வலிக்கும் நியதி


வலி
றித்த சிவப்பு ரோஜாவின்
காம்பில் ஈரமாய்க் கிடக்கிறது
இரத்தம் நிறமிழந்து


உறவு
டிமாட்டுக்கு லாரி ஏறிய
மடிவற்றி மாட்டின் தலக்கயிறு
கனவில் இறுக்குகிறது கழுத்தை




நியதி
பூ மட்டுமா உதிர்கிறது
தேடிவரும் தேனீயின்
நம்பிக்கையும் தானே




முகம்
த்தனை திருத்தியும்
ஏனோ நிறைவில்லை
சகிக்காத கண்ணாடியின் சாபம்


  ____________________

38 comments:

vasu balaji said...

உறவு, வலி, நியதி, முகம். :) சபாசு!

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
உறவு, வலி, நியதி, முகம். :) சபாசு!
//

இதுல நியதி, உச்சம்!

butterfly Surya said...

அருமை கதிர்.

செல்வமுரளி said...

அருமை!!
நன்றி

Unknown said...

எல்லாம் அருமை.. பழமையண்ணன் சொன்ன மாதிரி நியதி உச்சம்..:))

MJV said...

அற்புதமாய் இருந்தது கவிதைகள் கதிர் வாழ்த்துக்கள். உறவு என்னை கவர்ந்தது!!!

Chitra said...

முகம்
எத்தனை திருத்தியும்
ஏனோ நிறைவில்லை
சகிக்காத கண்ணாடியின் சாபம்

.......... :-)

க ரா said...

அருமை. அருமை.

பா.ராஜாராம் said...

அற்புதம் கதிர!,நாலும்!!

ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையாக பிரிகிறது.

புலவன் புலிகேசி said...

அனித்தும் நன்று என்றாலும் முதல் இரந்தும் கணக்கச் செய்கிறது...

மாதவராஜ் said...

நல்ல தெறிப்புகள், கதிர்!

*இயற்கை ராஜி* said...

mm... super yeeee:-)

தமிழ் said...

/நியதி
பூ மட்டுமா உதிர்கிறது
தேடிவரும் தேனீயின்
நம்பிக்கையும் தானே
.....
முகம்
எத்தனை திருத்தியும்
ஏனோ நிறைவில்லை
சகிக்காத கண்ணாடியின் சாபம்//

அருமை

மாதேவி said...

எல்லாம் அருமை.
உறவு கனக்கிறது.

ஆரூரன் விசுவநாதன் said...

வலியின் நியதி, வலியோடும் வலிமையோடும் வந்திருக்கிறது......

வாழ்த்துக்கள் கதிர்

Jerry Eshananda said...

கதிர் நலமா?உறவு வலிக்கிறது.,முகம் மலர்கிறது.,

தேவன் மாயம் said...

வரிகள் நன்று!!!

அகல்விளக்கு said...

அனைத்தும் அருமை....

ராகவன் said...

அன்பு கதிர்,

உறவும், முகமும் நிறைய பிடித்தது.

நீங்கள் முந்தா நாள் பெங்களூர் வந்ததாக கும்க்கி சொன்னார், உங்கள் எண் அன்று கிடைக்காததால் பேச நினைத்தும் முடியவில்லை.

அடுத்தமுறை வரும்போது ஒரு குறுஞ்செய்தி அனுப்பவும்... சந்திக்க முயலலாம்.

அன்புடன்
ராகவன்

கலகலப்ரியா said...

ஹைக்கூ எல்லாம் நன்னாயிட்டு உண்டு....!

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{ எத்தனை திருத்தியும்
ஏனோ நிறைவில்லை
சகிக்காத கண்ணாடியின் சாபம் }}}}}}}}


அற்புதமான சிந்தனை . வாழ்த்துக்கள் !

Balakumar Vijayaraman said...

அருமை.

தாராபுரத்தான் said...

ப,அ,பூ,எ....எங்கேயோ போரீங்க.

அம்பிகா said...

மடி வற்றின மாட்டை அடிமாடாய் அனுப்புவது நியதியாய் இருந்தாலும், உறவின் வலி, முகத்தில் (கவிதையில்) தெரியுது. அருமை.

நிலாமதி said...

மணி மணியாக குறுங்கவிதைகள் ....அழகாக் இருக்கிறது. பாராடுக்கள்.

மதுரை சரவணன் said...

கவிதைகள் அத்துனையும் அற்புதம். வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

வலியும் நியதியும் வலிக்கிறது கதிர்

சீமான்கனி said...

வலி,உறவு,நியதி, முகம்...
அற்புதம் அண்ணே..

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அருமை.

அன்புடன் நான் said...

1.உறவு
2.வலி
3.நியதி
4.முகம்........ அத்தனையும் நெருடல் கவிதை..... இது என் வரிசை!

Anonymous said...

நன்முத்துக்கள் நான்கும் அழகு....

க.பாலாசி said...

உறவுக்குள் புதைந்திருக்கும் வலியை பார்க்கிறேன்....கவிதையினூடாக...

பிரேமா மகள் said...

கண்ணாடி பொய் சொல்லாது..

இருப்பதைத்தான் பிரதிபலிக்கும்...

Kodees said...

கதிர்!, சா(ய்)ன்ஸே இல்லை!! அருமை!!!

ஈரோடு கதிர் said...

வாசிப்பிற்கும்...
பாராட்டிற்கும் நன்றிகள்

@@ வானம்பாடிகள்
@@ பழமைபேசி
@@ butterfly Surya
@@ செல்வமுரளி
@@ முகிலன்
@@ காவிரிக்கரையோன் MJV
@@ Chitra
@@ க.இராமசாமி
@@ பா.ராஜாராம்
@@ T.V.ராதாகிருஷ்ணன்
@@ புலவன் புலிகேசி
@@ மாதவராஜ்
@@ இய‌ற்கை
@@ திகழ்
@@ மாதேவி
@@ Tech Shankar
@@ ஆரூரன்
@@ ஜெரி ஈசானந்தா
@@ தேவன் மாயம்
@@ அகல்விளக்கு
@@ ராகவன்
@@ கலகலப்ரியா
@@ பனித்துளி சங்கர்
@@ வி.பாலகுமார்
@@ தாராபுரத்தான்
@@ அம்பிகா
@@ நிலாமதி
@@ Madurai Saravanan
@@ thenammailakshmanan
@@ seemangani
@@ ராமலக்ஷ்மி
@@ சி. கருணாகரசு
@@ தமிழரசி
@@ க.பாலாசி
@@ பிரேமா மகள்
@@ ஈரோடு கோடீஸ்

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

வலி, உறவு, நியதி மற்றும் முகம் - குறுங்கவிதைகள் அருமை அருமை

நல்வாழ்த்துகள் கதிர்

lily said...

கவிதைகள் துன்பத்திலும் சிரிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தியது.அருமை.நீலா.

lily said...

கவிதைகள்மிகவும் அருமை.