வரிவரியாய் வழியும் வெயில் குளம்பில்
வறண்டு கிடக்கும் வெற்று நிலத்தில்
உயிர்த்துளியாய் சொட்டும் மழையின்
முதல்த் துளியில் பிறக்கும் மண்வாசம்
ஊருக்குத் தெற்கே அத்திப்பழம்,
பொறுக்கப்போகும் ஓடைக் கரையோரம்
பச்சைப்பாம்புகள் பாதுகாப்பில்
பறிக்காமல் கிடக்கும் தாழம்பூ வாசம்
தடுமாற்றத் தோரணங்கள் அணிவகுக்க
துவண்டுகிடக்கும் கனமான நேரங்களில்
தத்திவந்து தோள் பற்றும் மழலையிடம்
பூத்துக்கிடக்கும் பால்வாசம்
நெரிசல் பிணைந்த சாலையில்
எரிச்சலோடு நகரும் வேளையில்
சட்டென கடக்கும் யுவதியின் கூந்தல்
வழியவிடும் மல்லிகை வாசம்
எந்த வாசனை பிடிக்கும் எனக்கேட்ட
பிள்ளையிடம் பட்டியல் இட்டேன்
ஏனோ சொல்ல மறந்தேன், மறுத்தேன்
பாட்டியின் மடி வாசனையை
_____________________________
43 comments:
:-)
//பாட்டியின் மடி வாசனையை//
-mm ,m ,m
இத்தனை வாசம்
சுமந்து திரியும்
இதயம் உணரும்
மன வாசம்!
அருமை கதிர்!
/ஏனோ சொல்ல மறந்தேன், மறுத்தேன்
பாட்டியின் மடி வாசனையை/
வாய்ப்பே இல்லை இந்த உள்குத்துக்கு:(
//நெரிசல் பிணைந்த சாலையில்
எரிச்சலோடு நகரும் வேலையில்
சட்டென கடக்கும் யுவதின் கூந்தல்
வழியவிடும் மல்லிகை வாசம்//
:-)
//ஏனோ சொல்ல மறந்தேன், மறுத்தேன்
பாட்டியின் மடி வாசனையை//
ம்ம்ம்ம்ம்ம்ம்.... :-(
// எந்த வாசனை பிடிக்கும் எனக்கேட்ட
பிள்ளையிடம் பட்டியல் இட்டேன் //
Super ... பட்டியல்...
// ஏனோ சொல்ல மறந்தேன், மறுத்தேன்
பாட்டியின் மடி வாசனையை //
ஏனோ தெரியவில்லை .. நிறைய பேர் இதை மறந்து விடுகின்றோம்.
Excellent kadhir
அந்த துளியூண்டு தலைக்குள்ள இவ்ளோ மூளையா.... அம்மாடியோவ்
பாட்டியின் மடிவாசம்! ஆஹா நினைவுகளை கிளறுங்களே...
அவிங்க மடியில படுக்கவெச்சி ஈர்க்குளியால பேன் எடுப்பாங்களே! ஆதரவா அப்படியே தலையைக் கோதிவிடுவாங்களே! சொர்க்கமய்யா!
பிரபாகர்...
குழம்பில்
அத்திப்பழமும்
வேலையில்
கதவு திறந்து இருக்கு மக்கா...
ஒரு சுற்று உள்ளிழுத்தேன்..!
//பாட்டியின் மடி வாசனையை//
எப்படி மறந்தீங்க.?
ம்ம்.. :)
மறதி.........மனதை தொட்டு விட்டது கதிர்!
கடைசி வரிகள்.. என் பாட்டியின் நினைவைத் தூண்டி விட்டது.
அருமையான படைப்பு.
// பழமைபேசி said...
கதவு திறந்து இருக்கு மக்கா...
//
கதவு திறந்திருப்பது காற்று வருவா?
ஊருக்குத் தெற்கே அத்திப்பழம்,
பொறுக்கப்போகும் ஓடைக் கரையோரம்
பச்சைப்பாம்புகள் பாதுகாப்பில்
பறிக்காமல் கிடக்கும் தாழம்பூ வாசம்
....... வாசம் மட்டும் இல்லை, பாசமும் நிரம்பி வழியும் கவிதை. அருமை.
//பச்சைப்பாம்புகள் பாதுகாப்பில்
பறிக்காமல் கிடக்கும் தாழம்பூ வாசம்//
//பாட்டியின் மடி வாசனை//
ஆஹா... அண்ணே...சூப்பர்...
Simply Superb....
கவிதையா?
வேடிக்கை பார்க்கிறேன்.
கடைசி இரண்டு வரிகளும் சொல்லியிருக்கிறீர்கள்.
//ஏனோ சொல்ல மறந்தேன், மறுத்தேன்
பாட்டியின் மடி வாசனையை//
ஏன் என்கிற கேள்வி எனக்குள் கதிர்.
நினைத்துக் கொள்ளவாவது செய்தீர்களே ......
//தடுமாற்றத் தோரணங்கள் அணிவகுக்க
துவண்டுகிடக்கும் கனமான நேரங்களில்
தத்திவந்து தோள் பற்றும் மழலையிடம்
பூத்துக்கிடக்கும் பால்வாசம்//
யதார்த்த வரிகள் கதிர்.
//ஏனோ சொல்ல மறந்தேன், மறுத்தேன்
பாட்டியின் மடி வாசனையை//
:))
மிகவும் நன்றாக இருக்கிறது தோழரே...வாழ்த்துக்கள்...
நிதர்சன வரிகள் கதிர்
CLASS KATHIR............
வரிவரியாய் வழியும் வெயில் குளம்பில்
வறண்டு கிடக்கும் வெற்று நிலத்தில்
உயிர்த்துளியாய் சொட்டும் மழையின்
முதல்த் துளியில் பிறக்கும் மண்வாசம்
ஊருக்குத் தெற்கே அத்திப்பழம்,
பொறுக்கப்போகும் ஓடைக் கரையோரம்
பச்சைப்பாம்புகள் பாதுகாப்பில்
பறிக்காமல் கிடக்கும் தாழம்பூ வாசம்
தடுமாற்றத் தோரணங்கள் அணிவகுக்க
துவண்டுகிடக்கும் கனமான நேரங்களில்
தத்திவந்து தோள் பற்றும் மழலையிடம்
பூத்துக்கிடக்கும் பால்வாசம்
Chancey illai....athanai arumai thedi thodutha varigal.....
நெரிசல் பிணைந்த சாலையில்
எரிச்சலோடு நகரும் வேளையில்
சட்டென கடக்கும் யுவதியின் கூந்தல்
வழியவிடும் மல்லிகை வாசம்
mmmmmm ithellam sariya vaasam pedichiduvengaley....
மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் !
அத்துஅணையும் அம்மியமான நினைவுகள்.மறந்தது பொக்கிஷம்.கதிர்.இந்த மாதிரியான இல்லை உங்கள் கவிதைகள் முழுவதுமே படிக்குமுன் உள்ளிழுத்துப்போடுகிறது.
கவிதையில் தெரிகிறது கதிர் வாசம்.
//சட்டென கடக்கும் யுவதியின் கூந்தல்
வழியவிடும் மல்லிகை வாசம்//
அதானே...நாசிக்கேது மூப்பு...?? ம்ம்ம்.....
//துவண்டுகிடக்கும் கனமான நேரங்களில்
தத்திவந்து தோள் பற்றும் மழலையிடம்
பூத்துக்கிடக்கும் பால்வாசம்//
இது செமத்தியான வாசம்.... அருமை...
பாட்டி கூட சண்டையா அங்கிள்...
அவங்க கண்ணாடிய தெரியாம உடைச்சதுக்கு திட்டிட்டாங்களா? விடுங்க பேசித் தீர்த்துக்கலாம்..
அன்னையின் வாசம் எங்கே ??? அதையும் மறந்து விட்டீர்களே மல்லிகையின் வாசனையில்
//தடுமாற்றத் தோரணங்கள் அணிவகுக்க
துவண்டுகிடக்கும் கனமான நேரங்களில்
தத்திவந்து தோள் பற்றும் மழலையிடம்
பூத்துக்கிடக்கும் பால்வாசம்//
இதுக்கே ....பல மாசமா காத்துக்கிட்டிருக்கேனே சாமி.
நிஜமாவே மறந்து போயிட்டத நெனப்பூட்டி புண்ணியம் தேடிக்கிட்டீங்க.
நெகிழ்த்திய கவிதை கதிர்.
ம்ம்ம்ம்ம்ம்ம்.... :-)
வருகைக்கும், வாசிப்பிற்கும், கருத்திற்கும், கலாய்த்தலுக்கும் நன்றி மக்களே
@@ *இயற்கை ராஜி
@@ ரோகிணிசிவா
@@ வானம்பாடிகள்
@@ அகல்விளக்கு
@@ இராகவன் நைஜிரியா
@@ T.V.ராதாகிருஷ்ணன்
@@ இராமசாமி கண்ணண்
@@ பிரபாகர்
@@ பழமைபேசி
@@ 【♫ஷங்கர்..】
@@ அம்பிகா
@@ கலகலப்ரியா
@@ dheva
@@ ச.செந்தில்வேலன்
@@ Chitra
@@ seemangani
@@ Uma Malar
@@ ராஜ நடராஜன்
@@ ஹேமா
@@ thenammailakshmanan
@@ புலவன் புலிகேசி
@@ கமலேஷ்
@@ ஆரூரன்
@@ தமிழரசி
@@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
@@ காமராஜ்
@@ ஜெரி ஈசானந்தன்
@@ க.பாலாசி
@@ பிரேமா மகள்
@@ LK
@@ ’மனவிழி’சத்ரியன்
@@ பிள்ளையாண்டான்
எவ்ளோ அழகாசொல்லிருகீங்க கதிர் .நானா இருந்த தோசை வாசனை ,காபி வாசனை ன்னு அடுக்கி இருப்பேன் .
ஜோரா இருக்கு
எல்லா வாசமும் சொல்ல முடிந்த என்னால் தாய் வா(பா)சம் சொல்ல முடியவில்லை....
உண்மையை கடைசி வரிகளில் உறைக்கும் படி சொல்லியிருக்கிறீர்கள்.
இன்று நாம் சொல்லத் தயங்கும் வாசம் நாளை நம் சந்ததியிடமும் தொடரும் என்பது நெருடலான வாசம்.
வேணுமென்றே மறந்தால் எப்படி?!
நல்ல கவிதை.
தடுமாற்றத் தோரணங்கள் அணிவகுக்க
துவண்டுகிடக்கும் கனமான நேரங்களில்
தத்திவந்து தோள் பற்றும் மழலையிடம்
பூத்துக்கிடக்கும் பால்வாசம்
அருமை வரிகள் கதிர்
r.v.saravanan
kudanthaiyur.blogspot.com
Post a Comment