கரிய தினத்தைக் கடந்து போகிறேன் கனத்த மனதோடு


சென்ற ஆண்டின் இதே மே மாதத்தில் தான்....

தமிழகத்திலும் இந்தியாவிலும் எல்லாக் கட்சிகளும், வாக்குறுதிகளை வாரி வழங்கி வாக்குகளைப் பெற்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தங்களுக்கான இடங்களை தக்க வைக்க போராடி, வெற்றி தோல்விகளின் விகிதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்திய தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் வாய் பிளந்து பார்க்கும், தேசத்தின் விடிவெள்ளிகளான கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், தேசத்தின் பொதுத் தேர்தலில் கூட வாக்களிக்காமல், (உள்நாட்டில் பாதுகாப்பு கொடுக்க மறுத்த அரசுக்கு சவாலாக)) வெளிநாட்டில் சென்று ஐபிஎல் விளையாட்டுப் போட்டியில் கலந்து தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில்...

இந்த தமிழ் தேசத்தின் கூப்பிடு தூரத்தில் இருக்கும் ஈழத்தில் புலிகளை அழிக்கிறேன் என்ற போர்வையில், ஒரு இனத்தையே கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி, சில(??) நாடுகளின் வியாபார தந்திரத்தோடு கை கோர்த்து, பல லட்சம் உயிர்களைக் குடித்து மிகக் கொடூரமானதொரு இன அழிப்பை, மிக வெற்றிகரமாக கோரப் பற்களில் வழியும் இரத்ததோடு இலங்கையின் கொடிய அரசு நிறைவேற்றியது.

ஆறு கோடிக்கும் மேல் வசிக்கும் தமிழர் இனத்தில் மிகமிகக் குறைந்த சதவிகித மக்கள்தான் அந்த கொடிய இன அழிப்பு குறித்து துடித்துத் துவண்டு, அழுது, ஆர்பரித்து தங்கள் சோகத்தை கரைத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு இன அழிப்புக்கு எதிராக, உலகம் அதிரக் குரல் கொடுக்க வேண்டிய ஒட்டு மொத்த தமிழகத் தமிழர்களிடம் ஒரு அடர்த்தியான மௌனம் பாசிபிடித்து படிந்து கிடந்தது. ஒத்த சிந்தனையும், ஈழத்தின் மேல் பற்றும், ஈழத்தமிழர்கள் மேல் அக்கறையும் கொண்டிருந்த நண்பர்கள் மட்டும் இணையங்களிலும், பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தேடித் தேடி ஒரேயொரு நல்ல செய்தி கிடைக்காத என்று மனதில் வலியோடு, மிகப் பெரிய பயம் கவ்வ பார்த்துக்கொண்டிருந்த காலத்தில்….

புலிகள் இயக்கத்திலிருந்து “இனி எங்கள் துப்பாக்கிகள் மௌனிக்கும்என்ற செய்தி வந்ததாக தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்த, கொடிய அந்த மே 18 திங்கட்கிழமையின் விடியலிலிருந்தே மிக மோசமான கெட்ட செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. சரணடையச் சென்ற போது புலிகள் இயக்கத்தின் மிக முக்கியத் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக, அந்தத் தலைவர்களின் உடல்களும் காட்டப்பட, விரக்தியான மனநிலையில் அங்கே செத்தொழிந்து கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என நடுங்கும் மனதோடு இணையத்தில் புதுசுபுதுசாய் விழுந்து கொண்டிருந்த இரத்தக் கவிச்சை வழியும் படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது “டேய் பிரபாகரனை போட்டுத் தள்ளிட்டாங்களாம், டிவியில் காட்றாங்கஎன்று ரோட்டில் போகும் ஒருவன், யாரிடமோ எக்காளமாக போனில் பேசிக் கொண்டு போனதை கேட்ட விநாடிதான், வாழ்நாளின் மிகக் கொடிய விநாடி. அதை நினைக்கும் போதெல்லாம், இப்போதும் கூட அந்தக் கோரக்குரல் என்னுள் ஒலித்து ஒரு கணம் உடலை நடுங்க வைக்கிறது.

உண்மையாக இருக்கக் கூடாதே என்று இணையத்திலும், தொலைக் காட்சிகளிலும் தேடித் தேடிக் களைத்து, துவண்டு அந்த நாளைக் கடத்துவதே நரகமாக இருந்தது. ஈழம் வேண்டிப் போராடிய புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. நச்சுக்குண்டுக்கும், பாஸ்பரஸ் குண்டுக்கும் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்து கிடக்கும் சக தமிழனின் உடலை இணைய வழிப்புகைப் படங்களில் பார்த்த வேதனை ஒட்டு மொத்தமாக சுழற்றியடித்தது, எல்லாம் ஒரு கொடுங்கனவாய் இருந்து விடக் கூடாதா என மனம் ஏங்கித் தவித்தது. முதல் நாள் விமானத்திலிருந்து இறங்கி மண்ணை மண்டியிட்டு வணங்கிய ராஜபக்சேவின் புகைப் படத்தை மனது அடிக்கடி நினைத்துப் பார்த்து, நடந்ததெல்லாம் நிஜமாகத்தான் இருக்குமோ என்ற பயம் கூடுதலாய் மனதை அலைக்கழித்தது. சவக்களையோடு முகம் இருந்ததை பார்த்தவர்களெல்லாம் என்ன ஆச்சு எனக் கேட்டபோது குரல் உயர்த்தி கோபத்தோடு ஒன்னுமில்லை என உரக்கப் பேசியது மட்டும் நினைவிலிருக்கிறது. உள்ளுக்குள் கோபமும், இயலாமையும், அழுகையுமான ஒரு வலி மிகுந்த, அதுவரை உணராத ஒரு தோற்றுப் போன மனநிலை.


துவண்டு கிடந்த மனது நாட்கள் நகர, வாரங்கள் கழிய, மாதங்கள் முடிய கொஞ்சம் கொஞ்சமாக நிலைபெறத் துவங்கியது. ஆனாலும் மனது முழுக்க வலியும், அனாதைகளாக்கப்பட்ட சக மனிதனுக்கு கிடைக்காத நீதி மேல் ஒன்றும் செய்ய கையாலாகாத கடும் கோபமும் தளும்பிக் கொண்டிருந்தது. அதே நேரம், ஆறு கோடிப் பேருக்கும் மேல் வசிக்கும் இந்த தமிழகத்தின் ஒட்டு மொத்த தமிழர்கள், இன உணர்வோடு ஒன்று திரண்டிருந்தால் மிக நிச்சயமாக அந்த இன அழிப்பை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்க முடியாது என்பதும் புரிந்தது.

மக்களை ஒன்று திரட்ட விடாமல், இந்தியாவின் அத்தனை ஊடகங்களும், அத்தனை அரசியல் அமைப்புகளும் ஒட்டு மொத்தமாக பார்த்துக் கொண்டன, அதில் வெற்றியும் கண்டன. ஈழம் தொடர்பான அத்தனை நிகழ்வுகளிலும் தமிழக அரசியல்வாதிகள் தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்ள துடித்தனர். யார் செத்தால் என்ன, தான் எதைச் சொன்னால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

தனித் தமிழ் ஈழத்திற்கான நீண்ட போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில், முழுக்க முழுக்க இன அழிப்பு போராட்டமாக மாற்றி கொன்று குவிக்கப்பட்ட மனித உயிர்கள் பற்றி, மூன்றாவது தெருவில் சாக்கடை அடைப்பு என்பது போல் மிகச் சாதரணமான் செய்திகள் போல், தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி ஊடகங்கள் இருட்டிப்பு செய்தன. பத்திரிக்கைகள் புலிகள் இயக்கத் தலைவர்கள் குறித்து காற்றில் வந்த செய்திகளை அனைத்தையும் இடவலமாக மாற்றி மாற்றி, புதிய புகைப்படங்களை வடிவமைத்து கணினி வடிவாக்கங்களோடு வாரந்தோறும் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தங்கள் வியாபாரத்தை மிக நேர்த்தியாக, எதிர் பாராத அளவில் பெருக்கிக் கொண்டனர். சில எழுத்தாளர்களும், பதிப்பகங்களும் ஈழத்தின் தோல்வி மற்றும் பாதிக்கப்பட்ட மனித அவலங்கள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு பல வழிகளில் பணம் ஈட்டினர். இதில் அனைவரின் நோக்கமும் பணம் சார்ந்த வியாபாரம் மற்றும் அரசியல் என்பதாகவே இருந்தது.

அதே நேரத்தில் உண்மையான இன உணர்வோடு, சகமனிதனுக்காக கண்ணீர் விட்ட, ஏதாவது செய்ய நினைத்த தமிழர்களும் இருக்கவே செய்தார்கள், துரதிருஷ்டவசமாக மிகக் குறைந்த தொகையில்.

மக்கள் தொடர்ந்து அறிவு பெறாதவர்களாகவே வைத்திருக்க பார்த்துக் கொள்ளப்பட்டனர். நம்பி வாசிப்பவர்களை வகை தொகையின்றி பொய்யான, கற்பனை செய்திகளை வெளியிட்டு தங்கள் வியாபாரத்தை கவனமாக பார்த்துக் கொண்ட ஊடகங்கள், போர் முடிவுக்குப் பின் முள் வேலிகளில் விலங்குகளை விட மிக மோசமாக அடைக்கப் பட்ட மனித சமூகம் பற்றி, ஒட்டு மொத்தமாக மறக்கடிக்கும் பணியில் மிகத் தெளிவாக தங்கள் பயணத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு இனத்தின் போராட்டத்தை, இன அழிப்புப் போராக மாற்றி, வெற்றி கண்ட இந்தக் கரிய தினத்தில்...


கொடியதொரு நயவஞ்சக இன அழிப்புப் போரில் தெரிந்தும், தெரியாமலும் தங்கள் உயிரை, உறுப்புகளை, கற்பை, உறவுகளை, உடமைகளை இழந்த அத்தனை ஆத்மாக்களிடமும், கையலாகத்தனம் மிகுந்த சக தமிழனாக மானசீகமாக மன்னிப்புக் கோரி, உயிர் துறந்த ஆத்மாக்கள் அமைதி அடைய மனமுருக வேண்டி, என்றாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு வழியில் தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற நெஞ்சம் உருகும் பிராத்தனைகளோடு இந்த கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு.

______________________________________

42 comments:

அன்புடன் நான் said...

என்றாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு வழியில் தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற நெஞ்சம் உருகும் பிராத்தனைகளோடு இந்த கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு.//

நானும்......

Venkat M said...

Am first....

Chitra said...

கொடியதொரு நயவஞ்சக இன அழிப்புப் போரில் தெரிந்தும், தெரியாமலும் தங்கள் உயிரை, உறுப்புகளை, கற்பை, உறவுகளை, உடமைகளை இழந்த அத்தனை ஆத்மாக்களிடமும், கையலாகத்தனம் மிகுந்த சக தமிழனாக மானசீகமாக மன்னிப்புக் கோரி, உயிர் துறந்த ஆத்மாக்கள் அமைதி அடைய மனமுருக வேண்டி, என்றாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு வழியில் தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற நெஞ்சம் உருகும் பிராத்தனைகளோடு இந்த கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு.


..... பிரார்த்தனையில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

Amal said...

//கொடியதொரு நயவஞ்சக இன அழிப்புப் போரில் தெரிந்தும், தெரியாமலும் தங்கள் உயிரை, உறுப்புகளை, கற்பை, உறவுகளை, உடமைகளை இழந்த அத்தனை ஆத்மாக்களிடமும், கையலாகத்தனம் மிகுந்த சக தமிழனாக மானசீகமாக மன்னிப்புக் கோரி, உயிர் துறந்த ஆத்மாக்கள் அமைதி அடைய மனமுருக வேண்டி, என்றாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு வழியில் தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற நெஞ்சம் உருகும் பிராத்தனைகளோடு இந்த கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு.
//
நானும்தான்.

vasu balaji said...

உங்களுடன் நானும். வேறென்ன சொல்ல?

குடுகுடுப்பை said...

சோகத்தை நானும் கடக்க முயற்சிக்கிறேன்.

Unknown said...

நானும்...

Ramesh said...

சொல்ல வேண்டிய உணர்வுகள் மெளனிக்க நீங்கள் சொல்லியவை நானும் உங்களோடு சேர்த்து உரக்க சொல்லுகிறேன்

///கண்ணை
தடவிப்பார்க்க
'அப்பா' என்ற மகளை
பாய் நனைத்திருப்பாள்
என்ற நெனைப்பில
வருடிய கை
தெரிந்துகொண்டது
இரத்தக்காயம்
அவள்
உடலிலும்
என்
உள்ளத்திலும்
காயப்பட்டதனால்
காய்ந்துவிடாமல்....
///

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அமைதியான நிம்மதியான வாழ்க்கை அவர்களுக்கு அமைய வேண்டும்.

பார்ப்போம்.. அந்த நாள் எப்பொழுது வரும் என்று. :(

Jerry Eshananda said...

"தோள் கொடுக்கிறேன் தோழா."

மோனி said...

:-(

நாடோடி said...

க‌ண்டிப்பாக‌ அமையும் என்ற‌ ந‌ம்பிக்கையில் நானும் உங்க‌ளுட‌ன்..

பட்டாசு said...

//அதே நேரத்தில் உண்மையான இன உணர்வோடு, சகமனிதனுக்காக கண்ணீர் விட்ட, ஏதாவது செய்ய நினைத்த தமிழர்களும் இருக்கவே செய்தார்கள், துரதிருஷ்டவசமாக மிகக் குறைந்த தொகையில//
நூற்றில் ஒரு வார்த்தை.

நிச்சயம் இதயம் உள்ளவர்களுக்கு வலிக்க செய்யும்.

patttasu.blogspot.com

தமிழ் உதயன் said...

மனதின் வெறுமை சூழ்ந்த இந்த தினத்தில் நானும் பிரார்திக்கிறேன்....
இன்றைய நிலையில் ஈழம் ஒரு கனவு தேசம் நமக்கு......

ஆனால் கண்டிப்பாக போராட்ட காரணங்கள் உள்ளவரை போராட்டம் உண்டு என்பது போல தமிழருக்கான ஈழம் என்றாவது நமக்கு கிட்டும்....

இந்த விடையத்தில் நாம் எப்போதும் போல கையாலாகாத அரசியல்வியாதிகளை கண்டு கொண்டோம்...

கண்ணீருடன்

தமிழ் உதயன்

செ.சரவணக்குமார் said...

நம் மக்களுக்கு அமைதியும் நிம்மதியும் சீக்கிரம் கிடைக்கட்டும்.

Unknown said...

கொடியதொரு நயவஞ்சக இன அழிப்புப் போரில் தெரிந்தும், தெரியாமலும் தங்கள் உயிரை, உறுப்புகளை, கற்பை, உறவுகளை, உடமைகளை இழந்த அத்தனை ஆத்மாக்களிடமும், கையலாகத்தனம் மிகுந்த சக தமிழனாக மானசீகமாக மன்னிப்புக் கோரி, (உயிர் துறந்த ஆத்மாக்கள் அமைதி அடைய மனமுருக வேண்டிய தகுதியை இழந்து விட்டேன்) என்றாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு வழியில் தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற நெஞ்சம் உருகும் பிராத்தனைகளோடு இந்த கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு.
நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்.
மேலும் மற்ற மாநிலத்தார்கள் நடந்து கொள்ளும் நிலையை பார்க்கும் போது நமக்கும் அது போன்றதொரு நிலை வெகு விரைவில் வரலாம்.அப்போதும் அதை நாம் இந்தியர்களாய் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும்.

அகல்விளக்கு said...

கனத்த மனதோடு நானும் பிராத்திக்கிறேன்...

தமிழ்நதி said...

படித்தேன் கதிர். சொல்வதற்கு ஒன்றுமில்லை. வார்த்தைகளும் செத்துப்போய்விட்டன.

ஹேமா said...

வார்த்தைகளும் முடங்கித்தான் இன்றைய நிலையில்.

அங்குள்ள மக்களுக்கு இன்றைய தேவைகளுக்காய் உதவிகள் செய்வோம்.

Anonymous said...

வார்த்தைகளை கோர்க்க முடியாமல், இயலாமையால் சின்னாபின்னமான மனதை பற்றி நினைத்துக்கொண்டு மென்று விழுங்கிக்கொண்டிருந்தேன். நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் !!!

க.பாலாசி said...

இது நமக்கான வேண்டுதல்....பிரார்த்தனைகளில் என் பங்கும் இருக்கும்....

Kumky said...

என்னத்த சொல்றது...

இந்த இனத்தில் பிறந்ததற்காக நொந்துபோவதை தவிர...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

,,,,,,

சூர்யா ௧ண்ணன் said...

உங்களுடன் நானும் கடக்க முயற்சிக்கிறேன்.

தாராபுரத்தான் said...

மிகக் கனத்த மனதோடு.

பிரபாகர் said...

நானும் உங்களோடு கதிர்!

கனத்த கனத்த மனத்தோடு...

பிரபாகர்...

karthik said...

kandippaga tamil eelam malarum

க ரா said...

உங்களோடு நானும்.

Oruvan said...

ஓர் ஈழத்தமிழனாய் என் மனமார்ந்த நன்றிகள் ..

கனத்த இதயத்தின் வலிகளோடும் ஏக்கத்தோடும் ....
ரணங்களோடும் நகர்ந்து கொண்டிருக்கு - என் நாட்கள் நடைபிணமாய்.
http://enmugavary.blogspot.com/2010/05/blog-post_18.html

திருமூர்த்தி. சி said...

manathu kanathathu ungal pathivai padithu,we should do something!!!

Adirai khalid said...

உலக அரங்கம் கைகட்டி வேடிக்கை பார்த்த ஒரு இனப் படுகொலை நடந்த அந்தக் குருதிப்படிந்த நாட்கள்., என் தொப்புல் கொடி சொந்தங்களை
அவர்கள் பக்குவப்படுத்திய மண்ணிலேயே உயிருடன் புதைத்து
எங்களை கலகப்படுத்திய நாட்கள் எங்களை ஊமையாய் முடவனாய் முடக்கிப்போட்ட நட்கள் இன்னும் மனதில் ரனமாக ஓடிக்கொண்டுதான் இருகிண்றது. இஸ்ரேலிய அரசு இன்னும் அந்த பாலஸ்தீனத்திலும் செய்துகொன்டுதான் இருக்கின்றது. அதுபோல் சிங்கல ராஜபக்சே அதைவழிமொழிந்துகொண்டு என் மக்களை அகதி முகாம்களில் வதை படுத்திக்கொண்டு இருக்கும் வேலையில் அவர்கலுக்கு
உதவ நாடு கடந்த தமிழீழ அரசு அல்லது அமைப்புகள் என்ன செய்யப்போகிறது ?

மிகக் கனத்த மனதோடு
சோகத்தை நானும் கடக்க முயற்சிக்கிறேன்.

May 18, 2010 9:31 AM

புலவன் புலிகேசி said...

கனத்த மனதுடன் நானும்...

ஈரோடு கதிர் said...

எழுத்தின் மூலம் இறக்கிவைத்த வலியை பகிர்ந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

prem said...

கனத்த மனதோடு நானும் பிராத்திக்கிறேன்..

பனித்துளி சங்கர் said...

உங்களின் வார்த்தைகளில் கசிக்கிறது இழந்த நம் ஈழத்து மக்களின் உணர்வுகள் பெரும் தீ குழம்பாக !பகிர்வுக்கு நன்றி !

பிரேமா மகள் said...

ஒரு முறை இலங்கை சென்று வாருங்கள்.. இந்திய மண் மீது அவங்களுக்கு அத்தனை வெறுப்பு அண்டிக் கிடக்கிறது...

அதன் பிறகு, இங்கே தமிழ்நாட்டில், இலங்கை தமிழரை வைத்து நடக்கும் அனைத்து நாடகங்களும் உங்களுக்கு புரியும்..

க. தங்கமணி பிரபு said...

உங்களோடு என் வேதைனைகளையும் மௌனமாய் பகிர்ந்துகொள்கிறேன். தேங்கும் கண்ணீரை விடோம் எனும் மன உறுதியை கொண்டு துடைத்துக்கொள்கிறேன்!

r.v.saravanan said...

நானும் பிராத்திக்கிறேன்

திருமூர்த்தி. சி said...

//கொடியதொரு நயவஞ்சக இன அழிப்புப் போரில் தெரிந்தும், தெரியாமலும் தங்கள் உயிரை, உறுப்புகளை, கற்பை, உறவுகளை, உடமைகளை இழந்த அத்தனை ஆத்மாக்களிடமும், கையலாகத்தனம் மிகுந்த சக தமிழனாக மானசீகமாக மன்னிப்புக் கோரி, உயிர் துறந்த ஆத்மாக்கள் அமைதி அடைய மனமுருக வேண்டி, என்றாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு வழியில் தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற நெஞ்சம் உருகும் பிராத்தனைகளோடு இந்த கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு.//

பாலியியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் கற்பை இழந்ததாக கருத முடியாது.

விக்னேஷ்வரி said...

ஒரு இன அழிப்புக்கு எதிராக, உலகம் அதிரக் குரல் கொடுக்க வேண்டிய ஒட்டு மொத்த தமிழகத் தமிழர்களிடம் ஒரு அடர்த்தியான மௌனம் பாசிபிடித்து படிந்து கிடந்தது.//
கேவலமான உண்மை. :(

மனம் கனக்கிறது கதிர்.

vairamani said...

inru padikkum pothum nenjai arukkum vethanai. tamil eelam malarum naal veku viraivile therikinrathu

Anonymous said...

Hope sure one day peace comes to them.... before the earth destroys
!!!