நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!

ரோட்ல எப்ப வண்டில போனாலும், எதுத்தாப்ல வர்ற பெரீபெரீய் வண்டிக்கெல்லாம் பயப்படறதவுட, ரெம்பப் பயப்படறது ரெண்டு டைப்பு ஆளுகளுக்குத்தானுங்க....

அதுல ஒருத்தரு பாத்தீங்னா....

அவுரு பாட்டுக்கு முன்னால புர்ர்ர்ர்ர்ர்.........னு போயிக்கிட்ருப்பாரு, அந்தாளுக்கு பொறத்திக்காண்ட, ஊட்டுப்பிரச்சன, ஊர்ப் பிரச்சனைனு எதையோன்னு நெனைச்சிக்கிட்டு செவனேன்னு போய்க்கிட்டிருப்போம், திடீர்னு ராத்திரி கெனாக்கண்டு விலுக்குனு திரும்பி படுக்கறாப்ள, நெனைச்ச பக்கம், ஒரு கைய ஆட்டிக்கிட்டே வண்டிய திருப்புவாரு பாருங்க.....

ஹ்ஹ்ஹும்ம்.... எங்க போய் பாக்குறது, அய்யோன்னு அலறியடிச்சு எங்கியாவது நொடிச்சோ, இல்ல அந்தாளு மேல இடிச்சோ, கீழவுழுந்து..... போன வேகத்துல, சறுக்கியுட்ட நாய் மாதர, தரதரன்னு இழுத்துட்டு போய், எது மேலையாவாது முட்டி மோதி, மூஞ்சி மொவறையெல்லாம் ஒடைச்சிக்கிட்டு, கண்ணு முழிச்சு கொஞ்ச நஞ்ச தெம்பு கிம்பு இருந்து, முன்னால போன கெனாவுல முழிச்ச மாதிரி விலுக்குனு திரும்புனவன பார்த்தம்னாக்க, சொல்லுவாம்ம்ம்ம்ம்ம்பாருங்க “நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!???”

அடுத்து இவுங்க ஒரு டைப்பு இருக்றாங்க...

இந்தாளுக, ரோட்ல ஒரு பக்கத்துலருந்து இன்னோரு பக்கம் போவோனும்னு முடிவு பண்ணீட்டாங்னா, ரோட்ல கீட்ல வண்டி எதுனாச்சும் பக்கத்துல வருதா, இல்ல தூரத்துல வருதானெல்லாம் பாக்கமாட்டாங்க.

இவிய கிராஸ் பண்ணோணும்னு முடிவு பண்ணீட்டா ஒருத்தனும் ரோட்ல வண்டீல வரமாட்டங்களாம் அல்லது வரப்படாதாமா. என்ன பண்ணுவாங்னு பாத்தீங்னா, பிரிவு ரோட்ல நிக்கிற போலீசுக்காரய்யா கையக்காட்ற மாதர, இவிய சோத்தாங்கைய சைடுல தூக்கி காட்டிட்டே, பெரிய ஜம்பமா, தெனாவெட்டா அவங்கபாட்ல போவாங்க. இருக்கிற பிரச்சனையில, அடிக்கிற வெயில்ல இந்த ஆளுக கை காட்டுனத, நம்ம வண்டீல கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பிரேக்கு கட்ட தானாவே கணிச்சு வண்டிய நிறுத்திறனுமாம்.

அப்படிக்கிப்பிடி நிக்காட்டி, பைக்காயிருந்தா நாமலும் உழுந்து பல்ல ஒடைச்சிக்கோணும்.  அதே காரு, வேனுன்னா... அந்த ஆளுக்கு சங்கு ஊதிருவாங்க.

ஒரு வேள, நல்லநேரம் ஒன்னும் நடக்காமையோ அல்லது ஏதாச்சும் நடந்தோ பொறவோ அந்த ஆளப் பார்த்தோம்னா, சொல்லுவாம்பாருங்க...  “நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!???”

”அடப் பாழாப் போறவனே, நீ பொசுக்கு கையக் காட்டுனா, எம்பட வண்டி எப்படிய்ய்யா நிக்கும்?

நீ காட்ற கைய, எம்பட கண்ணு பாத்து, அது மூளைக்குச் சொல்லி, தீவாளிக்குத் தீவாளி காத்தால பதனோரு மணிக்கு, கருத்த ஆளு ஒருத்தரு பல்லு மட்டும் வெள்ளவெளேர்னு, நெம்ப கிண்டலும் கேலியுமா பேசுவாறே, அது மாதர.......

எம்பட மூளை அய்யோ அம்மான்னு பதறிப்போயி பிரேக்க புடிக்கலாமா, இல்ல............. படுவா ராஸ்கோல, அடிச்சு தூக்கிறாலாமன்னு ஒரு பஞ்சாயத்த வச்சு,....

ம்ம் ச்ச்சேரி எதுக்குடா வம்பு, செய்கூலி சேதரம்மெல்லா வேண்டாம்னு பயத்துல பிரேக்க அமுத்துடான்னு காலுக்கோ, கையிக்கோ சொன்ன பொறவுதானே, வண்டி நிக்கும்”னு சொல்ல நெனைக்கறத வழக்கம்போல சொல்லாமையே

“ம்ம்ம்.. என்னமோ போ.... நல்லாருந்து தொலை”ன்னு வாழ்த்திப்போட்டு(!!!) வேற வழியில்லாம கம்முனு போறதுதான் நல்லதுன்னு ஊருக்குள்ளே சொல்லிக்கிறாங்க.

__________________________________________

53 comments:

Baiju said...

இங்க நான் தான் முதல்ல கைய ஆட்டினேன்ல

vasu balaji said...

/சொல்லுவாம்ம்ம்ம்ம்ம்பாருங்க “நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!???”/

:)). அடக்கமாட்டாம சிரிக்கிறேன்.

/தீவாளிக்குத் தீவாளி காத்தால பதனோரு மணிக்கு, கருத்த ஆளு ஒருத்தரு பல்லு மட்டும் வெள்ளவெளேர்னு, நெம்ப கிண்டலும் கேலியுமா பேசுவாறே, /

எந்த சாமி பூந்து எழுதுச்சு:)))))

/ம்ம் ச்ச்சேரி எதுக்குடா வம்பு, செய்கூலி சேதரம்மெல்லா வேண்டாம்னு பயத்துல /

இது ரோட்டுல பழகுன பயம் மாதிரி தெரியல. வீட்டு பயம் மாதிரி தெரியுது.

யப்பா சாமி! சின்னக்கவுண்டர் மனோரமா பேசுனா மாதிரியே இருக்கு. தூள்.:))))

vasu balaji said...

//Baiju said...

இங்க நான் தான் முதல்ல கைய ஆட்டினேன்ல//

அல்லோ. இந்த போங்காட்டமெல்லாம் செல்லாது:))

க.பாலாசி said...

//“நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!???”//

ங்ங்ங்ங்கொய்யால அப்டியே வாயிலயே குத்தனும்னு தோணுமே.......

//வேற வழியில்லாம கம்முனு போறதுதான் நல்லதுன்னு ஊருக்குள்ளே சொல்லிக்கிறாங்க.//

ஆமா... ரொம்ப பயந்திருப்பீங்க போலருக்கு... கொஞ்சம் தண்ணி சாப்பிடுங்க....

settaikkaran said...

இப்பல்லாம் நாம ஒழுங்கு மரியாதையா வண்டி ஓட்டுறது பெரிசில்லே; முன்னாடி போறவங்க ஒழுங்கா லைசன்ஸ் வாங்குனவங்களா இருக்கணுமேன்னு கடவுளைப் பிரார்த்திக்கணும்! :-)

வால்பையன் said...

எல்லாம் ட்ரெயினுக்கு, ப்ளைட்டு ரேஞ்சுக்கு போயிட்டாங்க, நீங்க இன்னும் பைக்க தாண்டியே வரலையா!?

dheva said...

//ம்ம்ம்.. என்னமோ போ.... நல்லாருந்து தொலை”ன்னு வாழ்த்திப்போட்டு(!!!) வேற வழியில்லாம கம்முனு போறதுதான் நல்லதுன்னு ஊருக்குள்ளே சொல்லிக்கிறாங்க//


வாஸ்தவம்தான் கதிர்!

பழமைபேசி said...

Pazamai nalla irukku....

//எம்பட //

this is not at all reflects the reality..... endrathu...endra vandi... undra vandi...

செ.சரவணக்குமார் said...

நெம்பக் கரெக்டா சொன்னீங்கண்ணா.

Unknown said...

அடக்கமாட்டாம சிரிக்கிறேன்

shortfilmindia.com said...

நான் ஓட்ட குத்திபோட்டேங்கண்ணா..

கேபிள் சங்கர்

Mugilan said...

மண் வாசனையோடு ஒரு நல்ல பதிவு!

Chitra said...

எம்பட மூளை அய்யோ அம்மான்னு பதறிப்போயி பிரேக்க புடிக்கலாமா, இல்ல............. படுவா ராஸ்கோல, அடிச்சு தூக்கிறாலாமன்னு ஒரு பஞ்சாயத்த வச்சு,....

ம்ம் ச்ச்சேரி எதுக்குடா வம்பு, செய்கூலி சேதரம்மெல்லா வேண்டாம்னு பயத்துல பிரேக்க அமுத்துடான்னு காலுக்கோ, கையிக்கோ சொன்ன பொறவுதானே, வண்டி நிக்கும்”னு சொல்ல நெனைக்கறத வழக்கம்போல சொல்லாமையே


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... கலக்கல் எழுத்து நடை.

ஹேமா said...

//ஹ்ஹ்ஹும்ம்.... எங்க போய் பாக்குறது, அய்யோன்னு அலறியடிச்சு எங்கியாவது நொடிச்சோ, இல்ல அந்தாளு மேல இடிச்சோ, கீழவுழுந்து..... போன வேகத்துல, சறுக்கியுட்ட நாய் மாதர, தரதரன்னு இழுத்துட்டு போய், எது மேலையாவாது முட்டி மோதி, மூஞ்சி மொவறையெல்லாம் ஒடைச்சிக்கிட்டு, கண்ணு முழிச்சு கொஞ்ச நஞ்ச தெம்பு கிம்பு இருந்து, முன்னால போன கெனாவுல முழிச்ச மாதிரி விலுக்குனு திரும்புனவன பார்த்தம்னாக்க, சொல்லுவாம்ம்ம்ம்ம்ம்பாருங்க “நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!???”//

இவ்வளவும் வாசிச்சு புரிஞ்சு சிரிக்கிறதுக்குள்ள மூச்சே போச்சு கதிர்.

மாயாவி said...

//வேற வழியில்லாம கம்முனு போறதுதான் நல்லதுன்னு ஊருக்குள்ளே சொல்லிக்கிறாங்க.//

இதை கடைப்பிடிக்காமல் விட்டால் வண்டியில இருந்து கீழ விழுந்து அடிபடுறதைவிட மோசமான சேதம் நமக்கு ஏற்படும்.

நல்ல பதிவு!!

Riyas said...

good post sir,

Romeoboy said...

நானும் இங்கன கைய காட்டுறேன்.. உள்ளேன் ஐயா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த கையினால எவ்வளவு பிரச்சனை சார்?..

ஆரூரன் விசுவநாதன் said...

புதிய எழுத்து நடை......நன்றாக வந்திருக்கிறது கதிர்......

அகல்விளக்கு said...

எல்லார் நெலமயும் இதுதானா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

நாடோடி இலக்கியன் said...

க‌திர்,
இம்மாதிரி ஆளுங்க‌ எக்க‌ச் ச‌க்க‌மா திறியிராய்ங்க‌.விருட்டுன்னு ஊடால‌ கைய‌க்கூட‌ காட்டாம‌ கொல‌ ந‌டுங்க‌ வக்கிற‌ ஆளுக‌ளும் உண்டு.புடிச்சு நாலு அப்பு அப்ப‌னும்னு தோனும், தோன்றியிருக்கு தோன்றி?(ந‌ன்றி ந‌ர்சிம்).

கொங்கு த‌மிழ் க‌ல‌க்க‌லா இருக்கு க‌திர்.

அன்புடன் அருணா said...

இங்கே....மேனே ஹாத் திக்காயான்னா!!!

சத்ரியன் said...

ம்க்கூம்..! இந்த குறுக்க வாரவன் போறவனப் பத்தி மட்டும் எழுது. ரெண்டு “கை”ய வுட்டுட்டு வண்டி ஓட்றவன பத்தி ஒன்னும் சொல்லாம வுட்ரு.

ஈரோடு கதிர் said...

@@ Baiju
அதுசெரி

@@ வானம்பாடிகள்
சின்னக்கவுண்டர் மனோரமா மாதர சிரிச்சிறாதீங்

@@ க.பாலாசி
தண்ணி சாப்ட்டு வண்டியோட்னா போலுசு புடுச்சுக்குதாம்

@@ சேட்டைக்காரன்
ஆமாமுங்... இல்லீனா மேல்நாட்டுக்கு லைசன்சு கொடுத்துருவாங்

@@ வால்பையன்
அட, நீங்கதான் ரயிலுக்கும், ஏரோப்பிளானுக்கும் முன்னாடி வால் ஆட்றதா?

@@ dheva
வாஸ்தவம்தானுங்க


@@ பழமைபேசி
மாப்பு, நம்மூரு பக்கம் ”எம்பட” தானுங்க

நீங்க... இந்த நாட்டாம சினிமாவுல அந்த மீசக்காரரு அதிகம் பாத்துப்புட்டீங்ளோ

@@ செ.சரவணக்குமார்
வேறென்ன பண்றதுங்!!

@@ முகிலன்
நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குதுங்

@@ shortfilmindia.com
நம்ப டேங்ஸ்ங்னா

@@ Mugilan
வுழுந்தா தார் ரோடு வாசம்தானுங்க

@@ Chitra
நம்ப டேங்ஸ்ங்கா

@@ ஹேமா
அட, ஏனுங்... எனக்கே நம்ப நேரம் புரியலீங்

@@ மாயாவி
நூத்துல ஒரு வார்த்தைங்

@@ Riyas
டேங்ஸ்ங் சார்

@@ ~~Romeo~~
இருங்கயிருங்க

@@ பட்டாபட்டி
அப்பிடிப்போடு அருவாள, அட அந்தக் கைமேலதானுங்

@@ ஆரூரன் விசுவநாதன்
தேனுங்... நம்ப நாளைக்கப்புறம் நம்ம கதைய படிச்சிட்டிங்களாக்கும்

VELU.G said...

நிறைய இந்த மாதிரிதாங்க நடக்குது
இதையெல்லாம் யார் கேக்கறது


சிலசமயம் நான் கூட அந்தமாதிரி திரும்பிடறேன் ஹி.. ஹி... ஹி..

ஈரோடு கதிர் said...

@@ அகல்விளக்கு
அட.. ஊட்டுக்கூடு வாசப்படிங் தம்பி

@@ நாடோடி இலக்கியன்
இதென்னமோ, எங்கூருக்கும், தெக்கத்துக்காரங்களுக்கும் சண்ட மூட்ற வேலயாத் தெரியதப்போ

@@ அன்புடன் அருணா
அப்பச் செரிங்

@@ ’மனவிழி’சத்ரியன்
வலுசுப் புள்ளைவீல பாத்தா அப்படித்தானுங் இந்தப் பசவ பண்றாங்

@@ VELU.G
பாலாசிகிட்ட கீது சொல்லிப்போடாதீங், அப்புறம் வாயி மேல குத்திப்போடுவாரு

மோனி said...

“ம்ம்ம்.. என்னமோ போ.... நல்லாருந்து தொலை”

அண்ணாமலை..!! said...

சரியோ..சரி!
நாம சரியா போனாலும் - எதுத்தாப்ல
நமன் சரியா வரனுமே!

Unknown said...

//..பழமைபேசி said...

this is not at all reflects the reality..... endrathu...endra vandi... undra vandi... ..//

எனக்கும் படிக்கும்போது லேசா உறுத்துச்சு, அண்ணன் சொல்லிட்டாருங்க..


//. மாப்பு, நம்மூரு பக்கம் ”எம்பட” தானுங்க ..//

சொல்லும்போது ஒன்னும் தெரிலிங்க, ஆனா எழுத்துல படிக்கும்போது கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கு..

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நிஜம்தான் கதிர்

-ப்ரியமுடன்
சேரல்

சௌந்தர் said...

சரியாய் சொன்னிங்க

HVL said...

//
அய்யோன்னு அலறியடிச்சு எங்கியாவது நொடிச்சோ, இல்ல அந்தாளு மேல இடிச்சோ, கீழவுழுந்து..... போன வேகத்துல, சறுக்கியுட்ட நாய் மாதர, தரதரன்னு இழுத்துட்டு போய், எது மேலையாவாது முட்டி மோதி, மூஞ்சி மொவறையெல்லாம் ஒடைச்சிக்கிட்டு, கண்ணு முழிச்சு கொஞ்ச நஞ்ச தெம்பு கிம்பு இருந்து, முன்னால போன கெனாவுல முழிச்ச மாதிரி விலுக்குனு திரும்புனவன பார்த்தம்னாக்க, சொல்லுவாம்ம்ம்ம்ம்ம்பாருங்க “நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!???”
//
:):):)

கலகலப்ரியா said...

கதிரு மொக்கைப் பதிவு போட்டாலும் சமூக அக்கறையோடதான்யா போடுறாப்ல... கையக் காட்னவங்களுக்கு காட்டு காட்டுன்னு காட்டனும்யா... (ம்க்கும்.. அதுக்கு உசிரோட இருக்கணும்ல..)

Anonymous said...

ஏனுங்க ஒருசிலரு எதுத்தாப்ல வந்தாலும் கண்ணு டிம் ஆயி ஒன்னு தெரியமாட்டிங்கிதுங்க அதுக்கு என்னுங் பன்றது

கலகலப்ரியா said...

//வா (கல்பாவி) said...

ஏனுங்க ஒருசிலரு எதுத்தாப்ல வந்தாலும் கண்ணு டிம் ஆயி ஒன்னு தெரியமாட்டிங்கிதுங்க அதுக்கு என்னுங் பன்றது//

contact lens use pannalaam.. shine pannichinnaa sunglasses wud help you...

vasu balaji said...

300 ஃபாலோயர்ஸூக்கு வாழ்த்துகள்

Radhakrishnan said...

கிராமத்து நடை அழகு

Mahi_Granny said...

ஈரோடு தமிழா ..பேசி கேட்டதில்லை . பேசுவது போலவே எழுதுவது அத்தனை சுலபமில்லை. அருமை .வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

சூப்பர் நடை - சும்மா பூந்து வெள்ளாடிருக்கீங்க - பலெ பலே

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

Kumky said...

இன்னும் பைக்க நிப்பாட்டலையா..?

;))

மாதேவி said...

"நல்லாருந்து தொலை"ன்னு வாழ்த்திப்போட்டு" :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//வேற வழியில்லாம கம்முனு போறதுதான் நல்லதுன்னு ஊருக்குள்ளே சொல்லிக்கிறாங்க.//

நல்லவேளை, வண்டியை நிறுத்தினீங்க,
தர்ம அடி வாங்காமல் தப்பிச்சீங்க.
நையாண்டியான இடுகை.

புலவன் புலிகேசி said...

//இவிய கிராஸ் பண்ணோணும்னு முடிவு பண்ணீட்டா ஒருத்தனும் ரோட்ல வண்டீல வரமாட்டங்களாம் அல்லது வரப்படாதாமா.//

ஒரு த்டவ முடிவு பண்ணிட்டா எம்பட பேச்ச நாமே கேக்க மாட்டமாக்கும்....

Thenammai Lakshmanan said...

கோயமுத்தூருக்கு ஒரு விசிட் அடிச்சாப்புல இருக்கு.. கதிர்

ஈரோடு கதிர் said...

@@ மோனி
நன்றிங்க

@@ அண்ணாமலை..!! said...
அதுவுஞ் செரிதானுங்

@@ திருஞானசம்பத்.மா.
பெங்க்ளூரூ போனா இப்படித்தானுங்

@@ சேரல்
நன்றிங்க

@@ soundar
நன்றிங்க

@@ HVL
நன்றிங்க

@@ கலகலப்ரியா
ஏஞ்சோக கதயக்கேளு தாய்க்குலமே


@@ சிவா (கல்பாவி)
அது வயசுக்கோளாறா இருக்கும்ங்



@@ வானம்பாடிகள்
அண்ணா... டேங்ஸ்ங்ணா


@@ V.Radhakrishnan
நன்றிங்க


@@ Mahi_Granny
ஆமாங்..


@@ cheena (சீனா)
நன்றிங்ணா

@@ கும்க்கி
நிக்கமாட்டேங்குதுங்


@@ மாதேவி
நன்றிங்க

@@ NIZAMUDEEN
இஃகிஃகி


@@ புலவன் புலிகேசி
அப்படிப்போடு

@@ thenammailakshmanan
ஏனுங் ஆச்சி... நம்மூரு தாண்டித்தானுங் கோயமுத்தூர் போவோனுங்

க.பாலாசி said...

303 பாலோயர்ஸ்-க்கு வாழ்த்துககள்....

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
303 பாலோயர்ஸ்-க்கு வாழ்த்துககள்....//

டேங்ங்ங்ங்ஸ் பாலாசி

Kodees said...

/சொல்லுவாம்ம்ம்ம்ம்ம்பாருங்க “நாந்தான் கையக் காட்னன்ல்ல!!!???”/

இறங்கி ரெண்டு செவிட்டுல விடாம - பதிவு என்ன வேண்டியிருக்கு

ஈரோடு கதிர் said...

//ஈரோடு கோடீஸ் said...
இறங்கி ரெண்டு செவிட்டுல விடாம - பதிவு என்ன வேண்டியிருக்கு//

நாமலே வவுறு கலங்கி நிக்கறப்போ எங்கே போய் செவிட்டுல உடறது... அட ஏனுங்க கோடீசு

r.v.saravanan said...

சிரிக்கிறேன்

cheena (சீனா) said...

303க்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

ஈரோடு கதிர் said...

நன்றி @@ r.v.saravanan

@@ cheena (சீனா)
மிக்க நன்றி அய்யா

Unknown said...

சிரிப்ப அடக்கவேமுடியல...வட்டாரமொழி நடை இந்த பதிவை எங்கயோ கொண்டுபோயிடுச்சு போங்க...எப்படி இப்டீல்லாம்...
எத்தனையோ முறை இப்படி கைய காட்டுறவங்கள திட்டிக்கிட்டே வருவேன்.இன்னைக்கு அவங்கள நினச்சு ஒரே சிரிப்பு...