கோடை காலம் முடிந்தும் கொளுத்துகிறது வெயில். தார் சாலையில் பிரதிபலிக்கும் வெயிலில் கண்கள் கூசுகிறது. அரசு மருத்துவமனை சிக்னலில் பைக்கை நிறுத்துகிறேன். எனக்கு முன்னும் பின்னும் வாகனங்கள் நெருங்கி நிற்கின்றன. யாருக்கும் அந்த வெயிலில் நிற்க விருப்பமே இல்லை. சிக்னலில் இன்னும் பச்சை விழவில்லையே என்ற எரிச்சல் எண்ணையில் பொரியும் கடுகாய் எல்லோர மனதிலும் தெறிக்கிறது. வெயில் தலைவழியே உள்ளிறங்குகிறது. சிந்தனை ஒருமுகப்படாமல் சுழற்றி அடித்துக் கொண்டேயிருக்கிறது.
வலதுபுறமாய் சாலையின் நடுவே இருக்கும் சிறிய தடுப்பு சுவர் ஓரம் நிற்கிறேன். எனக்கு இடது புறம் ஒரு இன்னோவா கார் நிற்கிறது. கருப்பு தாள் ஒட்டப்படாத குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே ஒரு பெண் குழந்தை இருக்கை மேல் ஆடிக்கொண்டிருக்கிறது. நான் பார்ப்பதை கண்டு லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே தொடர்ந்து ஆடிக் கொண்டேயிருக்கிறது. என்னையறியாமல் என் உதடு புன்முறுவல் பூக்கிறது.
வலது புறச் சாலை காலியாக இருக்கிறது. சுமார் 13 வயதிருக்கும் ஒருபெண், வலது புறச்சாலையிலிருந்து தடுப்பு சுவர் தாண்டி என் பைக் முன் குதிக்கிறாள். அவளுடைய கோலத்தை பார்த்தவுடனே பளிச்சென தெரிகிறது அவள் பிச்சையெடுக்கும் பெண் என்று.
கையில் இருக்கும் சிறிய தகர டப்பாவை குலுக்குகிறாள். உடை மிக மோசமான அழுக்கோடு இருக்கிறது, குளித்தே ஓரிரு நாட்கள் இருக்கலாம். தலை முடி மிக மோசமாக பிசுக்கேறி சிக்குபிடித்திருக்கிறது. அணிந்திருக்கும் உடை தொட்டால் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு அழுக்கேறியிருக்கிறது. கால்களில் செருப்பு கிடையாது.
இடது புறம் காருக்குள் விளையாடிய குழந்தையும், வெயிலில் சலனமின்றி பிச்சை எடுக்கும் பெண்ணும் தராசுத் தட்டில் மேலும் கீழும் ஊஞ்சல் ஆடுவதுபோல் உணர்கிறேன்.
அதிக பட்சம் 2 நிமிடம் நிற்க வேண்டிய எனக்கே அந்த வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. எப்படி அவளால் தாங்க முடிகிறது. கொதிக்கும் தார் சாலை அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.....
என் மனதிற்குள் ஏதேதேதோ ஓடுகிறது. காசு போடலாமா, வேண்டாமா என மனதில் ஒரு ஊசலாட்டம். மேல் சட்டைப்பையில் இருந்த ஒரு நாணயத்தை எடுத்து போடுகிறேன். பின்னால் நிற்பவர் ‘இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு’ என்று சலித்துக் கொள்வது கேட்கிறது. அவர் என்னை சொன்னாரா? அல்லது அந்த பிச்சைக்கார பெண்ணை சொன்னாரா? என தெரியவில்லை, திரும்பி பார்க்கிறேன் அவர் நான் திரும்புவதை உணர்ந்து வேகமாய் என்னை பார்ப்பதை தவிர்க்க வேறு பக்கம் பார்ப்பதாய் எனக்கு தொன்றுகிறது.
சிக்னலில் பச்சை விழுகிறது, தலையில் இறங்கிய வெயிலை விட மனது புழுங்குகிறது. முந்தைய நாள் பள்ளியில் தன் புத்தகத்தை காணவில்லையென ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் போனில் அழுத போது, அந்த அழுகைக்கு நான் துடித்தது நினைவிற்கு வருகிறது.
சில கேள்விகள் மனதிற்குள் உறுத்த ஆரம்பிக்கிறது. . . . . ..
• எதன் பொருட்டு இவளை அவளுடைய பெற்றோர் பெற்றெடுத்திருப்பர்.
• பிச்சையெடுக்கும் தொழில் மட்டுமே இவளுடைய எதிர்காலத்தை தீர்மானித்துவிடுமா?
• இவள் குழந்தையாய் கருவுற இவளுடைய தாயும், தந்தையும் காதலோடு கலவியில் ஈடுபட்டிருப்பார்களா? அல்லது வெறும் காமத்தின் எச்சிலா?
• இடது பக்கம் குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே இருக்கும் குழந்தை, வலது பக்கம் காலில் செருப்பில்லாமல் பிச்சையெடுக்கும் குழந்தை, இரண்டிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை எது நிரப்பும்...... ஜனநாயகமா? கடவுள் சக்தியா? பகுத்தறிவா?
• என்னுடைய கடமை ஒரு சில்லறைக் காசைப் போட்டுவிட்டு, வார்த்தைகளைத் தேடி வலைத்தளத்தில் எழுதி விட்டு பின்னூட்டத்திற்கு
காத்திருப்பதா?
விடை தெரியாத கேள்விகள் மனதிற்குள் பாரமாய் சுருண்டு கிடக்கிறது.
__________________________________________
51 comments:
மீள் இடுகை
நான் பர்ஸ்ட் இல்ல இல்ல செகண்ட்
இது மீள் பின்னூட்டமில்லை. முதல் பின்னூட்டம். இப்பல்லாம் இது சென்னையில பிஸினசாம். ஒரு நாளைக்கு குறைந்தது 300லிருந்து 1000 வரை கூட சம்பாதிக்கிறாங்களாம். என்னத்த சொல்ல.:(
//இடது பக்கம் குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே இருக்கும் குழந்தை, வலது பக்கம் காலில் செருப்பில்லாமல் பிச்சையெடுக்கும் குழந்தை, இரண்டிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை எது நிரப்பும்...... ஜனநாயகமா? கடவுள் சக்தியா? பகுத்தறிவா?//
தெரியவில்லை கதிர். மழை பெய்கிறது...மழை பொய்க்கிறது.....என்பது போல, இதையும் நாம் வாழும் காலத்தின் அடையாளமாக எடுத்துக்கொள்ள வேண்டியது தான் போல.
-ப்ரியமுடன்
சேரல்
//இப்பல்லாம் இது சென்னையில பிஸினசாம். ஒரு நாளைக்கு குறைந்தது 300லிருந்து 1000 வரை கூட சம்பாதிக்கிறாங்களாம். என்னத்த சொல்ல.:(//
:(
இவர்களையெல்லாம் நின்று கவனிக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்களா????
நல்லதுதான்...
:)
இடது பக்கம் குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே இருக்கும் குழந்தை, வலது பக்கம் காலில் செருப்பில்லாமல் பிச்சையெடுக்கும் குழந்தை, இரண்டிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை எது நிரப்பும்...... ஜனநாயகமா? கடவுள் சக்தியா? பகுத்தறிவா?
ஒரு மனிதனுக்கு வறுமை வந்தால் பிச்சையும் எடுப்பான் கத்தியும் எடுப்பான் .
வாழ்க்கையெல்லாம்
பயணமாய்
பயணமெல்லாம்
காட்சியாய்
காட்சியெல்லாம்
கேள்வியாய்
கேள்வி கேட்பதே
என் வாழ்க்கையாய்!
//இடது பக்கம் குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே இருக்கும் குழந்தை, வலது பக்கம் காலில் செருப்பில்லாமல் பிச்சையெடுக்கும் குழந்தை, இரண்டிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை எது நிரப்பும்...... ஜனநாயகமா? கடவுள் சக்தியா? பகுத்தறிவா?//
எளிதாய்க் கூற வேண்டுமானால்...
அந்நேரத்தில் நீங்கள் நிரப்பிக் கொண்டிருந்தீர்கள்...
சமயங்களில் நானும்...
நாமில்லா நேரத்தில் வேறு சிலரும்..
:-(
//இடது பக்கம் குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே இருக்கும் குழந்தை, வலது பக்கம் காலில் செருப்பில்லாமல் பிச்சையெடுக்கும் குழந்தை, இரண்டிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை எது நிரப்பும்...... ஜனநாயகமா? கடவுள் சக்தியா? பகுத்தறிவா//
பொருளாதாரம்?
//து மீள் பின்னூட்டமில்லை. முதல் பின்னூட்டம். இப்பல்லாம் இது சென்னையில பிஸினசாம். ஒரு நாளைக்கு குறைந்தது 300லிருந்து 1000 வரை கூட சம்பாதிக்கிறாங்களாம். என்னத்த சொல்ல.//
கரெக்ட் சார். பெங்களூர்ல ஒருத்தன் பெரிய வீடு கட்டிட்டான். இன்னைக்கும் வெள்ளிக்கிழமைல மசூதி வாசல்ல நின்னு பிச்சை எடுத்திக்கிட்டு இருக்கான். ஆனா எல்லாப் பிச்சைக்காரங்களையும் இந்தக் கேட்டகரில சேத்துர முடியாது.
இலகும் மனமிருக்கும் வரைத்தான்.... பிச்சை சாத்தியம்.
அது இல்லையேல் மனிதன் தன் சக்திக்கேற்ற இயந்திரமாய் உழல்வான்.
இலகும் மனம் என்பது பிச்சையெடுப்பவரை... கூலி வேலைக்கேனும் திருப்பிவிடவேண்டும்.
இது சாந்தியமா என்பதே கேள்வி,
வெறுமனே அனுதாபப்பட்டு ...
ஆகவேண்டியதை பார்ப்பதுதான் யதார்த்தம்.
தீர்வு யாருக்கும் தெரிவதில்லை... அல்லது முற்படுவதில்லை.
கேள்விகளுக்கான பதில் அந்த இடுகையிலேயே போட்டுவிட்டேன்... வேறென்ன புதுசா சொல்லப்போறேன்...
அதிகாரமில்லை..
மனமில்லை...
நேரமில்லை...
சிந்திப்பதும் இல்லை...
இதுபோல பல இல்லைகள்..
பாக்கெட்டில் கொஞ்சம் சில்லறையும் கொஞ்சமே கொஞ்சம் இலகிய மனமும் மட்டும் உண்டு.
எல்லாருக்கும் இந்த இயலாமை உண்டு என் செய்வது...கதிர்..
கன்னத்துல கைவெச்சு படம் எடுத்தாச்சில்லே. இனிமே நீங்க எழுத்தாளர்தான். நிற்க, இந்த நிகழ்வுக்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்?
இந்த விடை தெரியாத கேள்விகள் எல்லோருக்கும் உண்டு என்ன செய்வது என்பதுதான் தெரியவில்லை.
என்னவென்று சொல்ல.. காணும் நிகழ்ச்சி அனைத்தையும் கையறு நிலையில் கடந்துதான் செல்ல வேண்டும்.
மீள் பதிவு என்றாலும் சிந்தனையை தூண்டும் பதிவு ..சில கேள்விகளுக்கு பதிலே இல்லை .
பகிர்வுக்கு நன்றி கதிர் சார்
உங்களை போல நானும்..வகை தெரியாம முழிக்கிறது.
அவனவனுக்கு வாழ்க்கை அவன்( படைத்தவன்) போட்ட பிச்சை.
கொஞ்ச நாளுக்கு முன்னாடி எங்கயோ படிச்சு ஒரு விசயம் நியாபகத்துக்கு வருது. மும்பைல ஒரு வீட்டுல கணவனும் மனைவியும் வேலைக்கு போறதால குழந்தைய கவனிச்சுக்க வீட்டுல ஒரு பொண்ண வேலைக்கு வச்சுருந்துருக்காங்க. அந்த பொண்னு அந்த குழந்தைய இப்படி ரோட்டுல பிச்ச எடுக்கறவங்களுக்கு வாடைகைக்கு விட்றுக்கா. கடைசியா ஒரு நாள் மாட்டிகிட்டா. என்னத்த சொல்லறது. வானம்பாடிகள் ஐயா பின்னூட்டத்த படிக்கிறப்ப இத தடுக்கறதுக்கு என்ன பன்றதுன்னு யோசிக்க தோணுது.
எனக்கு கொஞ்சமும் பிடிக்காத இடுகை.
இந்த முரண்களை பற்றி எல்லாம் பல வருடங்களுக்கு முன்பு யோசித்து
அழுது கோபித்து சினம் கொண்டு நொந்து பிறகு தெளிந்து இப்போது
நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன்.
இதை எல்லாம் எது தீர்க்கும்? கம்ம்யூனிஸமா. சோஷலிஸமா.
இருப்பவர்களிடம் கொள்ளை அடித்து இல்லாதவர்களுக்கு கொடுக்கலாமா?
இப்படி யோசித்து பாருங்கள் விபசார விடுதியில் தொழில் செய்யும் ஒரு பெண் இவளை விட சவுகரியமாக இன்னும் நிறைய சம்பாதிப்பாள்.
பிறகு ஏன் அந்த பெண் அப்படி போகவில்லை. மானம் தான் காரணமா?
இல்லை.
அவளுக்கு பிச்சை எடுப்பதில் பிழைப்பு ஓடுகிறது. அதில் அவள் பிழைக்கிறாள்.
உலகில் எல்லோரும் பிழைக்க தெரிந்தவர்கள்.
பிழைக்க தெரியாதவர்கள் யார் தெரிஉமா
அதிகமாக புத்தகம் படித்து இப்படி உங்களையும் என்னையும் போல
சுற்றி இருக்கும் உலகத்தை பார்த்து உச்சி கொட்டிக்கொண்டிருக்கும் கூட்டம்.
மற்றவர்கள் எல்லோரும் அவரவர் அளவில் சவுகரியமாகவே பிழைக்கிறார்கள்.
சமுதாயத்தில் நம்மை விட பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை அவர்கள் இலக்கியம் எழுதினால் நம்முடைய உச்சி வெயில் இரு சக்கர வாகன பயணத்தை பற்றி உருகி உருகி எழுதலாம்.
நமக்கு இரு சக்கரத்தில் போகுமளவுக்கு வசதி இருப்பதால் பிச்சை எடுக்கும் சிறுமியை பற்றி உருகி உருகி எழுதுவோம்....
இப்படித்தான் போகிறது வாழ்க்கை.
மற்றபடி பணக்காரர்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்றோ ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் என்றோ சொல்லிக்கொள்வது ஒரு வகை புழுக்கம்.
இவர்கள் இப்படி இருக்க யார் காரணம் என்று கேட்டால்
"நீங்கள் ஏன் பில் கேட்ஸாய் இல்லை நான் ஏன் அமெரிக்க ஜனாதிபதியாய் இல்லை?"
இந்த கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால் அதற்கும் விடை தெரிந்துவிடும்.
ன்னுடைய கடமை ஒரு சில்லறைக் காசைப் போட்டுவிட்டு, வார்த்தைகளைத் தேடி வலைத்தளத்தில் எழுதி விட்டு பின்னூட்டத்திற்கு
காத்திருப்பதா?
விடை தெரியாத கேள்விகள் மனதிற்குள் பாரமாய் சுருண்டு கிடக்கிறது.//
நியாயந்தான் கதிர்.
அப்பிடியே “வானம்பாடி” பாலா சொல்றதையும் கவனிக்க வேண்டியிருக்கே.
எல்லா நகரங்களிலும் இது போன்ற காட்சிகள் அன்றாடம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. ஐயா சொன்னது போல, இது ஒரு தொழிலாய்க் கொழித்துக்கொண்டும் இருக்கிறது. இருப்பினும், பிஞ்சுக்குழந்தைகளை பிச்சைக்கோலத்தில் பார்க்கையில், இவர்கள் செய்த பாவம் என்ன என்ற கேள்வி விடாமல் பின்தொடர்கிறது.
Visa Comments are well thought of. I agree with him fully
விடை தெரியாத கேள்விகள்...
நிறைய...
:-((
//இடது பக்கம் குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே இருக்கும் குழந்தை, வலது பக்கம் காலில் செருப்பில்லாமல் பிச்சையெடுக்கும் குழந்தை, இரண்டிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை எது நிரப்பும்...... ஜனநாயகமா? கடவுள் சக்தியா? பகுத்தறிவா?//
ஜனநாயகத்தால் கண்டிப்பாக இதை செய்ய முடியாது
கடவுள் ???
இந்த மனிதனால் தான் இதை மாற்ற இயலும்
எப்போது?? அதை காலம் தான் சொல்ல வேண்டும்
நல்ல பதிவு கதிர்.
விசாவின் கருத்துகள்.. யோசிக்க வைக்கின்றன.
மார்க்ஸியம் படியுங்கள்.புரியும்.
ஒரு வகையில் நாமும் குற்றவாளிகல்தான்.
நாம் பிச்சை போடுவதால்தான் என்னவோ அவர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காமல் கை ஏந்துகிறார்கள் !
உணவாகவோ அல்லது உடையாகவோ அளிக்கும் வரை அது ஈகை. பணம் எனில் தொழில் தானே? பிச்சை என்பது தொழிலாக இருக்கும்போது அதை நம்மைப்போல் இளகிய உள்ளம் கொண்ட வாடிக்கையாளர்களால் வளர்ந்து கொண்டுதானுள்ளது.
கவலைக்குரிய சிந்தனைக்குரிய
பதிவு கதிர்.நானும் இப்பிடி யோசிக்கிறதுண்டு பதில் இல்லாமல்.
கனத்த பதிவு.
பல முறை எழுகின்ற கேள்வியும் ஆதங்கமும் கதிரின் பதிவாக வந்திருக்கிறது.விடை.சமூக அமைப்புத்தானே கதிர்.
இந்த மாதிரி நிறைய கேள்விகள் இருக்கு தலைவரே. எல்லாத்துக்கு பதில் தேடிட்டே இருக்க வேண்டும் நாம் . பதில் ஒன்றும் கிடைக்காது என்பது தான் உண்மை.
இதையே தொழிலாக செய்பவர்களும் உண்டு...... உண்மையிலேயே வேறு வழி இல்லாமல் இப்படி ஆனவர்களும் உண்டு..... எதுவானாலும், வருத்தப்படாமல் ஒதுக்கி தள்ள முடியவில்லை....
விசா அவர்களின் பின்னூட்டத்தையும் ...
கருணாகரசு அவர்களின் பின்னூட்ட முதலிரண்டு வரிகளையும் ...
வழி மொழிகிறேன் ...
நன்றி தோழர் கதிர்!
இவைதான் நான் வலைப்பதிவில் எழுதிய முதல் பதிவின் கேள்விகள் கதிர். என்ன செய்வது/ நாமும் பேசிக் கொண்டேதான் இருக்கிறோம்.
//இவள் குழந்தையாய் கருவுற இவளுடைய தாயும், தந்தையும் காதலோடு கலவியில் ஈடுபட்டிருப்பார்களா? அல்லது வெறும் காமத்தின் எச்சிலா?//
இந்த இரண்டைவிட மனித இயல்புன்னு கூட சொல்லலாம். வறுமை கருக் கலைப்பு செய்யக் கூட வழியில்லை.
idhu than vidhi enbathu.
Carla Vilayadara Kulandhaikkum Ashtavarkgam 337 than
Theruvil Pitchai edukkum Sirumikkum 337 than
Idhu thaan Vaangi Vandha varam
இல்ல அங்கிள்.. இப்ப எல்லாம் பிச்சை எடுக்கறவங்ககிட்ட நாமதான் உஷாரா இருக்கணும்.. காசு போடலைன்னா திட்டறாங்க. சென்னை-யில கையை பிடிச்சு பொண்னுங்களே இழுப்பாங்க.. காசு போடாம தப்ப முடியாது.. இதெல்லாம் நாம பழக்கி விட்டதுதான்..
ஒருத்தர் காசு போட்டா அதை மத்தவங்ககிட்டேயும் எதிர்பார்க்கற அளவுக்கு வளர்த்துவிட்டது நாம்தான்.நம்ம மேலதான் தப்பு..
இந்தியாவை தவிர வேற எங்கேயும் பிச்சைக்காரங்களை பார்க்க முடியாது.. இதை ஒத்துக்கறீங்க இல்லையா?
அப்போ பிச்சைக்காரங்க வளர்ந்து நிக்கறதுக்கும் நாம்தான் காரணம்...
தர்மம் பண்ணனும்னா, ஆசிரமம் போங்கலாம்.. ஏழை பிள்ளையின் படிப்புக்கு உதவலாம்., அதைவிட்டு???
என்னிக்கு பிச்சைப்போடறவங்க இல்லாம போறாங்களோ, அன்னிக்குத்தான் பிச்சை எடுக்கும் அவலமும் ஒழியும்..
// என்னுடைய கடமை ஒரு சில்லறைக் காசைப் போட்டுவிட்டு, வார்த்தைகளைத் தேடி வலைத்தளத்தில் எழுதி விட்டு பின்னூட்டத்திற்கு
காத்திருப்பதா?//
சரியாதான் சொல்லிஇருக்கீக...உங்களுக்கும் எனக்கும் இப்ப வேற பிரச்சினை இருந்துதுன்னு வச்சுகுங்க ...இதை பத்தியெல்லாம் யோசிக்க பதிவு எழுத டைம் இருக்காது ...
இன்னும் நாலு நாள் போன உங்களுக்கு எழுத வேறு விஷயம் கிடைச்சுடும் ....எனக்கு படிக்க வேறு விஷயம் கிடச்சுட்டும்...
என்னடா இவன் எடக்கு மடக்கா பேசுறானேனு கோவிச்சுகாதீங்க ...
என் சின்ன அறிவுக்கு புரிஞ்ச மாதிரி ஒரு கதை ஒன்னு எழுதி இருக்கேன் ...
டைம் இருந்தா படிச்சு பாருங்க ...
http://thanikaatturaja.blogspot.com/2010/05/blog-post_24.html
மறுபடியும் சொல்லரனேனு தப்பா நெனசுக்காதீங்க ...
போன மாசம் உங்க ஒரு பதிவ எடுத்து படிச்சு பாக்கறேன் ....அட ... "மயிரும், வயிறும் வேணா வளரும்" னு ஒரு பதிவு ...
அதுல என்னடா ...விவசாய நெலம் எல்லாம் போகுதேன்னு கவலை பட்டு எழுதி இருக்கீக...
இப்ப பிச்சகாரங்க பத்தி கவலை ...
நீங்களே சொல்லுங்க ...இப்படி கவலை பட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும் ....
இதுக்கு எல்லாம் ஒரு தீர்வு இருக்கு ....
ஆனா அது google கம்பெனி காரங்ககிட்ட தான் இருக்கு ....
அவனுக servera கிராஷ் பண்றது கஷ்டம் ...அவனுகளா பார்த்து servera கிராஷ்
பண்ணிகிட்டானுகனு வச்சுகங்க .....ஓய்வு நேரத்துல ப்ளாக் எழுதாம ...விவசாயம் பாக்கலாம் ......
விவசாய நிலத்த இப்படி கூட காப்பாத்தலாங்கோ...........
மறுபடியும் சொல்லறேன் நீங்க கோவிசுக்க மட்டும் கூடாது ...
//.இப்படி கவலை பட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும் ....//
ஆமாங்க, இப்பவே பாதி கொட்டிகிட்டு இருக்கு!
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்
ஒவ்வொரு முறையும் உங்களைப் போலவே விடைகளையும் வாழ்க்கையின் புதிரான விசயங்களையும் அதிகம் தேடிக் கொண்டுருக்கின்றேன்.
மனம் கனத்துப்போனது.அருமை
சந்தேகமில்லாமல் பகுத்தறிவுதான்.
வெயிலில் சிக்னலில் ரெண்டு மாடுகள் நின்றால் அவற்றில் ஒன்று காரில் போகும் மற்றொன்று பிச்சையெடுக்கும் நிலைமை ஏற்படவே வாய்ப்பில்லை. மாடுகள் எல்லாம் எப்போதும் சமமான மாடுகளே. அவை நிறைய பால் கொடுத்தாலும், குறைவாக சாணி போட்டாலும். மனிதர்களில் மட்டும் தான் ஒரு குழந்தை காருக்குள் ஏ.சி.யில் சந்தோஷமாக மத்தியான வெயிலில் போக, மற்றொரு குழந்தை காலில் செருப்பு இன்றி காருக்குள் பிச்சை கேட்கிறது.
எனவே, இந்த நிலை வித்தியாசம் மனிதர்களின் ஏதோவொரு திருட்டுத் தனத்தினால் உண்டானது. செருப்பில்லாக் குழந்தையின் கால் செருப்பையும் திருடித் தான் காரில் ஏ.சி.யின் குளிர் உருவாக்கப்படுகிறது. அந்தத் திருட்டுத் தனம் என்ன ? பணம்.
இதில் படிநிலை வித்தியாசங்கள் உண்டு. இந்தியா பிச்சையெடுத்தால் அமெரிக்கா ஏ.சி. காரில் போகிறது. சோமாலியா பிச்சையெடுத்தால், இந்தியா சோமாலியாவில் ஏ.சி. காரில் போகிறது.
வானம்பாடிகள் என்பவர் வயிறெரிகிறார்.// 'இப்பெல்லாம் சென்னையில் இது பிஸினஸாம். ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வரை கிடைக்குமாம்'.//
அப்படியானால் வானம்பாடிகள் நாளை முதல் பிச்சையெடுக்கப் போவார்களா ? உடம்பை விற்றுத் தொழில் செய்யும் பெண்ணின் சம்பாதிக்கும் பணத்தைப் பார்த்து பொறாமைப்படுவீர்களா ? இல்லை இவள் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவீர்களா ?
பிச்சையெடுப்பதோ, விபச்சாரம் செய்வதோ அவர்களுக்கு சமூகச் சூழல் நிர்ப்பந்தித்த வாழ்க்கை விதி. முடிந்தால் அதில் ஒருவரின் வாழ்க்கையையாவது மாற்றுங்கள். இல்லாவிட்டால் நாளைக்கு ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கும் அம்பானிக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? என்ற பொருளாதாரத்தை விளங்க முற்படுங்கள்.
Ambedhan said...
//வானம்பாடிகள் என்பவர் வயிறெரிகிறார்.// 'இப்பெல்லாம் சென்னையில் இது பிஸினஸாம். ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வரை கிடைக்குமாம்'.//
அப்படியானால் வானம்பாடிகள் நாளை முதல் பிச்சையெடுக்கப் போவார்களா ? உடம்பை விற்றுத் தொழில் செய்யும் பெண்ணின் சம்பாதிக்கும் பணத்தைப் பார்த்து பொறாமைப்படுவீர்களா ? இல்லை இவள் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவீர்களா ?//
உங்கள் புரிதலைப் பார்த்து பிரமிக்கிறேன். ஒரு சம்பவத்தின் மறுபக்கம் பத்திரிகையில் வந்த செய்தி அது. பிடித்து குழைந்தைப் பாதுகாப்பகத்தில் வைக்கப் போன போலீசை ஓட விட்டுச் சிக்கியபின் லஞ்சம் கொடுக்கவும் முற்பட்ட சிறுமியின் வயது 8, சிறுவனின் வயது 6. இது பஞ்சத்தினால் வந்ததல்ல. இங்கு இது ஒரு ஆர்கனைஸ்ட் க்ரைம். இதில் என் வயிற்றெரிச்சல் உங்களுக்கு எங்கே தெரிந்தது? இத்தகையவர்களும் இருக்கிறார்கள் என்பது தவறா? இல்லை அய்யோ பாவம்! சமுதாயம் அவலமாகிவிட்டது என்று முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டுமா?
நல்லாப் புடிக்கிறாய்ங்கப்பா பாயிண்டு. ஹெ!
அம்பேதான்..
//உடம்பை விற்றுத் தொழில் செய்யும் பெண்ணின் சம்பாதிக்கும் பணத்தைப் பார்த்து பொறாமைப்படுவீர்களா ? வருத்தப்படுவீர்களா ?//
உழைக்காமல் வாரத்துக்கு மூன்று முறை இரத்தத்தை விற்று தண்ணி அடிப்பவனை இரத்த தானம் செய்யும் தியாகி என்று கொண்டாட வேண்டுமா... அதே போல் தான் வயிற்று பிழைப்பிற்கு உடலை விற்பவர்களுக்கும், உடலை மூலதனமாக்கி நிறைய காசு சம்பாதிப்பதை தொழிலாகக் கொண்டிருக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லையா? இருவரையும் சமமாக கருதி இரக்கம் கொள்ள வேண்டுமா?
அதே போல்தான் பிச்சையும்....
தன்னுடைய கருத்தைச் சொன்னார் என்பதற்காக ஒருவரை பிச்சை எடுக்கப் போவாரா என்ற உங்கள் கேள்வியை வன்மையாக கண்டிக்கிறேன் அம்பேதான்..
கதிர் சார்
நானும் இந்த மாதிரி நிறைய யோசிச்சிருக்கேன்.
எனக்கும் இதற்க்கான பதில் தெரியவில்லை.
நல்ல பதிவு.
//இடது பக்கம் குளிரூட்டப்பட்ட காரின் உள்ளே இருக்கும் குழந்தை, வலது பக்கம் காலில் செருப்பில்லாமல் பிச்சையெடுக்கும் குழந்தை, இரண்டிற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியை எது நிரப்பும்......
we are walking along with thoughts
they are doing their activities
by their thought force.
thoughts makes many things
we are writting
they doing something
in our view
ஜனநாயகமா? கடவுள் சக்தியா? பகுத்தறிவா?//
they have no other idea their thoughts in that stage,.,.,.,:):(
Post a Comment