என்ன நல்லதைக் கொடுத்துவிட முடிந்தது

வீராவேசமான விமர்சனம்
இரத்த வாடை சுமக்கும் இசம்
தட்டி வளர்க்கப்படும் சாதி வெறியால்
என்ன நல்லதைக் கொடுத்துவிட முடிந்தது
வெற்று வெறியூட்டலைத் தவிர்த்து


பசி வயிற்றைக் கிள்ளுகிறவனுக்கு
நோய் உடலை உருக்குபவனுக்கு
சாதியும் இல்லை, இசமும் இல்லை
தர்க்கமும் இல்லை, தாக்குதலும் இல்லை
அவனைப்போல் இன்னொருவனும் இல்லை...

சாலையோரம் குப்பையாய் கிடக்கும்
மனநிலை பிறழ்ந்த மனித மூட்டை

எரியும் தார் சாலையில் செருப்பில்லாமல்
கருகும் அழுக்குச் சட்டைக் குழந்தை

கடமையைச் செய்ய காசு பிடுங்கும்
சில கேடுகெட்ட அதிகாரம் படைத்தவன்

என்னைச் சுற்றி இரவு உணவு இல்லாமல்
படுக்கைக்கு செல்லும் பாவப்பட்டவர்கள்

எல்லா இசத்திலும், சாதியிலும்
இருக்கத்தானே செய்கிறார்கள்

எதையோ பிடுங்கிக் கத்தை கட்டிட
இதில் நீயென்ன நானென்ன பெரிசு

வெள்ளைக்காரன் போடும் சட்டைக்கு
சேர்த்த சாயம் ஊறியதில் செத்துப்போனது
எந்தச் சாதிக்காரனுக்கான தண்ணீர் என்பதற்கு
எவரும் சண்டை போடவில்லை


சுழலும் நாற்காலியில் குளிரும் அறையில்
வார்த்தை வசப்படும் சிலருக்கு
முப்பத்தி சொச்ச பொத்தான்களின் மூலம்
விமர்சனங்களால், இசங்களால்
செத்துக் கொண்டிருக்கும் சாதிகளால்
தேடலோடு படிக்க வருபவனுக்கு
தேவையில்லாததைத் திணிக்க முடிகிறது


ஒன்று மட்டும் புரிகிறது
தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்




-------------------------------------------------------------------------


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

31 comments:

thiyaa said...

//
தேடலோடு படிக்க வருபவனுக்கு
தேவையில்லாததைத் திணிக்க முடிகிறது

//

நல்லாயிருக்குது அன்பரே
சமூக சீர்கேட்டை வித்தியாசமாய் எழுதியதற்கு வாழ்த்துகள்

vasu balaji said...

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோம்
தமிழ் காணாமல் போனது
சட்டத்தை ஏமாற்ற
சங்கம் வைத்து சாதிக் கட்சி வளர்த்தோம்
தமிழன் காணாமல் போனான்.

/தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்/

அத்த்து!

என்னா காலையிலயே இவ்வளவு ஆவேசம்.

பிரபாகர் said...

//தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்//

மிகவும் அற்புதமான நிதர்சனமான வரிகள்... கவிதைகளில் என்னை கவர்ந்த இருவரை சொல்லச் சொன்னால் உங்களையும் அண்ணன் தண்டோரா அண்ணனையும்தான் சொல்லுவேன்...

கலக்குங்கள் கதிர்...

பிரபாகர்.

தேவன் மாயம் said...

என்னைச் சுற்றி இரவு உணவு இல்லாமல்
படுக்கைக்கு செல்லும் பாவப்பட்டவர்கள்
///

தோலுரிக்கப்பட்ட உண்மை!!

க.பாலாசி said...

//பசி வயிற்றைக் கிள்ளுகிறவனுக்கு
நோய் உடலை உருக்குபவனுக்கு
சாதியும் இல்லை, இசமும் இல்லை
தர்க்கமும் இல்லை, தாக்குதலும் இல்லை
அவனைப்போல் இன்னொருவனும் இல்லை...//

உண்மையான வரிகள்....கொஞ்சம் ஆழத்துடன்...புரிபவர்களுக்கு புரியும்...

//சுழலும் நாற்காலியில் குளிரும் அறையில் வார்த்தை வசப்படும் சிலருக்கு
முப்பத்தி சொச்ச பொத்தான்களின் மூலம்
விமர்சனங்களால்//

சொல்ல வந்ததின் சுருக்கம் நல்லாருக்கு...

//இசங்களால் செத்துக் கொண்டிருக்கும் சாதிகளால் தேடலோடு படிக்க வருபவனுக்கு தேவையில்லாததைத் திணிக்க முடிகிறது//

இதுதான் மெய்யாலுமே நடந்துகிட்டு இருக்கு....

நல்ல ஆதங்கப் பதிவு...பகிர்வு....

பழமைபேசி said...

கவிதை...கவிதை...

ஆரூரன் விசுவநாதன் said...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம்
தமிழ் காணாமல் போனது....

சாதி வைத்து கட்சி வளர்தோம்
தமிழன் காணாமல் போனான்

சூப்பர்.....


கதிர், இந்தக்கோபம் இங்கே பலருக்கும் உண்டு.

அருமை

தமிழ் அமுதன் said...

//ஒன்று மட்டும் புரிகிறது
தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்..//

..............உண்மை!!

Unknown said...

//.. தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம் ..//

உண்மை..

வால்பையன் said...

//தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்//

அண்ணே நீ கொஞ்சம் கேளேன்னு இழுத்து விட வசதியாயிருக்குமுல்ல!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ தியா

நன்றி @@ வானம்பாடிகள்
(வேற என்னங்க பண்றது)

நன்றி @@ பிரபா
(தண்டோராவுக்கு வாழ்த்துகள்)

நன்றி @@ தேவன் மாயம்
(ஆமாங்க)

நன்றி பாலாஜி
(புரிபவர்களுக்கு புரிந்து ஆட்டங்கள் குறைந்தால் சரி. மிகுந்த ஆதங்கத்தோடுதான்)

நன்றி @@ மாப்பு

நன்றி @@ ஆரூரன்
(உங்கள் கோபமும் உணர்த்தப்படட்டும்)

நன்றி @@ ஜீவன்

நன்றி @@ பட்டிக்காட்டான்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வால்பையன்
(ம்ம்ம்.. இழுத்துவிடட்டும்)

ILA (a) இளா said...

//தேடலோடு படிக்க வருபவனுக்கு
தேவையில்லாததைத் திணிக்க முடிகிறது//
செருப்பால் அடிச்ச மாதிரி இருக்குங்க.

நிலாமதி said...

இரவு உணவின்றி படுக்க செல்பவனின் சோகம்.......மனத்தை என்னவோ செய்கிறது.....உங்கள் கோபம் நியாயமானது தான்.

Radhakrishnan said...

அட்டகாசமான கவிதை.

ஒரு கவிதையில் எத்தனை ஆழமான விசயத்தை, அற்புதமாகச் சொல்ல முடிகிறது.

அருமை.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ இளா
(அப்படியெல்லாம் இல்லைங்க. மனதில் பட்ட சின்ன கோபம், அவ்வளவுதான்)

நன்றி @@ நிலா

நன்றி @@ இராதாகிருஷ்ணன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்.

இன்றைய சூழலிற்குத் தேவையான பதிவு. நிதர்சன உண்மையை இதைவிட அழகாக சொல்ல முடியுமான்னு தெரியல.

//வெள்ளைக்காரன் போடும் சட்டைக்கு
சேர்த்த சாயம் ஊறியதில் செத்துப்போனது
எந்தச் சாதிக்காரனுக்கான தண்ணீர் என்பதற்கு
எவரும் சண்டை போடவில்லை//

உண்மை. கவனமாக இருங்கள் நண்பா, நீங்களும் சூராவளியில் மாட்டிகொள்ளப் போகிறீர்கள்!!

கலகலப்ரியா said...

அருமைங்க..

//
எல்லா இசத்திலும், சாதியிலும்
இருக்கத்தானே செய்கிறார்கள்//

அட நீங்க வேற..! இதெல்லாம் யாருக்குங்க தெரியுது..! வாய் கிழிய பேசுவானுவ.. வீட்ல பொண்ணுக்கோ பையனுக்கோ.. கல்யாணம்னு வந்திச்சோ.. எல்லாம் கடாசிட்டு சாதி மட்டும் தேடுவானுவ..! ஜெயகாந்தன் சொன்ன மாதிரி.. இதெல்லாம் நம்ம ஆளுங்க கிட்ட களையறது ரொம்ப ரொம்ப கஷ்டமுங்க. குஷ்டம் வந்தா கூட.. தொடாத நீ வேற ஜாதின்னுதான் சொல்லுவனே தவிர.. தன்னோட குஷ்டத்த பார்க்க மாட்டன்னு நினைக்கறேன்.

நான் சந்திச்ச ஒரு ரஷ்யப் பெண்மணி சொன்னது "வெள்ளையோ.. கருப்போ.. குட்டையோ.. நெட்டையோ.. டாய்லெட் போனா நாறத்தானே செய்யும்.."..

நான் சொல்றது.. "உசிர் போனா.. எல்லா உடம்பும் நாறத்தானே போறது.."

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒன்று மட்டும் புரிகிறது
தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்//

ம்ஹூம்...கதிர்...சான்சே இல்லை கவிதையில் உண்மைகளையும் அழகா கோர்த்து சூப்பர் ஃபெர்ஃபார்மன்ஸ்...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ செந்தில்
(இன்றைய சூழல் என்னை சோர்வடையச் செய்கிறது, எனவேதான் இந்தப் பகிர்வு)

(சூறாவளி வந்தால் ,நல்ல நண்பர்கள் இருக்க கவலை முறைவுதான், அன்பிற்கும், கனிவிற்கும் கூடுதல் நன்றிச் செந்தில்)

நன்றி @@ ப்ரியா

(சாதி என்றிருந்த அமைப்பு மிக வேகமாக சிதைந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் இன்னும் அறிவார்ந்தவர்கள் அதில் குளிர் காய நினைப்பதுதான் ஆச்சரியமே, ஜெயகாந்தன் சொன்னது போல் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் முடியாததில்லை.)

(உண்மை.. உண்மை.. நாறத்தான் செய்யும்)

நன்றி @@ வசந்த்

அன்புடன் மலிக்கா said...

கதிர் தாங்களின் சமூக எண்ணங்கள்
சரவெடி வித்தியாசமான சிந்தனையோடு எழுத்தியதற்கு
வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

கதிர் கசியும் மௌனம் கலங்க அடிக்குதே

யாழினி said...

//ஒன்று மட்டும் புரிகிறது
தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்//


அசத்தல் வரிகள்! கவிதை நன்றாக உள்ளது!

Ashok D said...

//பசி வயிற்றைக் கிள்ளுகிறவனுக்கு
நோய் உடலை உருக்குபவனுக்கு
சாலையோரம் குப்பையாய் கிடக்கும்
மனநிலை பிறழ்ந்த மனித மூட்டை
எரியும் தார் சாலையில் செருப்பில்லாமல்
கருகும் அழுக்குச் சட்டைக் குழந்தை
என்னைச் சுற்றி இரவு உணவு இல்லாமல்
படுக்கைக்கு செல்லும் //

:)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ மலிக்கா

நன்றி @@ தேனம்மை

நன்றி @@ யாழினி

நன்றி @@ D.R.Ashok

விஜய் said...

வித்யாசமான பார்வை. வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு said...

// ஒன்று மட்டும் புரிகிறது
தெருச்சண்டை போடுபவனுக்கு
எப்போதும் சண்டை முக்கியமில்லை
வேடிக்கை பார்ப்பவனே முக்கியம //
நல்ல பதிவு, சாதியம் என்ற பெயரிலும், சாதி எதிர்ப்பு என்ற பெயரிலும் சண்டையிடும் பதிவர்களுக்கு இந்த வரிகள் ஒரு சாட்டையடி.

கண்ணகி said...

மனம் வலிக்கிறது. இயலாமையலல்.

நாடோடி இலக்கியன் said...

//தேடலோடு படிக்க வருபவனுக்கு
தேவையில்லாததைத் திணிக்க முடிகிறது//

நச்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கவிதை

நன்றி @@ பித்தன்
(மிகச்சரியாக புரிந்தமைக்கு மகிழ்கிறேன்)

நன்றி @@ vattukozhi

நன்றி @@ பாரி

Unknown said...

ஆதங்கம் கவிதையில் சிதறி கிடக்கிறது,கூடவே நேர்மையான கோபமும்...