மூலைத் தேநீர்க்கடையில்
ஆவிபறக்க நுரை ததும்பும்
தேநீர்க்குடுவையை ஏந்தி
உதட்டில் பொருத்தி
உடைபடும் நுரைக்குமிழ்களை
உறிஞ்சும்போது கவனித்தேன்…
தொட அஞ்சும் அழுக்கு
எண்ணைத் துளிகளை
தொட்டுப்பாராத சிக்கு மசிறு
எங்கெங்கோ கிழிந்த
வர்ணம் தொலைத்த சேலை
வெறுமை சூழ்ந்த விழிகளோடு
ஏந்தியகைகளோடு
நின்று கொண்டிருந்தவளை…
இன்னொரு முறை
பார்க்கும் துணிவில்லை …
அவசரமாய்த் துழாவி
எட்டி ஏந்திய கையில்
இரண்டொரு சில்லறையை
விட்டுவிட்டு பார்வையை
வேறொரு திசைக்கு
இடம்பெயர்த்தும் முன்
உள்ளடங்கிக் கிடந்த
அவள் கண்களில்
ஒருமுறை தேடிப்பார்த்தேன்..
எங்கேயோ ஓடிப்போய்
எந்ததகவலும் இல்லாமல்
கால ஓட்டத்தில் கரைந்துபோன
சின்னவயதில் சிட்டாங்கல் ஆடிய
எதிர்வீட்டு வசந்தாக்காவா
இருப்பாளோ?
-0-
17 comments:
ஏனுங்ணா.. இப்படில்லாம் (:
வசந்தாவை...சந்தடி சாக்கில் அக்காவாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது....
பழைய நினைவுகள்... ம்...
நெஞ்சு கணத்தது.
நல்லாருக்கு:(
நெகிழ்ந்தேன்....
உங்கள் மனநிலை...அந்த நேரத்து அதிர்ச்சிதான் இந்தக் கவிதை!
Nallaa irukku.
கனத்துப் போகிறது...
sila samayam yathartham karpaniyai vida nerudalaga irukkum
யப்பா, முடியல சாமி.
நல்லாருக்கு.
சட்டென்று பரவும் ஒரு வலி
அருமை
ஒருவித இறுக்கத்தை தருகிறது கவிதை..
குழில்களில்..?
வசந்தாவாய் இருப்பாளோ .. காதலித்து ஏமாற்றிய பெண்ணைபற்றி சொல்வது போல தொனியில் ..
கடைசியில் அக்காவாய் ஆக்கி விட்டீர்களோ கதிர்..
arumai.vallththukkal
arumai.vallththukkal
நல்லாருக்கு.
Post a Comment