இறுகப் பூட்டிய மனதை
எளிதாய்த் திறக்கிறது மழலை
சிந்தும் ஒற்றைப்புன்னகை
****
அக்னி சிரித்த மூங்கில் காட்டில்
தூங்கும் சாம்பலை எழுப்பிவிடுகிறது
புல்லாங்குழல் தேடும் காற்று
****
செருப்பில்லாதவன் பாதம்
பசியாறுகிறது தார்சாலையில்
வழியும் வெயில் குழம்பில்
________________________
55 comments:
முதல் கவிதை புன்னகைக்க வைக்கிறது. என் நிலை..
மற்றவையும் அழகு.
செருப்பில்லாதவன் பாதம்
பசியாறுகிறது தார்சாலையில்
வழியும் வெயில் குழம்பில்
;சூப்பர்
ரெண்டாவது டாப்பு, முதலாவது ஓஹோ, மூணாவது அட!
//செருப்பில்லாதவன் பாதம்
பசியாறுகிறது தார்சாலையில்
வழியும் வெயில் குழம்பில்//
எப்புடி இப்படி எல்லம் யோசிக்க முடியுது. Room போட்டு யோசிபிங்கலோ
அருமை!
அருமை கவிதைகள் 1=2=3
மூன்றுமே அருமை.
//அக்னி சிரித்த மூங்கில் காட்டில்
தூங்கும் சாம்பலை எழுப்பிவிடுகிறது
புல்லாங்குழல் தேடும் காற்று///
நல்லா இருக்குங்க கதிர்
அருமை....
அருமை...
அருமை...நிதர்சனம்...உண்மை....
மூன்றுமே அருமை. முதல் மிக அழகு.
அன்பின் கதிர்
மழலை சிந்தும் புன்னகை எதையும் எளிதில் திறக்கும்
காற்றுக்கு என்ன தெரியும் - சாம்பலையும் எழுப்பும் - விளைவறியாமல்
வெயில் குழம்பில் பசியாறும் பாதம்
சிந்தனை - கற்பனௌ - அருமை அருமை
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
இறுகப் பூட்டிய கதவை
எளிதாய் திறக்கிறது நீ
தவறவிட்ட ஹேர் பின்!
பாத்திரங்கள் சிதறிய சமையல் கட்டில்
சோம்பல் தொலைந்து ஓடுகிறேன்
நீ விடும் உஷ்ணக் காற்றில்!
சமையல் தெரிந்தவன் பொழைப்பு
பழியாய் கிடக்கிறது சமையலறையில்
வழியும் வியர்வை மழையில்!
எ(ன்)ண் வரிசை....
3...1...2
மொத்தமும் முத்து!
கதிர்..முதலாவதுதான்
நிறையப் பிடிச்சிருக்கு.
முதலாவது மிகப் பிடித்திருக்கிறது கதிர் அண்ணா.
சிந்தும் ஒற்றைப்புன்னகை
எளிதாய்த் திறக்கிறது மழலை
இறுகப் பூட்டிய மனதை..
புல்லாங்குழல் தேடும் காற்று
தூங்கும் சாம்பலை எழுப்பிவிடுகிறது
அக்னி சிரித்த மூங்கில் காட்டில்..
வழியும் வெயில் குழம்பில்
பசியாறுகிறது தார்சாலையில்
செருப்பில்லாதவன் பாதம்..
தலைவா இதுதான் ஹைகூ
உன் திறமைக்கு ஆயிரம் வந்தனம்.
நட்புடன்
சந்துரு.
the second one is "extra -ordinary."
awesome kathir.
கடைசியாய் அடிவிழுகிறது சுரீரென்று.
நி.ந - தூள் கேளப்புறியே நி.ந
நல்வாழ்த்துகள் நி.ந
நட்புடன் சீனா
புன்னகை
ரசனை
பதபதைப்பு
முதலாவது தென்றலாய் வருடியது
இரண்டாவது காற்றாய் மோதியது
முன்றாவது புயலாய் சீறியது
வாழ்த்துக்கள் கதிர்
உங்களது கவிதைப் பதிவுகளில் முதல்முறையாக முழு திருப்தி எனக்கு. சிறப்பான கவிதைகள்.
அப்படியே கவித மாதிரியே இருக்குங்க :)
அண்ணே மூன்றுமே...அற்புதமா இருக்கு வார்த்தைகள் இல்லாததால் வாழ்த்துக்களை விட்டு செல்கிறேன்...
முதல் இரண்டும்
அற்புதம்.
மூன்று கவிதைகளும் முத்துக்கள்! வேறென்ன சொல்ல...? :-)
மூன்றுமே நல்லாருக்கு கதிர்.
//புல்லாங்குழல் தேடும் காற்று
தூங்கும் சாம்பலை எழுப்பிவிடுகிறது
அக்னி சிரித்த மூங்கில் காட்டில்..//
இது, கலக்கல்!
முக்கி, தக்கி தமிழ்மணம் மகுடத்தில் என் பெயர் பார்த்தேன் இன்று.
காலி பண்ணிருவீங்க போல. நீங்களும் பாலாசியும் பார்க்கிற வேலை. :-))
மூன்றாவது கொடுமை கதிர்
moondrum moondru suvai..
நடு சென்ட்டர் அட்டகாசம்!!
அருமை அருமை அருமை... ரொம்ப நல்லாருக்கு கதிர்..
வணக்கம் கதிர் ...உங்கள் கவிதைகள் அத்தனையுமே யதார்த்தமாய் இயற்க்கை அழகோடு அமைந்திருக்கிறது .அருமை என்று என்னால் ஒற்றை வார்த்தையில் அடக்க முடியாது.உண்மைகள் உங்களுக்கு சிறந்த சிந்தனா சக்தி அதை வளப்படுத்துங்கள் வரும் காலம் வாழ்த்தட்டும்.
அக்னி சிரித்த மூங்கில் காட்டில்
தூங்கும் சாம்பலை எழுப்பிவிடுகிறது
புல்லாங்குழல் தேடும் காற்று
இந்த கவிதை zen போல இருக்கு கதிர்
மரத்து போன மனதிற்கு மகிழ்வு அழித்தது உங்க கவிதை...ங்கோ
நன்றாக உள்ளது கதிர்...;)
கதிர்
இரண்டாவதுக்கு “முதலிடம்”.
ஆனா பாருங்க மூனுமே ரொம்ப புடிச்சிருக்கு.
முத்தான மூன்று கவிதைகள்...
அருமை அண்ணா...
//இறுகப் பூட்டிய மனதை
எளிதாய்த் திறக்கிறது மழலை
சிந்தும் ஒற்றைப்புன்னகை
//
இறுகப் பூட்டிய மனதை
எளிதாய்த் திறக்கிறது
மழலை சிந்தும்
ஒற்றைப் புன்னகை!
//செருப்பில்லாதவன் பாதம்
பசியாறுகிறது தார்சாலையில்
வழியும் வெயில் குழம்பில்//
செருப்பில்லாதவன் பாதம்
பதமாய்ப் பசியாறுகிறது
தார்சாலையின் மீதான
வழியும் வெயில் குழம்பில்!!
//அக்னி சிரித்த மூங்கில் காட்டில்
தூங்கும் சாம்பலை எழுப்பிவிடுகிறது
புல்லாங்குழல் தேடும் காற்று
//
அக்னி சிரித்த மூங்கில் காட்டில்
தூங்கும் சாம்பலை எழுப்புகிறது
புல்லாங்குழல் தேடும் காற்று!!
இறுகப் பூட்டிய மனதை
எளிதாய்த் திறக்கிறது
உங்கள் கவிதை...
//இறுகப் பூட்டிய மனதை
எளிதாய்த் திறக்கிறது மழலை
சிந்தும் ஒற்றைப்புன்னகை///
கண்டிப்பாக...
நல்லாயிருக்குங்க கவிதை...
//மழலையின் ஒற்றைப்புன்னகை.
புல்லாங்குழல் தேடும் காற்று.
வழியும் வெயில் குழம்பு.//
கவனித்தீர்களா `ழ` வழிகிறது முக்கனியிலும்.
அனைத்தும் அருமை.
முதலாவது மிக பிடித்திருந்தது.
தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்!
அருமை கதிர்... வெகு விரைவில்.
பிரபாகர்...
முதல் கவிதை அருமை
இரண்டாவது கவிதையை மிகவும் ரசித்தேன் கதிர்.
(யோவ் ஆதி கதிரின் ஆரம்பகால கவிதைகளை ஒரு முறை பார்த்துட்டு சொல்லுய்யா...:) )
உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html
நன்றி @@ செந்தில்வேலன்
நன்றி @@ soundar
நன்றி @@ வானம்பாடிகள்
நன்றி @@ Baiju
நன்றி @@ அன்புடன் அருணா
நன்றி @@ *இயற்கை ராஜி*
நன்றி @@ இராமசாமி கண்ணண்
நன்றி @@ நேசமித்ரன்
நன்றி @@ பாலாசி
நன்றி @@ ராமலக்ஷ்மி
நன்றி @@ cheena (சீனா)
நன்றி @@ நிஜமா நல்லவன்
(இனிமே எதிர்கவிதை எழுத சொல்லிட்டுத்தான் நான் கவிதை எழுதனும் போல)
நன்றி @@ கருணாகரசு
நன்றி @@ ஹேமா
நன்றி @@ சரவணக்குமார்
நன்றி @@ தாமோதர் சந்துரு
நன்றி @@ ஜெரி
நன்றி @@ காமராஜ்
@@ cheena (சீனா)
(இந்த நி.ந ரவுசு சூப்பர்ங்க)
நன்றி @@ முத்துலெட்சுமி
நன்றி @@ r.v.saravanan
நன்றி @@ ஆதி
நன்றி @@ D.R.Ashok
(இருக்காதா பின்னே)
நன்றி @@ seemangani
நன்றி @@ Madumitha
நன்றி @@ சேட்டைக்காரன்
நன்றி @@ பா.ராஜாராம்
//காலி பண்ணிருவீங்க போல. நீங்களும் பாலாசியும் பார்க்கிற வேலை. :-))//
ஆஹா.. அண்ணே..
நன்றி @@ thenammailakshmanan
நன்றி @@ முகிலன்
நன்றி @@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ கார்த்திகேயன்
நன்றி @@ seetha
நன்றி @@ தாராபுரத்தான்
நன்றி @@ மணிநரேன்
நன்றி @@ ’மனவிழி’சத்ரியன்
நன்றி @@ அகல்விளக்கு
நன்றி @@ பழமைபேசி
(மாப்பு நல்லா டிங்கரிங் பாக்குறீங்க... இஃகிஃகி)
நன்றி @@ Ravi kUMAr
நன்றி @@ அஹமது இர்ஷாத் said...
நன்றி @@ vasan
நன்றி @@ அக்பர்
நன்றி @@ பிரபாகர்
நன்றி @@ பிரியமுடன் பிரபு
நன்றி @@ நாடோடி இலக்கியன்
நன்றி @@ ஷர்புதீன்
மூன்றுமே முத்துக்கள்!
//இறுகப் பூட்டிய மனதை
எளிதாய்த் திறக்கிறது மழலை
சிந்தும் ஒற்றைப்புன்னகை //
நன்றாக உள்ளது .........
//அக்னி சிரித்த மூங்கில் காட்டில்
தூங்கும் சாம்பலை எழுப்பிவிடுகிறது
புல்லாங்குழல் தேடும் காற்று//
சுமாராக உள்ளது ........
//செருப்பில்லாதவன் பாதம்
பசியாறுகிறது தார்சாலையில்
வழியும் வெயில் குழம்பில்//
வெயிலை குழம்பு என்று எப்படி சொல்ல முடியும் ..?
வெயிலில் செருப்பில்லாதவன் பாதம் ஒரு நொடி கூட ஓரிடத்தில் வைக்க முடியாத பொது எப்படி பசியாற முடியும் .......??
முட்டாள்தனமான கவிதை ......
நன்றி @@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
நன்றி @@ தனி காட்டு ராஜா
குறிப்பாக....
//வெயிலை குழம்பு என்று எப்படி சொல்ல முடியும் ..?
வெயிலில் செருப்பில்லாதவன் பாதம் ஒரு நொடி கூட ஓரிடத்தில் வைக்க முடியாத பொது எப்படி பசியாற முடியும் .......??
முட்டாள்தனமான கவிதை ......//
மூன்றாவது கவிதையை
முட்டாள்தனமாக வாசித்தமைக்கு நன்றி தனிகாட்டுராஜா
//மூன்றாவது கவிதையை
முட்டாள்தனமாக வாசித்தமைக்கு நன்றி தனிகாட்டுராஜா//
என் புரிதல் அப்படி ...
உங்கள் புரிதல் படி அப்படியே உங்கள் கவிதைக்கு விளக்கம் தாருங்கள் கதிர்......
//
அக்னி சிரித்த மூங்கில் காட்டில்
தூங்கும் சாம்பலை எழுப்பிவிடுகிறது
புல்லாங்குழல் தேடும் காற்று//
அட்டகாசம்!
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment