முனையுள்ள நூல்கண்டு

பார்வையை சற்று விசாலப்படுத்தித் தேடிப்பாருங்கள். இரண்டு விதமான மனிதர்களை நாம் பார்க்க முடியும், ஒன்று தனக்கு வந்த பிரச்சனைகளை சரி என ஏற்றுக்கொண்டு நடைபோடுபவர்கள் மற்றொன்று தனக்கு வந்த அந்த பிரச்சனையை ஏற்றுக்கொள்ள மறுதலித்து அதை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அதைப் பற்றியே என்னேரமும் பேசிக் கொண்டிருப்பவர்கள். ஒன்று மட்டும் தவிர்க்க முடியாத உண்மை பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை.

வாழ்க்கையில் ஏதாவது ஒரு வடிவில் சிக்கல்களோ அல்லது பிரச்சனைகளோ வருவதை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஆனால் வந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

காரணம் இருந்தாலும், சில சமயம் காரணம் இல்லாவிட்டாலும் கூட பிரச்சனை என்பது ஏதோ ஒரு உருவத்தில் வரத்தான் செய்யும். முதலில் நமக்காக வரும் பிரச்சனையை முழுதாய் உள்வாங்குவது அவசியம், அப்போதுதான் அதன் நீள அகலம் தெரியும், அதை எப்படி அணுகுவது என்பது குறித்து ஆராய முடியும். இங்கு மிக முக்கியம் குறைந்த பட்சம் பிரச்சனையை உள்வாங்குவது, அதை விடுத்து பிரச்சனையை உள்வாங்காமல் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, எனக்கு பிரச்சனை வந்துடுச்சு, எப்படித் தீர்க்கப்போறேனேனு தெரியலை என்று புலம்புவதால் ஒரு போதும் பிரச்சனையைத் தீர்க்க முடிவதில்லை.

என்னிடம் யாராவது தங்களுடைய பிரச்சனையை குறித்து பேசும் பொழுது, முதல் தடவை அதை முழுதாக கேட்பேன். அதே நபர் திரும்பவும் அதே பிரச்சனை குறித்து முதலில் பேசிய விசயத்தையே மீண்டும் பேசினால் கிட்டத்தட்ட புரிந்துவிடும், அவர் தன்னுடைய பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாரில்லை. யார் ஒருவர் தன் பிரச்சனையை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு அதைப் பற்றியே பேசுகிறாரோ அவருக்கு தீர்வு கிடைப்பது கடினம்.

அது போல் எப்போதும் பிரச்சனையை மட்டுமே தொடர்ந்து, தொடர்ந்து பேசும் நபர்களிடம் அடிக்கடி சொல்லும் விசயம்... ” நீ உயிரோடு இருப்பதற்கு, புத்தி தெளிவாக இருப்பதற்கு, உடல் நலத்தோடு இருப்பதற்கு, வேலையோ தொழிலோ செய்வதற்கு முதலில் சந்தோசப்படு, ஏதோ ஒரு கட்டத்தில் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் அல்லது பிரச்சனை பக்கத்தில் வைத்துக்கொண்டே வாழ்க்கையை நல்லபடியாக நகர்த்த பழகிக்கொள்ளலாம்” என்பதுதான்.

முகத்திற்கு நேராக கையை நீட்டி விரல்களை விரித்து அந்த விரல்களின் வழியே பாருங்கள்.... விரல்களின் ஊடாக உலகம் தெரியும், இப்போது விரல்களை மட்டும் பாருங்கள், விரல்கள் மட்டும்தான் தெரியும், உலகம் மங்கிப்போயிருக்கும்

முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...
_______________________________________

41 comments:

Anonymous said...

//உண்மை பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. //

இது மனதுக்கு புரிந்தாலும் அறிவுக்கு எட்டுவதில்லை ....உம் நான் தான் எந்நேரமும் எதோ நான் ஒருத்தி தான் இந்த உலகத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பது போல மனசுக்குள்ள ஒரு புலம்பல்.... நல்ல கருத்தை பகிர்ந்திருக்கீங்க...ம்ம்ம்ம் இனிமேலாவது நான் திருந்தறேனா பார்க்கலாம்....

vasu balaji said...

good analysis.

அகல்விளக்கு said...

A good analytical view of problem

க.பாலாசி said...

அடடா... நல்ல கட்டுறை..

//விரல்களின் ஊடாக உலகம் தெரியும், இப்போது விரல்களை மட்டும் பாருங்கள், விரல்கள் மட்டும்தான் தெரியும், உலகம் மங்கிப்போயிருக்கும்//

ம்ம்ம்.. சரிதான்.

சிலநேரத்துல வேலிமேல இருக்கறத எடுத்து வேட்டிக்குள்ள விட்டுக்கற கதையெல்லாம் இருக்கு...

கண்மணி/kanmani said...

அருமை.
ஆனாலும் நூல்கண்டைப் பிரிக்கும் போது முனையைச் சரியாகப் பிடித்து சிக்கலாக்காமல் இருக்கவும் வேண்டும்.

ராமலக்ஷ்மி said...

//முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...//

அருமை.

குருத்து said...

இந்த வார நட்சத்திரத்திற்கு முதலில் வாழ்த்துக்கள்.

பதிவு பற்றி கருத்து சொல்ல மீண்டும் வருகிறேன்.

Paleo God said...

அருமை.

நம் பிரச்சனைகளை நாம்தான் தீர்க்கவேண்டும், அடுத்தவர்களுக்கு அதன்மேல் ஒருபோதும் அக்கரை இருப்பதில்லை, அப்பறம் என்னாச்சு என்று கதை கேட்பதோடு நகர்ந்து விடுவார்கள், பாவம் அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு.

பிரச்சனைகளே இல்லையா..
simple Create a Problem and Solve it.:)

பழமைபேசி said...

சரி, நாம நம்ம வேலைய ஆரம்பிப்போம்....இஃகி....

//என்னேரமும் //

என்னுடைய + நேரமும் = என்னேரமும்

எந்த + நேரமும் = எந்நேரமும்

//நூல்கண்டு//

பாம்பு கண்டு, அரவம்கண்டு, பால் கண்டு, நூல் கண்டு....

நூல் + கண்டு = நூற்கண்டு

பழமைபேசி said...

//பிரச்சனைகளே இல்லையா..
simple, Create a Problem and Solve it.:)//

Create a Problem and Solve it = writing script for drama

புலவன் புலிகேசி said...

நல்ல விசயம் சொன்னீங்க கதிர். நான்கல்லாம் படுக்கும் போது பெட்ஷீட்டுக்கு பதிலா பிரச்சினைய போத்திக் கிட்டு தூன்குறவங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து//

super

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அதே நபர் திரும்பவும் அதே பிரச்சனை குறித்து முதலில் பேசிய விசயத்தையே மீண்டும் பேசினால் கிட்டத்தட்ட புரிந்துவிடும், அவர் தன்னுடைய பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாரில்லை\. //

போட்டு உடைக்கிறீங்க.. :)

மணிஜி said...

கதிர்.. இந்த வாரம் நீங்கள் எழுதியதில் இதுதான் டாப்(இன்னும் 3 நாள் இருக்கே)

தாராபுரத்தான் said...

மிக முக்கியம் குறைந்த பட்சம் பிரச்சனையை உள்வாங்குவது

Kumky said...

good one.

But there is lot of prob to face some problems....

:-)))

priyamudanprabu said...

ஒன்று மட்டும் தவிர்க்க முடியாத உண்மை பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை.
/////

ஆமாங்க

priyamudanprabu said...

முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...
///

தத்துவம்

Unknown said...

கதிர், பிரச்சனை பிரச்சனையா இருந்தா பரவாயில்லை. அந்தப் பிரச்சனையே பிரச்சனையாயிட்டாத்தான் பிரச்சனை.
அன்புடன்
ச்ந்துரு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Nice one Kathir..

//Create a Problem and Solve it = writing script for drama//

:))

Radhakrishnan said...

பிரச்சினைகள் பற்றிய நல்லதொரு ஆய்வு.

*இயற்கை ராஜி* said...

//பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை//

பிரச்சினையை நாம கண்ணு பக்கத்துல வச்சி பாக்கறோமா.. தூரத்துல வச்சி பாக்கறோமாங்கிறதுலதான் அதோட தீவிரம் இருக்கு..

ம்ம்..பதிவு....வழக்கமான கலக்கல்:-)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//அதைப் பற்றியே என்னேரமும்//
நல்ல பதிவு கதிர். இதை மட்டும் திருத்தி விடுங்கள்.

நிலாமதி said...

உபதேசம் செய்யும் போது ......அழகு. பிரச்சினை வரும் போது ..மனம் நொந்து தான் போகிறது .
இன்னும் கொஞ்சம் விழிப்பாய் இருந்து இருக்கலாமோ என்று ?

ஆரூரன் விசுவநாதன் said...

சின்ன நூல்க் கண்டா நம்மை சிறை பிடிப்பது என்ற நூல் நினைவிற்கு வருகிறது.

வாழ்க்கை பற்றிய அலசல் அருமை...


வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமையான இடுகை

நூற்கண்டிற்கு முனை உண்டு - தேட வேண்டும் - சிக்கல்கள் அவிழ்க்க வேண்டும் - கிடைக்கும் - பிரச்னைகளைத் தீர்க்க அலச வேண்டும்.

நல்ல சிந்தனை - நன்று

நல்வாழ்த்துகள் கதிர்

malar said...

நல்ல பதிவு .....

தினம் தினம் பிரச்சனைக்கு நடுவே தான் காலம் ஓடுகிறது .வீட்டில் சும்மா இருந்தாலும் எதோ ஒரு ரூபதில் வெளியில் இருந்து வரும்.

jo said...

கணவன் மனைவி பிரச்சனையை எப்படி தீற்பது .சிறு சிறு பிரச்சனை வந்தாலும் அதை மறந்து எப்படி சகஜமாக பேசுவது.ஈகோ வந்து தொலைக்குதே.

பிரபாகர் said...

சொல்லவந்ததை தெளிவாய் சொல்லி கடைசி பத்தியில் கலக்கியிருக்கிறீர்கள், தமிழ்மணம் ஸ்டார்!

வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

ரோஸ்விக் said...

நல்லா சொல்லீருக்கீங்க.

முந்தியெல்லாம் நாங்க பிரச்சனைய போர்வையா போத்திகிட்டு தூங்கினோம். ரொம்ப புழுக்கமா இருந்துச்சு. இப்போ... பிரச்சனைய மெத்தையா விரிச்சு வச்சு தூங்குறோம். இதுவும் சுகமாத்தான் இருக்குதுப்பூ... :-)

Romeoboy said...

தலைவரே செம சூப்பர் பதிவு. நட்சத்திர பதிவர் ஆனாலும் ஆனிங்க ஒவ்வொரு தலைப்பு வித்தியாசமா இருக்கு ..

கலகலப்ரியா said...

ithu appala padichukkaren.. :(..

ஆ.ஞானசேகரன் said...

//முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...//

ஆமாங்க...

"உழவன்" "Uzhavan" said...

நல்ல சிந்தனையுள்ள கருத்துகள்

வால்பையன் said...

பிரச்சனையா!?

அப்படினா என்ன?

வால்பையன் said...

//நான் ஒருத்தி தான் இந்த உலகத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பது போல மனசுக்குள்ள ஒரு புலம்பல்//

ஈரோட்டுக்கு வரும்போது சொல்லியிருக்கலாம்ல, ஒரு கிலோ நிம்மதி வாங்கி கொடுத்திருப்பேன்ல!

வால்பையன் said...

//சிலநேரத்துல வேலிமேல இருக்கறத எடுத்து வேட்டிக்குள்ள விட்டுக்கற கதையெல்லாம் இருக்கு...//

நீங்க வேட்டியெல்லாம் கட்டுவிங்களா!? தல

வால்பையன் said...

// கும்க்கி said...
good one.
But there is lot of prob to face some problems....//


ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தால் அப்படி தான் ஆகுமாம்!

வால்பையன் said...

//ரோஸ்விக் said...

நல்லா சொல்லீருக்கீங்க.

முந்தியெல்லாம் நாங்க பிரச்சனைய போர்வையா போத்திகிட்டு தூங்கினோம். ரொம்ப புழுக்கமா இருந்துச்சு. இப்போ... பிரச்சனைய மெத்தையா விரிச்சு வச்சு தூங்குறோம். இதுவும் சுகமாத்தான் இருக்குதுப்பூ... :-)//

அட, நம்ம கூட சேர்ந்த ஆளு!

MJV said...

விரல்களின் ஊடாக உலகம் மற்றும் முனை உள்ள நூல் கண்டு, அற்புதமாய் வந்திருக்கு கதிர் உங்கள் கருத்துக்கள் எந்தவித இடர்ப்பாடுகளும் இன்றி.

கும்மாச்சி said...

பிரச்சனை இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா. பிரச்சனை காலைக் கடன் கழிப்பதிலிருந்து ஆரம்பம். வருமா, குழாயில் தண்ணி வருமா?, வரும் ஆனா வராதா?. எத்தனைக் கேள்விகள்?, எங்கே விடைகள்?