

புத்தக லிஸ்டப் பாத்தா கூடிய சீக்கிரத்தில இலக்கியவாதி ஆகிடுவீங்க போல இருக்கே ;)

தமிழ்மணம் குழுமத்துக்கு பாராட்டுக்கள்.. பரிசை புத்தகமாகத் தந்து வாசிப்பை ஊக்குவிப்பதால்..

//வாசிப்பைத் தவிர வேறெதில் புதுப்பித்துக்கொள்ளமுடியும்.//

புதியன கற்றல் - எந்த மூலமாகவும் இருக்கலாம்..

துளசி கோபால் said...

அருமையான தேர்வுகள்!

விரைவில் வாசித்து முடிக்க என் வாழ்த்து(க்)கள்.

Unknown said...

நானும்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள்..

இதையெல்லாம் படிக்க நேரம் இருக்குதுங்களா கதிர்?

Anonymous said...

வாசிப்பு என்பதை விடவும்.. அது விடயம் தெரிந்த ஆசாமி ஒருவரோடு உரையாடுவதை போன்றதே ஆகும்.. அதனால் நமக்கும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிற வாய்ப்புக் கிட்டும் ..

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு கதிர் அண்ணா. பதிவின் இறுதி வரிகள் மிக அருமை.

Romeoboy said...

வெட்டு புலி மிஸ் பண்ணிடீன்களே தலைவரே ..

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

அனைத்தையும் விரைவில் படித்து மூன்று புத்தகங்களைப் பரிந்துரை செய்க. நானும் வாங்கி படிக்க வேண்டும்.

நட்புடன் சீனா

Kumky said...

துண்டு போட்டு வச்சா ஏதாச்சும் அகப்படுங்களா சாமியோ.....

அன்புடன் அருணா said...

அய்யய்ய்ய்யோ பொறாமையா இருக்கு!

சக்தி பிரகாஷ் said...

இத்தனை புத்தகங்களையும் பட்டியலையும் பார்க்க பார்க்க வயித்தெரிச்சலா இருக்கு தலைவரே.. நான் வாங்கிப் படிக்க நினைத்து வைத்திருக்கும் பல புத்தகங்கள் இங்கே இருப்பதால். நல்லா படிச்சு வாழுங்க.. வாழ்த்துக்கள்.. ஹ்ம்ம்ம்

ADMIN said...

என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. ஒரு சிறிய மாற்றத்தை இப்பதிவில் உள்ளிட்டால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன்.. இதில் இடம்பெற்றுள்ள நூல்உலகம்.காம் என்பதை ஒரு சுட்டியாக மாற்றம் செய்தால் மேலும் பலர் இந்த வலைதளத்திற்கு வருகை தந்து தங்களின் புத்தக தாகங்களை தீர்த்துக்கொள்ள ஏதுவாகும்.. அதைப்போலவே பரிசாக பெற்ற புத்தகங்களை பட்டியலிட்டுக் காட்டிய இடத்தில் தலைப்பாக நூலகம்.காம் என்று எழுதியுள்ளீர்கள்.. தயவு செய்து அதை நூல் உலகம்.காம் என்று திருத்தவும்..

தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மிகச் சிறந்த சேவையை ஆற்றிவருவதாக இந்த வலைதளத்தைப் பற்றி அறிந்தேன்.. மேற்குறிப்பிட சிறு திருத்தத்தை செய்தால், இதன்மூலம் அதாவது தங்களின் இடுகையை வாசிப்பவர்கள் சுட்டியின் வழியாக இவ்வலைதளத்திற்கு வருகை புரிவதற்கு ஏதுவாக இருக்கும்.

இவ்விணையதளத்தின் சரியான முகவரி:

www.noolulagam.com

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..!

(நானும் ஒரு தமிழ்ப் பற்றாளன் என்பதால் இதை கருத்துப்பெட்டியின் வாயிலாக பகிர்கிறேன்.).