ஒளி தேடும் விழிகள்


எந்த ஒரு மனிதனும் இறந்த பின்பும் இன்னொரு மனிதனுக்கு உதவ முடியும் என்றால் அது கண் தானம் மூலம் மட்டும் தான். ஆனால் கண் தானம் இன்னும் சரியான அளவில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

பெரும்பாலும் 'நான் கண் தானம் செய்கிறேன்' என்று பதிவு செய்வது மட்டுமே போதும் நினைக்கிறோம். அதற்கேற்றார் போல் பெருந்தொகையான மனிதர்களைக் கூட்டி நான் கண் தானம் செய்கிறேன் எனக் கையெழுத்து இட்டு உறுதிமொழி எடுக்கிறோம். நிச்சயமாக இது சிறந்ததொரு விழிப்புணர்வுதான். அதே சமயம் அதுமட்டுமே முழுமையான கண் தானம் ஆகிவிடாது. இரத்ததானம் போன்று விரும்பும் போது, முடியும்போது அளிப்பதல்ல கண் தானம். ஒரேயொரு முறை மட்டுமே அளிக்கக்கூடியது. இங்கே உறுதியளித்துவிட்டு இறந்துபோகும் சூழலில் யாரும் தகவல் தெரிவிக்க தவறிப்போயிருந்தால் கண் தானம் நிறைவேறாது. எனவே, கண்தானம் செய்வதற்கு வெறும் பதிவு மட்டும் போதாது.

மரணம் நிகழ்ந்த ஆறு மணிநேரத்திற்குள் கண்கள் எடுக்கப்பட வேண்டும். உங்களுக்கு தெரிந்து யாரவது இறந்தால் உடனடியாக இறந்தவரின் குடும்பத்தை அணுகி, அந்த இல்லத்தில் இருக்கும் முக்கியமான நபரிடம் கண் தானம் பற்றி எடுத்துக்கூறி கண்களை தானம் வழங்க ஊக்குவியுங்கள். இறந்த நபரிடம் இருந்து பெறப்படும் இரண்டு கண்கள் இரு பார்வையற்ற நபர்களுக்கு தலா ஒரு கண்களாக வழங்கப்படுகின்றன.

இறந்தவரின் கண்களை அவர் குடும்பத்தினர் தானம் செய்ய விரும்பினால் உடனே அருகில் உள்ள கண் வங்கியை அல்லது உங்கள் பகுதியில் உள்ள அரிமா சங்கத்தினை அணுகவும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் கண்வங்கிகள் செயல்படுகின்றன. அவர்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்களே நேரில் வந்து வெறும் 10 நிமிடத்திற்குள் கண்களை எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.

அரிமா சங்கங்கள் கண் தானத்திற்காக மிகச் சிறப்பாக உழைக்கின்றனர்.

.

5 comments:

கண்ணகி said...

kaalam kadanthu pathivittullen. good job. ippothiya kathirukku.

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமை - சிந்தனை அருமை

கண் தானம் செய்ய வேண்டும் - உண்மை தான்

இருப்பினும் கண் தானம் பற்றிய உணர்வு இன்னும் ஆக்க பூர்வமாக இல்லை.யே - பொறுத்திருந்து பார்ப்போம்

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

Asiya Omar said...

உண்மையான விழிப்புணர்வென்பது இது தானோ!பாராட்டுக்கள்.

Dr. Hariharan said...

என்ன ப்ரச்னைனா, அந்த momentல ஃபேமிலிக்காரங்களுக்கு அது தோணவே தோணாது. நெருங்கிய சொந்தங்கள் சொல்ல பயப்படுவாங்க. எதாவது தப்பாயிருமோன்னு. neighbours சொன்னா பிரச்னை ஆகும். the best solution told by many doctors is: இறந்து போகும் நிலையில் இருக்கும் எல்லோரும் ஹாஸ்பிடலில் தான் இறக்க வேண்டும். அப்படி இறந்தால் டாக்டர்ஸ் ஈசியாக பேக்ஷன்ட் சொந்தக்காரர்களை சம்மதிக்க வைத்து விடுவார்கள். கண்ணும் கிடைக்கும். ஹாலந்து நாட்டு மெத்தட் ஒன்று உள்ளது. அதைப் பற்றி உங்க வேற உறுப்புத்தான போஸ்ட்டில் போடறேன்

Ragul said...

அருமை ஆன தகவல்

By

அன்புடன் இராகுல்