மௌனமாய் அந்த மாலை...
கரிய இருள் போல்
ஏதோ குழப்பம் என்னை
சூழ்ந்திருந்த வேளை...
தேவதை போலெல்லாம் நீ
வரவில்லை....
சாதாரணமாகத்தான் நீ வந்தாய்...
எப்போதும் போல்
ஆனால்.....
என் உள்ளுணர்வுக்கு மட்டும்
உன்னிடமிருந்து
சுகந்தமாய் ஒரு வாசனை
குளிராய் மெல்லிய காற்று....
நீ உற்று பார்த்தபோது
உன் கண்களுக்குள்
நான் அழகாய் தெரிந்தேன்...
சாதாரணமாக வந்த நீ
திரும்பிப்போகும் போது
என்னை திருடிக்கொண்டு
போய்விடுவாய் என்பதை வழக்கம்போல்
தாமதமாகவே உணர ஆரம்பித்தேன்..
திருடப்படுவதிலும் கூட
சுகமிருப்பதை நான் உணரும் போது
மாலை நேரம் கொஞ்சம்
கூடுதலாய் பிரகாசித்தது....
Subscribe to:
Posts (Atom)
விதைக்கப்படும் துயரங்கள்
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...

-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...
-
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...
-
எதையோ படிக்க இணையங்களில் தேடியபோதுதான் இப்படியும் எழுத வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்து, 2008 ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி ஒரு வலைப்பக்கத்தை ...