என்றோவரும் மழை ஏமாறாதிருக்க
உயிரைக் கையில் பிடித்து
ஒற்றைப் பனை
*
நெருப்பாய் வெயில்
வெந்து விழுகிறது நிழல்
எப்போதும் குளிர்ச்சியாய்
**
யாரோ வாழும் மாளிகைக்கு
சித்தாள் சுமக்கும் செங்கல்களில்
கூரைக்கான கனவு கனமாய்
***
இளமை நீர்க்கும் மீசையில்
தேடி வெட்டும் வெள்ளையோடு
தேடாமலே கறுப்பாய் சிலவும்
35 comments:
3,2, 1
அப்புறம் அப்புறம் அந்த நாலாவது உள்குத்து. இஃகி இஃகி
எல்லாம் நல்லாருக்கு கதிர்..
சித்தாள் கனவு ரொம்பப் புடிச்சிருக்கு... நானும் அந்தச் செங்கல்லுக்கு முட்டுக் கொடுக்கறேன்..
யாரோ வாழும் மாளிகைக்கு
சித்தாள் சுமக்கும் செங்கல்களில்
கூரைக்கான கனவு கனமாய்
....... வாசிக்கும் போது, உண்மையின் வலி, மனதை கனக்க வைக்கிறது. ரொம்ப அருமையாக இருக்குதுங்க.
ஏக்கங்களாய் மழை,நிழல்,ஏழ்மை,இளமை...!நல்லாருக்கு கதிர்.
எண்ணத்தின் ஏக்கங்கள்....உயிரோட்டமாய் சிறகடிக்கிறது...இயம்பட்டும் இன்னும்
//நெருப்பாய் வெயில்
வெந்து விழுகிறது நிழல்
எப்போதும் குளிர்ச்சியாய்//
//யாரோ வாழும் மாளிகைக்கு
சித்தாள் சுமக்கும் செங்கல்களில்
கூரைக்கான கனவு கனமாய்//
நெஞ்சை தொட்டு விட்டு நேர்கோடாய் பிளந்து போடும் அழகான ஆழமான கவிதைகள்....வாழ்த்துகள் அண்ணே...
அத்தனையும் சூப்பர்..
சித்தாள் கனவு டாப்
அருமை, அழகு கதிர்.. நல்லா இருக்கு. இன்று இரண்டு மூன்று என்று வகைப் படுத்த முடியாததாய் எல்லாமே முதலாய்..! வானம்பாடிகள் "சுட்டி"க் காட்டி வந்தேன்...
. எல்லா சித்தாள்கள்ளுக்கும் உள்ள கூரை கனவு .அருமை
பூங்கொத்து!
இப்படியும் கசிகிறது மவுனம்!
--
//அப்புறம் அப்புறம் அந்த நாலாவது உள்குத்து. இஃகி இஃகி//
வெள்ளை புண்ல வேலப் பாச்சாதீங்க சார்! :))
சுருக்கமாக.. ஆனால் அழுத்தமாக இருக்கிறது கதிர்..
அந்த ஒற்றைப் பனைமரம் மிக நன்று.
கதிர்,
’அக்மார்க்’ கதிரின் கவிதை.
//கூரைக்கான கனவு கனமாய்//
கவிதை மனதை கனக்க வைக்கிறது
//யாரோ வாழும் மாளிகைக்கு
சித்தாள் சுமக்கும் செங்கல்களில்
கூரைக்கான கனவு கனமாய்//
அத்தினை கவிதைகளும் அருமை. வாழ்த்துக்கள்
/இளமை நீர்க்கும் மீசையில்
தேடி வெட்டும் வெள்ளையோடு
தேடாமலே கறுப்பாய் சிலவும்/
Supero Super...
அனைத்தும் நன்றாக இருந்தாலும்...
மூன்றாவது கவிதையின் கனம் அதிகம்...
கனக்கச் செய்யும் உண்மை...
//அகல்விளக்கு said...
அனைத்தும் நன்றாக இருந்தாலும்...
மூன்றாவது கவிதையின் கனம் அதிகம்...
கனக்கச் செய்யும் உண்மை...//
repeat ,good touch !
நான் “அங்க” போயி படிச்சிக்கறேன்..
ஆமா.
:))
சித்தாள் "கனமான பாத்திரம்"
உயிரைக் கையில் பிடித்திருக்கும் ஒற்றைப் பனை எனக்குப் பிடித்து இருக்கு கதிர்.. என்ன ஒரு அருமையான வார்த்தை.. நின்று போய்விட்டது சகலமும்.. ..........
//நெருப்பாய் வெயில்
வெந்து விழுகிறது நிழல்
எப்போதும் குளிர்ச்சியாய்//
This is positive Thought ....! Nice Kathir!
க்ரேட்! :-)
பனை, நிழல், சித்தாள், மீசை
எல்லாமே நல்லா இருக்கு
மிக அருமை... பனைமரம், சித்தாள் பிறகு அந்த கடைசியொன்று... இறுக்கிப்பிடித்த வரிகள்...இயல்பு....
////////.....யாரோ வாழும் மாளிகைக்கு
சித்தாள் சுமக்கும் செங்கல்களில்
கூரைக்கான கனவு கனமாய்........
//////////
சித்தாள் சுமக்கும் வறுமையின் சுமையில் இந்த செங்காற்களின் சுமை மறந்துபோனதோ !
////////.....யாரோ வாழும் மாளிகைக்கு
சித்தாள் சுமக்கும் செங்கல்களில்
கூரைக்கான கனவு கனமாய்........
//////////
நண்பரே இந்த கவிதையில்
( சித்தாள் )என்பது பெண்ணை மட்டும்தான் குறிக்கிறதோ ???????
நன்றி @@ வானம்பாடிகள்
(எதிர்கவிதைக்கும் சேர்த்து)
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ Chitra
நன்றி @@ ஹேமா
நன்றி @@ Arise
நன்றி @@ seemangani
நன்றி @@ முகிலன்
நன்றி @@ ஸ்ரீராம்.
நன்றி @@ Mahi_Granny
நன்றி @@ அன்புடன் அருணா
நன்றி @@ 【♫ஷங்கர்..】
நன்றி @@ செந்தில்வேலன்
நன்றி @@ சத்ரியன்
நன்றி @@ கே.ஆர்.பி.செந்தில்
நன்றி @@ மதுரை சரவணன்
நன்றி @@ vasan
நன்றி @@ அகல்விளக்கு
நன்றி @@ ரோகிணிசிவா
நன்றி @@ கும்க்கி
(இது நாயமே இல்ல)
நன்றி @@ ஜெரி
நன்றி @@ thenammai
நன்றி @@ dheva
நன்றி @@ சேட்டைக்காரன்
நன்றி @@ மஞ்சூர் ராசா
நன்றி @@ பாலாசி
நன்றி @@ பனித்துளி சங்கர்
(சித்தாள் என்பது பொதுவான வார்த்தைதான்)
அனைத்தும் அருமை சார்.
நாற்பது வயசனாலே அப்படித்தானோ.
:-).
டாப் டக்கர் சார் ரொம்ப பிடிச்சுருக்கு ..அதும் அந்த மீசை கிளாஸ்
எல்லாமே சூப்பரு...
இருந்தாலும் என்னைக் கவர்ந்தது இது
//நெருப்பாய் வெயில்
வெந்து விழுகிறது நிழல்
எப்போதும் குளிர்ச்சியாய்
//
யாரோ வாழும் மாளிகைக்கு
சித்தாள் சுமக்கும் செங்கல்களில்
கூரைக்கான கனவு கனமாய்
ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள் கதிர் வாழ்த்துக்கள்
kudanthaiyur.blogspot.com
அப்பா, இது தான் புரிஞ்சுருக்கு..
//.. முதிர்வு காட்டும் முகத்தில்
எருமை மேய்ந்த புல் தரைபோல்
அங்குமிங்கும் சிலவும்... //
இனிமேல் கவிதை எழுதுவிங்க.. :-))
நல்லா இருக்குங்க.
Post a Comment